*பழையாறை*
இன்றைக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பெற்ற இவ்வூர் சோழப்பேரரசர்கள் ஆட்சி செய்த 430 ஆண்டு காலம் தமிழக வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற பெருநகரமாக விளங்கியது. மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் காலம் வரை பழையாறை என்றழைக்கப்பட்ட இக்கோநகரம் இராஜேந்திர சோழன் காலம் முதல் ‘முடிகொண்ட சோழபுரம்‘ என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றது.
சுந்தர சோழன் காலத்தில் தஞ்சைக்கு தலைநகர் மாற்றப்படும் வரை பழையாறை சோழர்களுக்கு தலைநகராக விளங்கியது .
*இத்தலத்தில் அவதரித்த அமர் நீதி நாயனார் தனது செல்வங்கள் அனைத்தையும், தன்னையும் சேர்த்து துலாபாரத்தில் வைத்து ஈசனருள் பெற்ற தலம்.
*மணிமுடி சோழனின் மகளும், நின்ற சீர் நெடுமாறனின் (கூன்பாண்டியன்) மனைவியுமான, சைவம் வளர்த்த மங்கையர்கரசியார் தோன்றி வாழ்ந்தது இத்தலத்தில்தான்.
*ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் வளர்ந்தது இத்தலத்தில்தான்.
*இப் பழையாறை நான்கு சிறு பிரிவுகளாக இருந்தது 1. பழையாறை வடதளி:- தாராசுரத்திலிருந்து 5 கி. மீ. தொலைவு. அப்பர் பெருமான் உண்ணாவிரதம் இருந்த தலம்.
2. மேற்றளி,
3. கீழ்த்தளி,
4. தென்தளி.
இவ்வூருக்கு தெற்கில் முடிகொண்டான் ஆறும், வடக்கில் திருமலைராயன் ஆறும் ஓடுகின்றன. முடிகொண்டான் ஆறு முற்காலத்தில் பழையாறு எனப்பட்டதால் அதன் கரையிலுள்ள ஊர் பழையாறை எனப்பட்டது.
*இதில் இன்று நாம் காணப் போவது அ/மி சோமகமலாம்பிகை சமேத சோமநாத சுவாமி ஆலயம், கீழப்பழையாறை, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
*சோமநாத சுவாமி திருக்கோவில் சோழர் காலத்தில் கீழப்பழையாறையில் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
*இது 207வது தேவார வைப்புத்தலம்
*இக்கோயிலின் முகப்பில் பழமை மாறாத இடிபாடுற்ற ராஜகோபுரம் காணப்படுகிறது. *பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் மூன்று தளங்களைக் கொண்ட புதிய ராஜகோபுரம் காணப்படுகிறது. *இவ்விரண்டிற்கும் இடையில் வலப்புறம் அ/மி சோமகமலாம்பிகை சன்னதி உள்ளது. *அதற்கு அடுத்து மூன்று நிலை கோபுரம் வழியாக உள்ளே சென்றால் தேர் போன்ற அமைப்பினைக் கொண்ட கம்பீரமாக உயர்ந்த தளத்தில் மூலவர் சன்னதி காணப்படுகிறது.
*மூலவர் சன்னதி முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. *மண்டபத்தில் விநாயகர், இராவணன் கயிலை மலையைத் தூக்கும் நிலையில் சிவன் காணப்படுகின்றனர். *உள் மண்டபத்தில் சூரியன், சந்திரன், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், மங்கையர்க்கரசியார் சிற்பங்கள் காணப்படுகின்றன.
*கருவறையில் மூலவர் லிங்கத் திருமேனியாக உள்ளார்.
*அழகிய விமானத்துடன் கூடிய கருவறையைச் சுற்றி வரும்போது கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, உமையொருபாகர்,பிரம்மா, துர்க்கை காணப்படுகின்றனர்.
*திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், நவக்கிரக சன்னதிகள் காணப்படுகின்றன.
*அமைவிடம்: பட்டீச்சரம் - மருதநல்லூர் சாலையில் சென்று, கோயிலை அடையலாம்.(இக்கோயிலுடன் தொடர்புடைய கோயில்: "பாடல்பெற்ற", அப்பர் உண்ணா விரதம் மேற்கொண்டு சமணர்களிடமிருந்து மீட்ட, பழையாறை
வடதளி அ/மி தர்மபுரீஸ்வரர் கோயிலாகும்.)
🙏 சிவாயநம
No comments:
Post a Comment