Thursday, June 15, 2023

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் தலமான#ஈச்சனாரி#விநாயகர்

#கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற விநாயகர் தலமான
#ஈச்சனாரி
#விநாயகர்
(#விக்னேஸ்வர்)
திருக்கோயில் வரலாறு:
உலகில் முழுமுதற்கடவுளாகப் போற்றப்படுபவர் விநாயகப் பெருமான் ஆவார். வேத முதல்வன் விக்கினங்களை களைந்தவன், ஞானப்பிழம்பானவன், வக்ரதுண்டன், பிள்ளையார், கணபதி என்றெல்லாம் பக்தர்களால் போற்றப்படுகிறார். இத்தகைய சிறப்புமிக்க விநாயகப் பெருமான் எழுந்தருளி அருள்புரியும் திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்று விளங்குவது ஈச்சனாரி திருத்தலமாகும். 

கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 9வது கிலோ மீட்டரில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு விநாயகப்பெருமான் எழுத்தருளிய வரலாறு மிகவும் அதிசயமான ஒன்றாகும்.

மூலவர்: விநாயகர் (விக்னேஸ்வரர்)
தல விருட்சம்: அரச மரம்
ஊர்: ஈச்சனாரி
மாவட்டம்: கோயமுத்தூர்
மாநிலம்: தமிழ்நாடு 

5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட இக்கோயிலின் பிள்ளையார் சிலை பேரூர் பட்டீசுவரர் கோயிலில் வைப்பதற்காக மதுரையிலிருந்து வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது இவ்விடத்தில் வண்டியின் அச்சு முறிந்து போனதாகவும், சிலையையும் அங்கிருந்து நகர்த்த முடியவில்லை என்பதாலும், அதே இடத்தில் அத்திருவுருவத்திற்கு கோயில் அமைக்கப்பட்டதாக, மரபு வரலாறு கூறுகிறது.

காஞ்சி சங்கர மடாதிபதியான சங்கராச்சாரியாரின் அருள்வாக்கு படி இந்த விநாயகர் விக்ரகம் இங்கேயே பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அக்கோயிலே தற்போதிருக்கும் ஈச்சனாரி விநாயகர் கோயிலாக இருக்கிறது.

சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருக்கிறது ஈச்சனாரி விநாயகர் கோயில்.
மேலைச்சிதம்பரம் எனப் போற்றப்படும் பேரூர் அருள்மிகு பட்டீஸ்சுவரசுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 6அடி உயரமும், 3அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து மாட்டுவண்டியில் எடுத்து வரும் வழியில் தற்பொழுது எழுந்தருளியுள்ள இடத்தில் மாட்டுவண்டியின் அச்சு ஒடிந்ததால் விநாயகப்பெருமான் விக்ரகத்தை கீழே இறக்கி வைத்து விட்டு வண்டியின் அச்சு சரிசெய்த பிறகு விக்ரகத்தை பேரூருக்கு எடுத்து செல்ல எவ்வளவோ முயன்றும் ஏற்ற முடியாமல் போனது. எனவே அப்பகுதி மக்கள் சிறிய மேடை அமைத்து விநாயகரை வழிப்பட்டு வந்தனர். இப்படி விநாயகப்பெருமான் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ்பெற்று விளங்குகிறது என்று கர்ணபரம்பரையாக (செவி வழிச்செய்தியாக) நிலவுகிறது.

#வண்டியின்_அச்சு முறிந்தது :

இந்த இடம் வந்தவுடன் வண்டியின் அச்சு முறிந்து சரிந்துவிட்டது. இந்த இடத்திலேயே விநாயகர் அமர்ந்து விட்டார். எவ்வளவு முயற்சி செய்தும் அகற்ற முடியவில்லை. பின்பு காஞ்சி சங்கராச்சார்யார் சுவாமிகளை அணுகிய பொழுது விநாயகரை இங்கேயே பிரதிஷ்டை செய்யுங்கள், என்று அருள்வாக்கு கூற, ஈச்சனாரி விக்னேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கலானார். இத்திருத்தலம் உருவாகி 475 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கடந்த 1990--ம் ஆண்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரம், மாடங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் அழகாக பிரதான சாலையில் காட்சியளிப்பது பக்தர்களிள் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே கோவில் வளாகம் கட்டப்பட்டு விருத்தி செய்யப்பட்ட பின்பு, கோவிலை இந்து அறநிலையத்துறை எடுத்து அரசின் பராமரிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

வரலாறு :

5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட இக்கோயிலின் பிள்ளையார் சிலை பேரூர் பட்டீசுவரர் கோயிலில் வைப்பதற்காக மதுரையிலிருந்து வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது இவ்விடத்தில் வண்டியின் அச்சு முறிந்து போனதாகவும், சிலையையும் அங்கிருந்து நகர்த்த முடியவில்லை என்பதாலும், அதே இடத்தில் அத்திருவுருவத்திற்கு கோயில் அமைக்கப்பட்டதாக, மரபு வரலாறு கூறுகிறது.

நினைத்ததை ஈடேற்றித் தருபவராக அருள்புரிகிறார் ஈச்சனாரி விநாயகர். வாகன பூஜைக்குப் பெயர் பெற்ற தலம் இது. புதிதாக வாகனம் வாங்கியவர்கள், சாவியை விநாயகரின் திருவடியில் வைத்து வணங்கி எடுத்துச் செல்கின்றனர்.

இந்தத் தலத்தில் 27 நட்சத்திரங்களுக்குமான `நட்சத்திர பூஜை’ வெகு பிரசித்தம். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் இங்கு வந்து வணங்கினால், வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழலாம் என்பது ஐதிகம்.

இங்கு தல விருட்சமாக அரசும் வேம்பும் உள்ளது. விநாயகரை வலம் வந்து இந்தத் தல மரங்களைச் சுற்றினால் திருமண வரம் கிட்டும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

#சிறப்புகள்

ஈச்சனாரி விநாயகர் ஆலயம் கோவை மாவட்டத்தின் புகழ் பெற்ற ஒரு கோயிலாக இருக்கிறது. அஸ்வினி முதல் ரேவதி வரை இருக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் 27 விதமான அலங்காரங்கள் செய்து மேற்கொள்ளும் நட்சத்திர அலங்கார பூஜை இக்கோயிலுக்கே உரிய ஒரு விஷேஷ அம்சமாக இருக்கிறது. இந்த திருக்கோயிலின் தினப்படி ஒரு நாளைய பூஜைக்கு தேவைப்படும் பால், சந்தனம், குங்குமம், மலர், பன்னீர் மற்றும் அன்றைய தினத்திற்கான மின் கட்டணத்திற்கான அத்தனை செலவுகளும் கட்டளைதாரர்கள் எனப்படும் பக்தர்களே ஏற்கின்றனர்.

தங்கள் வாழ்வில் மேற்கொள்ளும் எத்தகைய காரியங்களையும் தொடங்கும் முன்பு இந்த விநாயகரை வழிபட்டு தொடங்குவதால், அக்காரியங்கள் தடைகள், தாமதங்களின்றி வெற்றி பெறுவதாக இக்கோயிலுக்கு வந்து பலனடைந்த பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் தங்களின் குழந்தைகள் கல்வி, கலைகளில் உயர்ந்த நிலைகளை அடையவும், தொழில் மற்றும் வியாபாரங்களில் மிகுந்த லாபங்கள் உண்டாகவும், வேலைகளில் பதவி உயர்வு கிடைக்கவும் வேண்டும் பக்தர்களுக்கு அவர்களின் கோரிக்கைகள் நிறைவேறுவதாகவும் கூறுகினர் இங்கு வழக்கமாக வந்து வழிபடும் பக்தர்கள்.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் சிதறு தேங்காய் உடைத்தல், கொழுக்கட்டை படைத்தல், அருகம்புல் மாலை சாற்றுதல், பாலபிஷேகம் செய்தல் போன்றவற்றின் மூலம் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிகளுக்கான நன்கொடை அளிப்பது, கோயிலில் அன்னதானம் வழங்கல் ஆகியவற்றின் மூலமும் விநாயகருக்கு தங்களின் நன்றியை செலுத்துகின்றனர்.

#கோயில் அமைவிடம்

ஈச்சனாரி அருள்மிகு விநாயகர் கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஈச்சனாரி என்கிற ஊரில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு செல்ல கோவை நகரிலிருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளன.

#கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கிறது.

திருச்சிற்றம்பலம் 🙏
ஓம் விநாயகா 😊🙏

No comments:

Post a Comment

Followers

சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்...

🌹ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  🌹உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்  சுமார்  40-50 மில்லியன்  பக்தர்க ள...