7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர்...!
அறிவியலை கடந்த அதிசயம்
நம் முன்னோர்களால் கட்டப்பட்டுள்ள பெரும்பாலான கோவில்களில் நம் அறிவிற்கு புலப்படாத ஏதோ ஒரு ஆச்சர்யம் இருந்துகொண்டே தான் இருக்கிறது.
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் ஆராய்ச்சியாளர்களே குழம்பும் வகையில் விசித்திரமான ஒரு நந்தி சிலை உள்ளது..
கர்நாடக மாநிலம், மல்லேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது “தட்சிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோவில்”. கிட்டதட்ட 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபுள்ள இந்த கோவிலில் உள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து எப்போதும் நீர் ஊற்றிக்கொண்டே இருக்கிறது.
பொதுவாக எல்லா கோவில்களிலும் நந்தி தேவரின் சிலை சிவ லிங்கத்திற்கு எதிராக இருக்கும். ஆனால் இந்த கோவிலில் நந்தி தேவரின் சிலை சிவனின் தலைக்கு மேல் அமைக்கப்ட்டுள்ளது.
நந்தியின் வாயில் இருந்து ஊற்றும் தண்ணீர் எப்போதும் சிவ லிங்கத்தின் மீது படும்படி மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
நந்தியின் வாயில் இருந்து ஊற்றும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை.
இந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாவதும், இதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். சிவபெருமானை அபிஷேகித்த பிறகு இந்த தீர்த்தம் எதிரில் உள்ள கோவில் குளத்தில் கலக்கிறது.
No comments:
Post a Comment