Thursday, March 16, 2023

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியகுளம் என்னும் ஊரில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

🌻தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
இந்த கோயில் எங்கு உள்ளது?

🌻கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியகுளம் என்னும் ஊரில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

🌻கோயம்புத்தூரில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் புலியகுளம் என்னும் ஊர் உள்ளது. புலியகுளத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

🌻இக்கோயில் மூலவரான அன்னை மாரியம்மன் பின்னிரு கரங்களில் நாகம் மற்றும் உடுக்கை ஏந்தியும், முன்னிரு கரங்களில் சூலம் மற்றும் அட்சய பாத்திரத்தை தாங்கியும் நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறாள். இவளை வழிபடுவோரின் வாழ்வில் இன்னல்கள் எல்லாம் தீரும் என்பது நிச்சயம்.

🌻இவ்வூர் மக்கள் பண்டிகை, நோன்பு காலங்களில் மிளகாய் அரைக்க மாட்டார்கள் மற்றும் உணவில் உப்பு சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்பது சிறப்புக்குரியதாகும்.

🌻பழனி முருகனைப் போன்றே தண்டத்தை தாங்கி நின்ற கோலத்தில் மேற்கு நோக்கிய சன்னதியில் இத்தல முருகன் அருள்பாலிக்கிறார்.

வேறென்ன சிறப்பு?

🌻இத்தலத்தில் ஏழரை அடி உயரம் கொண்ட லோக நாயக சனீஸ்வரர் பின்னிரு கைகளில் அம்பும், வில்லும் இருக்க... முன்னிரு கைகளில் கத்தியும், அபயஹஸ்தமும் கொண்டு நின்ற கோலத்தில் எழிலாக அருள்புரிகிறார். இவர் எதிரே அவரது வாகனமாகிய காகம் உள்ளது.

🌻இங்குள்ள துர்க்கை அம்மன், மாகாளியம்மன் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.

🌻முன்மண்டப நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகர்கள் சிறப்பாக காவல் புரிகின்றனர்.

🌻நவகிரகம், தேவேந்திரன், முருகன், மாகாளியம்மன், நவநாகர், விநாயகர் ஆகியோர் இத்தலத்தில் தனிச்சன்னதியில் காட்சி தருகின்றனர்.

🌻நவநாகர் சன்னதியில் ஆதிசேஷன் நடுநாயகமாக வீற்றிருக்க, அவரை சுற்றி வாசுகி, அனந்தன், குளிகன், கார்க்கோடகன், தக்கன், பதுமன், சங்கன் மற்றும் பாலன் ஆகிய அஷ்ட நாகங்கள் அருள்புரிகின்றனர்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

🌻இக்கோயிலில் மாரியம்மனுக்கு பங்குனி மாதம் நடைபெறும் உற்சவமே பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

🌻கந்தசஷ்டி, ஆடி கடைசி வெள்ளி, சனிப்பெயர்ச்சி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

🌻குழந்தை பாக்கியம் வேண்டுவோர் ஆறு நாட்கள் நோன்பிருந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

🌻நாகதோஷம் உள்ளவர்கள் நவநாகர் சன்னதியில் பரிகார பூஜை செய்து பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

🌻இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் அம்மனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...