சிவமே பரம்
.சிவமே பரம் என நின்ற ஸ்ரீ ஹரதத்தர் கைலைக்காக்ஷி பேறு பெற்ற நாள்.சோழ வளநாட்டில் காவிரியாற்றின் வடகரையில் உள்ள திருத்தலம் கஞ்சனூர். இத்தலத்தில் விஷ்ணுவின் இருபத்திஐந்தாம் அவதாரமாக அவதரித்தவர் ஸ்ரீ ஹரதத்தாச்சாரியர்.
அத்தலத்தில் காஸ்யப கோத்திரத்தில் வந்த வாசுதேவர் என்ற வைணவ பிராமணர், மஹாவிஷ்ணு மீது மிகுந்த பக்தி கொண்டவர்.அவர் மகாவிஷ்ணுவே தமக்கு புத்திரனாக பிறக்கவேண்டும் என்று தவம் செய்தார்.பரமேஸ்வரன் ஆக்ஞைப்படி, திருமால் சுதர்ஸன அவதார சொருபமாக வாசுதேவருக்கு புத்திரராக அவதரித்தார்.குழந்தைக்கு பெற்றோர்கள் "சுதர்ஸனன் "என்றுபெயரிட்டார்கள்.சுதர்ஸனன் வைணவகுலத்தில்பிறந்தாலும்இயற்க்கையாகவே சிவபக்தி மிகுந்தவராகவிளங்கினார்.கஞ்சனூரில்உள்ளசிவாலயம்
சென்று நாள்தோறும் விபூதி தரித்து ஸ்ரீ அக்னீ ஸ்வரப் பெருமானைவழிபடும்நியதிகொண்டவராகவிளங்குனார்.சுதர்சனின்இச்செயல்கள்அவர்கள்பெற்றோர்களுக்கு கவலை அளித்தது. ஒரு முறை சுதர்ஸனர் இல்லத்தில் சிவக்கோலத்தில் இருப்பதைக் கண்ட, தந்தை வாசுதேவர் வெகுண்டெழுந்து தன் மனைவியைப் பார்த்து, இவன் குலத்துரோகி, நம் சமயத்திற்க்கு விரோதி. இவனுக்கு உணவு இடாதே என்று வீட்டை விட்டு வெளியே துரத்தினர்.
சுதர்ஸனர் நேராக கஞ்சனூர் சிவாலயம் சென்று, அங்கு
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சந்நிதியில் தியானத்தில் அமர்ந்தார்.
அப்பொழுது ஹே மகாப்பிரபோ, இச்சிறியவன் தங்களை சரணடைந்தேன்.என்னுடைய சரீரத்தை பெற்றெடுத்த தாய் தந்தையரை விட்டுவந்தேன், உலகத்திற்க்கு அம்மையப் பராகிய தாங்களே எம் பிதா மதா. என்று மனம்முருகி வேண்டினார்.
குழந்தையாகிய சுதர்ஸனின் வேண்டுதலுக்கு மனமிறங்கி இறைவன் ரிஷபாரூடராய் காட்சி அளித்து குழந்தையின் கண்களுக்கு தம்மை தரிசிக்கவல்ல சக்தியையும் கொடுத்தார்.அப்பொழுது அக்குழந்தை நமஸ்கரித்து கண்ணீர்மல்க நிற்க,குழந்தாய் உனக்கு சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் அருள் செய்கிறோம்.நீ உலகத்தில் உம் பிறவி நோக்கமாகிய "சைவ ஸ்தாபனம் " செய்து சிவஞானம் போதித்து சில காலம் கீர்த்தியோடு வாழ்ந்து வருவாய்என்று அருள்செய்தார்.மேலும் குழந்தாய் உம் உடல், பொருள், ஆவி மூன்றையும்எமக்குதத்தம்செய்துகொடுப்பாய்என்றுஇறைவன் கேட்க,சுதர்ஸனனான சிவகுழந்தை உடனே தயங்காமல் தனது ஆவியையும், உடலையும், உடமையையும் தத்தம் செய்து கொடுத்தார்."மகனே! நீ ஹரனான எனக்கு உடல் பொருள் ஆவியைத் தத்தம் செய்து கொடுத்ததால் உனக்கு "ஹரதத்தன்" "என்ற தீக்ஷா நாமம் தந்தோம் என்று அருளிச் செய்து, தமது திருக்கரங்களால் வீபூதியிட்டு, பஞ்சாக்ஷர உபதேசம் செய்து ஸ்படிக லிங்கம் அளித்து சிவபூஜா விதிமுறைகளை தாமே உபதேசித்து அருள்செய்தார்.
"ஹரதத்தர் " என்றால் தன்னை ஹரனுக்கு தத்தம் செய்து கொடுத்தவர் என்று பொருள் ஆகும்.
ஸ்ரீ ஹரதத்தர் சிவக்கோலத்தோடு தம் தாயாரை காணச் சென்றார்.அப்பொழுது தந்தை வாசுதேவர் இவரின் சிவக்கோலத்தைக்கண்டு, கோபாவேசமுற்றார்.நீ சிவச்சின்னம் தரித்துக்கொண்டதால், கையில் சிவலிங்கம் ஏந்தியால் வைணவ துரோகியாகிவிட்டாய் என்று ஏசினார்.
அப்பொழுது ஸ்ரீ ஹரதத்தர் தந்தையைப் பார்த்து, விபூதி, சிவலிங்க பூஜை செய்வது வைணவத் துரோகமா?
திருவீழிமிழலையில் மஹாவிஷ்ணுவே விபூதி ருத்திராக்ஷம் அணிந்து, சிவலிங்க பூஜை செய்து, தனது கண்ணைத் தாமரை மலராகக் கருதி அர்ச்சித்து வழிபட்டது உமக்கு தெரியாதோ ?அவ்வாறாகையில் விஷ்ணு வைணவ துரோகியா? என்றார்.இதைக்கேட்ட தந்தை வாசுதேவர் திடுக்கிட்டார்.இப்படி ஹரதத்தருக்கும் வாசுதேவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது.அந்நிலையில் தந்தையார் உள்ளிட்ட வைணவர்கள், சிறுவனே வாயால் வெறுமனே "சிவமே பரம் " என்றால் நாங்கள் ஏற்கமாட்டோம். பழுக்க காய்ச்சிய மழு முக்காலியில் அமர்ந்து கையை உயர்த்தி மூன்று முறை சத்தியம் கூறினால் நம்புவோம் என்றார்கள்.ஸ்ரீ ஹரதத்தர் இதற்க்கு உடன்பட்டார்.கஞ்சனூர் வரதராஜப் பெருமாள் சன்னிதி முன்தீவளர்க்கப்பட்டது.தீக்குழிஉண்டாக்கி இரும்புமுக்காலிஇட்டுதீயில்பழுக்ககாய்ச்சினார்கள்.
ஸ்ரீ ஹரதத்தர் சிவசிந்தனை கொண்டவராக பெருமாள் சன்னிதி முன்பு வந்தார்.பெருமாளே, நீர் சக்கரம் பெறுவதற்க்காகக் கண்மலரிட்டுச் சிவனை வழிபட்டதாலும்,
இராமாவதாரத்தில் ராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாலும்,
கிருஷ்ணாவதாரத்தில் உபமன்னிய முனிவரிடம் சிவதீக்ஷை பெற்று சிவபூஜை செய்ததாலும் நீரும் ஒரு சிவபக்தராவீர். ஆகவே உம்மை வணங்குகிறேன்.
நான்கு வேதங்களும், புராணங்களுக்கும் சிவமே பரம்பொருள் என்பது உடன்பாடானால் இந்த நெருப்புக்குழி பொய்கை போன்று குளிரட்டும்.இந்த பழுக்ககாய்ச்சிய மழு முக்காலி தாமரை மலர்போல் குளிரட்டும் "-என்று பிரார்த்தனைசெய்து கொண்டு,திக்குழியில் இறங்கி மழுமுக்காலியில் அமர்ந்தார் .இரண்டு கைகளையும் உயர்த்திச்,சிவனே பரம்,சிவமே பரம்பொருள்,என்று கூறிச், சிவபரத்துவ ஸ்லோகங்களையும், இருபத்திரண்டுகாரணங்கள் அடங்கிய பஞ்சரத்ன ஸ்லோகங் களையும் பாடி அருளினார். தேவர்கள் கற்பக மலர் மாரி பொழிந்தார்கள். எங்கும் "ஹர ஹர மஹாதேவா "என்று முழக்கமிட்டார்கள்.இவ்வாறு சிவபரத்துவத்தை நிலைநாட்டிய புண்ணியர் ஸ்ரீஹரதத்தாச்சாரியர்.
சுவாமிகள் செய்த நூல்கள்.:
1)சிவபரத்துவ ஸ்லோகங்கள்.இந்நூல் ஆறு ஸ்லோகங்களால் ஆனது. ஹரதத்தர்மழுமுக்காலில்அமர்ந்துசிவனேபரம்பொரும் என்பதை நிலைநாட்டும் போது முதற்கண் இயற்றியது.
2)சுலோக பஞ்சகம். இந்நூல் ஐந்து ஸ்லோகங்களால் ஆனது .எனவே பஞ்சரத்ன ஸ்லோகம் என்று அழைப்பார்கள். இந்நூலில் சிவமே பரம் என்பதற்க்கு 22காரணங்களை அருளியுள்ளார். ஸ்ரீ ஹரதத்தர் செய்த இந்த வடமொழி நூலை, திருவாவடுதுறை ஆதின ஸ்ரீ மாதவ சிவஞான சுவாமிகள் தமிழில் மொழிபெயர்த்து பாடியுள்ளார்.
3)தச ஸ்லோகி :இந்நூல் சிவபெருமைகளை கூறும் பத்து ஸ்லோகங்களால் ஆனது.
4)ஹரிஹர தாரதம்மியம் :இந்நூல் 108ஸ்லோகங்களால் ஆனது.ஹரிக்கும் ஹரனுக்கும் உள்ள தாரதம்மியத்தை எடுத்து கூறியுள்ளார் இந்நூலில்.
5)சுருதி சூக்த மாலை:ஸ்ரீ ஹரதத்தரால் வடமொழியில் செய்யப்பட்ட இந்நூலுக்கு சதுர்வேத தாற்பரிய சங்கிரகம் என்ற மறுபெயரும் உண்டு.இந்நூலுக்கு ஹரதத்தரின் சீடரான சிவலிங்க பூபதியால் வடமொழியில் விளக்கவுரை செய்யப் பட்டிருக்கின்றது.திருவாவடுதுறை ஆதின மகாவித்வான் சபாபதி நாவலர் இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இவ்வாறு சிவமே பரம் என்று அருளி சைவசமய ஸ்தாபனஞ் செய்தருளிய ஸ்ரீ ஹரதத்தர் தைமாதம் சுக்ல பஞ்சமி அன்று கைலாயம் சென்று இறைவன் திருவடியை அடையும் பேறு பெற்றார்.
சிவமே பரம் என்று உயிர் மூச்சாக வாழ்ந்து அருள்புரிந்தவர் ஸ்ரீ ஹரதத்தர் பெருமான்.
அவர் திருவடிகளை இந்நாளில் நினைந்து வணங்கி புண்ணியம் பெருவோம்.சிவ சிவ
சிவார்ப்பணம்.ஹரதத்தர்
No comments:
Post a Comment