Monday, June 12, 2023

கோளறு திருப்பதிகம் ஓர் விளக்கம்

கோளறு திருப்பதிகம்.
                      .....             திருஞானசம்பந்தர்.

என்பொடு கொம்பொ டாமை 
இவைமார்பி லங்க எருதேறி ஏழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொ டொன்றொ டேழு
பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்...

எலும்பு மண்டை ஓடு கொம்பு ஆமை முதலானவற்றை மார்பில் சூடி
எருது வாகனத்தில் பார்வதியோடு எழுந்தருளி...பொன் போன்று மின்னும் வெம்மையான ஊமத்தை பூவையும் குளிர் கங்கையை முடியில் சூடிய இறை , அடியார் உளமே புகுந்ததால்...நட்சத்திரங்கள் 
9 வது நட்சத்திரம்... ஆயில்யம்
9 உடன் 1 பத்து.... மகம்
ஒன்பதோடு ஏழு 16... விசாகம்.
18.... கேட்டை
6... திருவாதிரை 
இந்த நட்சத்திரங்களில் பயணம் மேற்கொள்வது உகந்தது அல்ல என்று அப்பர் பெருமான் ஞானசம்பந்தரின் பயணத்தை ஒத்தி வைக்க எண்ணி கூறியதை அன்பொடு மறுக்கும் முகமாக...
அந்த நட்சத்திர நாட்கள் எல்லாம் ... ஈசன் உமையாளோடு என் உள்ளம் புகுந்ததால்...அன்பானவை அவை நல்லனவே செய்யும் என உரைக்கிறார் ஞானசம்பந்தர் பெருமான்.

சிரசில்... 
மயக்கும் ஊமத்தை மாலையுடன்
தெளிந்த கங்கை தரித்து
மயக்கம் நீங்கிட தெளிவாகி
அருள்கிறான் இறை ஈசன். 

எலும்பு பன்றிக் கொம்பு ஆமை ஓட்டினை மார்பில் அணிந்து...
உமையாளை சிரத்தில் தாங்கி
எருதின் மேல் வந்தருளி
அடியார்களை காத்திடும் எம் ஈசன்

எலும்பு, கொம்பு, ஆமை ஓடு...
சீற்றத்தின் விளைவையும்
ஊமத்தை, கங்கை ...
தணிந்த தன்மையையும் 
முரண்பாடுகள் நிறைந்த உலகியலில்
ஒருங்கே கொண்டு...
தீயவர் சினம் பாதிக்காது  
அடியார்களுக்கு அருளும்
அன்பானவன் எம் ஈசன் . 
 
நாளும் கோளும் தீது விளைவிக்காது நல்லன அருளிட
அடியார்களை காத்திடுவன்...எம் ஈசன்.

ஓம்...
திருஞானசம்பந்தர் பெருமான்
பாதம் பணிந்து.

No comments:

Post a Comment

Followers

பெரியபாளையம் பவானிஅம்மன் திருவள்ளூர்.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அருகில் உள்ள  #திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள  புகழ்பெற்ற  சக்தி தலமான ஆரணி ஆற்றங்கரையில் அமைந்து...