Friday, January 27, 2023

சதுர கிரி மலை - மனிதர்கள் அறியாத இரகசியங்கள்

சதுர கிரி மலை - மனிதர்கள் அறியாத இரகசியங்கள்
சதுரகிரி மலை - சித்தவித்தை - சித்தர்கள் உள்ள தொடர்பு           
                                   
சதுரகிரி என்ற மலையில் பல யுகங்களுக் கு முன்னர் அதாவது இராமாயணம் கால கட்டத்திற்கு முன்பாக அகத்தியர், கோரக்க ர், சட்டைமுனி நாதர் இந்த மூன்று சித்தர்க ளும் ஒன்றாக இணைந்து சதுரிகிரி மலையின் வெவ்வேறு பகுதிகளில் கடும் தவத்தை மேற்கொண்டிருந்தார்கள்.  
     
அவர்கள் தவமிருந்த இடம்தான் இன்று இன்னும் சொல்லப்போனால் சட்டைமுனி நாதர் கடும் தவமிருந்த இடம்தான் இரட்டை லிங்கமாகவும், அகத்தியர் கடும் தவமிருந்த இடம்தான் நாவல் ஊற்றாகாவு ம், கோரக்கர்கடும் தவமிருந்த இடம்தான் தவசி பாறையாகவும் காட்சி கொடுத்து வருகிறது. இந்த மூன்று இடங்களுக்கு ஓர் ஒற்றுமை உள்ளதப்பா. 
  
அது என்னவென்று கேட்டால், இரட்டை லிங்கம் என்பது மனிதனின் இரண்டு கண்களை குறிக்கும் இடமாக வைத்துக் கொள்ளலாம். அல்லது மனிதனின் விந்துவை வாசி என்கின்ற கண்ணிற்கும், வாசி என்கின்ற கண்ணிலிருந்து பிரம்ம ரந்திரம் என்கின்ற கண்ணிற்கும் எடுத்து செல்லும் இரகசியம்தான் இரட்டை லிங்க மாகும். இன்னும் சொல்லப்போனால் ஜீவசமாதியின் இரகசியம்தான் இரட்டை லிங்கமாகும்.  

அதில் ஒன்று ஜீவன் என்றும், மற்றொன்று பிரம்ம ரந்திரம் என்றும் வைத்துக் கொள் ளலாம். ஜீவனை பிரம்ம ரந்திரத்துக்குள் செலுத்துவதுதான் இரட்டை லிங்கத்தின் மகிமையாகும். எனவே சித்த வித்தை வித்யாதிரிகள் என்று சொல்பவர்கள் இரட்டைலிங்கம் முன் அமர்ந்து ஓம்கார மௌனம் தவத்தை ஒரு மண்டலம் அல்ல து இரண்டு மண்டலம் அல்லது பல வருட ங்கள் கடைபிடித்து வந்தால் சட்டைமுனி நாதரின் அருளால் அவனுக்கு ஜீவசமாதி நிலை கொடுக்கப்படும் என்பது சட்டை முனி நாதரின் சத்தியவாக்காகும்.  
 
அகத்தியரின் தவபீடமான நாவல் ஊற்று என்கின்ற நாவல் கிணறு என்பது விந்து வை மணியாக மாற்றும் இடமாகும். நா என்ற அட்சரம் நாதத்தைக் குறிக்கும். வ என்ற அட்சரம் விந்துவை குறிக்கும். ல் என்றால் நாதத்தை விந்துவாக மாற்றும் அட்சரத்தைக் குறிக்கும்.

கி என்றால் விந்துவை ரசத்துடன் இணை த்து ண என்கின்ற சகஸ்ர லிங்கத்தில் மணியாக மாற்றி, று என்கின்ற பிரம்ம ரந்திரத்தின் ரசமணி கதவை திறந்து, அந்த விந்தானது, பிரம்ம ரந்திரத்திற்குள் ரசமணியாக மாறும் இரகசியம்தான் நாவல் கிணறு என்கின்ற இடத்தின் அட்சர ரகசியமாகும். 

எனவே அந்த இடத்தில் ஒருவன் தொடர்ந் து அமர்ந்து அகத்தியரை மானசீக குருவா க பாவித்து என்னுடைய விந்துவை பிரம்ம ரந்திரத்தில் ரசமாகமாற்றிவிடுங்கள் என்று தொடர்ந்து ஒரு மண்டலமாவது தவம் செய்தால்அவனுடைய விந்தானது ரசமணியாக மாறிவிடும். இதுவும் ஜீவச மாதி நிலையை கொடுக்கக்கூடிய ஒரு நிலைதான் என்றாலும் அதன்பிறகு அகத்தியர் அவனுக்கு வழி காட்டுவார்.  

தவசிப் பாறை என்பதில் த என்பது விந்து, வ என்பது ரசம். விந்துவையும் ரசத்தையும் இணைத்து சி என்கின்ற ஜீவனின் விந்து கதவைத் திறந்து, அதனைமுப்புவாக  மாற்றி ப் என்கின்ற ஜீவனின் துருசு கதவைத் திறந்து, அதை முப்பு முடிக்கும் துருசுவாக மாற்றி, பா என்கின்ற சகஸ்ர லிங்கத்தின் நாதம் கதவு திறந்து, துருசு வாகிய விந்துவை அதனுடன் இணைத்து நாதமணியாக்கி, றைஎன்கின்ற பிரம்ம ரந்திரத்தின் நாதமணி கதவு திறந்து பரிபூரண யோக தன்மைக்கு கொண்டு செல்வதே தவசிப்பாறை என்கின்ற இடத்தின் அட்சர ரகசியமாகும்.

 எனவே ஒருவன் சித்தர் மார்க்கத்தில்  சித்தராகவும் மாறலாம். மேலும்சித்தர் நிலை கடந்து யோகி நிலையையும் அடையலாம் என்பது சதுரகிரிமலையின் இரகசியமாகும். 

ஆயினும் இந்த மலை பகுதியில் இந்த மூன்று இடங்கள்தான் சித்த வித்தை குறிக்கும் இடங்கள் என்று குறிப்பிட்டுள் ளோம். ஆனாலும் இந்த மலையில் பல இடங்கள் அட்சர உபதேசம் இடங்களாக உள்ளது. 

இன்னும் சொல்லப்போனால் இறைவன் மார்கத்தில் அல்லது சித்தர் மார்கத்தில் இன்னும் பல மார்க்கத்தில் செல்ல எண்ணுபவர்களுக்கு பல இடங்கள் இந்த மலையில் உள்ளது.

சதுரகிரி மலைபயணத்தின்போது சித்தன் அருள்கிடைக்க கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள்

1-மாவூத்து குளத்தில் நீராடி அங்குஉள்ள உதயகிரிநாதரை வணங்கவேண்டும்.

2-குடும்பபந்தத்தில்உள்ளவர்கள் கட்டாயம் காவிஅணியக்கூடாது.

3-ஆணகள் மேல்சட்டை அணிவதை தவிர் க்கவேண்டும்.முடிந்தால் செருப்பு அணிவ தை அனைவரும் தவிர்க்கவேணடும்.

4-மலைபயணத்திக்கு ஐந்து நாட்குக்கு முன்மாமிசம் உண்பதை கட்டாயம் தவிர்கவேண்டும்.

5.இரவு அபிசேகம் பார்த்து மனம்குளிர மூன்று மூர்த்திகளையும் தரிசனம் செய்து, மீண்டும் அதிகாலை மூன்று மூர்திகளை யும் தரிசனம்செய்துவிட்டு, மாவூத்து குளத்தில் மீண்டும் குளித்து உதயகிரிநாதர், 

நந்தி,ஆஞ்சநேயர்,சப்தகன்னிகள், அருகில் உள்ள சடாதாரி அம்மணையும் தரிசனம் செய்துவிட்டு, சித்தன் அருள் கிடைத்த சித்ததெளிவோடு இன்பச் சிந்தனையோடு, இனிதே நம்  இல்லம் திரும்புவோம். 

ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்🙏🙏

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...