Monday, June 5, 2023

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம்

கால பைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்து, அதை ஏழு யானைகள் மீது வைத்து, காலச்கரத்தை படைத்து அருளிய தலம்
அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்...!
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபட வேண்டிய தலம் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ரங்கநாதபுரம் திருவானேஷ்வர் திருக்கோயில்.

தல வரலாறு : 
கால பைரவர் பூரட்டாதி நட்சத்திர நாளில் ஏழு கிழமைகளைப் படைத்து, அதை ஏழு யானைகள் மீது வைத்து, காலச்கரத்தை படைத்து அருளிய தலம் இது என புராணங்கள் கூறுகிறது. 27 நட்சத்திரங்களில் 25வது நட்சத்திரமாக திகழ்வது பூரட்டாதி. 25ன் கூட்டு எண் ஏழு என்பது கஜ(யானை) கடாட்ச எண். கஜ கடாட்ச க்திகள் கொண்ட விமானத்தை கொண்டதே இத்தலம். 

இப்படிப்பட்ட விமானம் கொண்ட தலத்தில், முனிவர்களும், மகான்களும், ஆச்சாரியார்களும் எப்போதும் தவம் செய்வதாக ஐதீகம். 

எனவே ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது. 

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நல்ல மனம், சிறந்த புத்திகூர்மை கிடைத்து, பஞ்ச பாண்டவர்களில் சகாதேவனைப்போல் திகழ அடிக்கடியோ, பூரட்டாதி நட்சத்திர நாளிலோ இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. 

அத்துடன் அனைத்து நட்சத்திரக்காரர்களும், வாரத்தின் ஏழு நாட்களிலும் சந்திர ஹோரையில் வழிபட்டால் எதிர்பாராமல் ஏற்படும் துன்பங்கள் விலகும்.

ஏழு வண்ண ஆடைகளை இங்கு தானம் செய்தால், ஏழேழு ஜென்ம பாவங்கள், தங்களது சந்ததியினரை தொடராமல் விலகும் என்பது நம்பிக்கை.

தல சிறப்பு:
காஞ்சிப்பெரியவர் இத்தலத்தில் ஒரு வார காலம் தங்கி தியானம் செய்துள்ளார். இசையில் சிறந்து விளங்க ஏழு ஸ்வரங்களுடன் இங்கு பாடுவது சிறந்த பலனைத்தரும். கோச்செங்கண்ணன் கட்டிய 70 மாடக்கோயில்களில் இது முதலாவதாகும்.. 

கோயில் அமைப்பு: மூலவர் திருவானேஷ்வர் கிழக்கு நோக்கியும், காமாட்சி அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர்.

வலம்புரி விநாயகரும், சண்டிகேஸ்வரரும் புடைப்பு சிற்பமாக அருள்பாலிக்கின்றனர். பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்க்கை, பிரம்மா, நவக்கிரகம், நந்தி சன்னதிகள் உள்ளது. 

இருப்பிடம் :

திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப்பேட்டை செல்லும் வழியில் தெற்கே 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் உள்ளது.

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...