Monday, July 31, 2023

⚜ *திரு மாணிகுழி உதவி நாயகர் திருக்கோயில்* .

⚜  *திரு மாணிகுழி உதவி நாயகர் திருக்கோயில்* .   
 
🙏 *வழிபட்டவர்கள்*  :  வாமனன், துர்வாசர், குபேரன், பரா சக்தி,  லட்சுமி,  வைஷ்ணவி  வராகி   உள்ளிட்ட  சப்த மாதர்கள்.        
                                                                                                                                                                            திருமாணி குழி  கடலூருக்கு அருகே உள்ளது. மாணி என்றால் அந்தணச் சிறுவன் என்று பொருள்.     
                                                                                                                                                                       🔴 *மூவடி மண் தருக என்று -----  மாவலியை வஞ்சித்து*   (திரு மங்கை ஆழ்வார்) 
     
  என குள்ள வடிவம் (வாமனன்) கொண்ட அந்தணச் சிறுவனாக வந்து   *மண்  என்று  விண்ணையும்  அளந்து*  மகா பலியை ஏமாற்றி தானம் கொடுத்தவனுக்கு துரோகம் செய்த திருமால் கொன்றை மரத்தடியில் *லிங்கப் பரம்பொருளைப் பூஜித்து வழிபட்டுத் தொழுது கொடிய பாவமும் குற்றமும் நீங்கி நலம் அடைந்ததால்*   மாணி குடி என்றும் வாமன புரி என்றும் பெயர். 

மாணி குடி என்பது மாணி குழி என்று ஆயிற்று. *வாமனனுக்கு அருளிய ஈஸ்வரனுக்கு வாமனபுரீஸ்வரர், மாணிக்கு வரதர் என்று திரு நாமங்கள்* . 

சிவ பூஜை செய்து வழிபட்ட *துர்வாச முனிவருக்கு உதவி அருள் புரிந்ததால் உதவி நாயகர்*  என்று   திருநாமம்.     

 ⚜️  சிவ பரம்பொருள் எழுந்தருளி யுள்ள பல திருத் தலங்களையும் வழிபட்டு வந்த வணிகர் ஒருவர் திருமாணி குழிக்கு வரும்போது வழியில் வழிப் பறி வேடர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கினர். 

வணிகர் ஈசன் நாமம் ஓதித் துதித்துக் காத்தருளுமாறு வேண்டியபோது பரமன் வேடுவராகச் சென்று வணிகனுக்கு உதவி யருளி மறைந்தார். 

இதனாலும் மாணி குழி ஈசருக்கு உதவி நாயகர் என்று திருநாமம்.  

*உதவித் திரு மாணி குழி*  என்று தலப் பெயரையும் *உதவித் திருமாணி குழி ஆளுடையார்* ,  ஊர் செறி *உதவி நாயகர்*  என்று பரமன் திரு நாமத்தையும் கல்வெட்டுகள் கூறுகின்றன. 

திருவுருவைச் சித்திரமாக வரைந்து வழிபட்டுத் தொழுத குபேரனுக்கு சங்க நிதி பதும நிதி பற்றிய சந்தேகங்களை தீர்த்தருளியதால் பரா பரனுக்குக் *குபேர உத்தரர்*  என்று திருநாமம். 
  
🕉  *குபேரனொடு தோழமைக் கொள் பகவன்*   (சம்பந்தர்) 
           
🔯  *நெதியாளன் தோழனை மித்திர அச் சிரவணற்கு*                                                                       

☸️ *அளகைக் கோன் தன் சங்காத்தி*          (அப்பர்)
       
என பூஜையும் தவமும் செய்த குபேரனுக்குத் தோழனாக இருந்து அருளியதால் ஈசனுக்கு *குபேர மித்திரர்* என்று திரு நாமம்.       
🔴  *மூவடி மண் தருக என்று -----  மாவலியை வஞ்சித்து*    (திரு மங்கை ஆழ்வார்) 
     
  என மூன்றடி மண் வேண்டும் என்று கேட்டு வானத்தையும் மண் என்று அளந்ததாலும் ,
தானம் கொடுத்தவனை மிதித்துப் பாதாளத்தில் அழுத்தி மாபெரும் துரோகம் புரிந்ததாலும் *மகா விஷ்ணு தெய்வத் தன்மை இழந்து துன்பம் அடைந்து அல்லல் உற்றார்*. 
குறுமாணக் குடி ( கண்ணார் கோயில்)  முதலிய பல தலங்களில் சிவ பூஜை செய்து கடலூரை அடைந்தார்.    

🔥  *சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்*      (திருமந்திரம்)
      
என தீவினை நீக்கி தெய்வத் தன்மை அளித்து தேவனாக்கும் சிவ நாமத்தின் மகிமை உணர்ந்து மேனியில் திருநீறும் நாவில் சிவ நாமமும் நெஞ்சில் சிவ வடிவும் சிவ சிந்தனையுமாய் நாள் தோறும் நியமத்துடன் கொன்றை மலர்களால் கொன்றை மரத்தடியில் லிங்கப் பரம் பொருளை வழிபட்டுத் தொழுதார்.  *எல்லாப் பாவங்களையும் போக்கும் பாவ நாசப் பரமேசுவரன் திருமாலின்  பழியும் பாவமும் போக்கி யருளி மீண்டும் வைகுண்ட வாழ்வையும் தெய்வீகத்தையும் அருளினார்* . 
⚜️     *நித்த நியமத் தொழிலனாகி நெடுமால் குறளனாகி மிகவும்*
           *சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடமாம் -----உதவி மாணி குழியே* 
      
என நியமம் தவறாமல் நாள்தோறும் சிந்தை சிவ மயமாகத் திருமால் செய்த பூஜையையும் அவருக்கு அருள் புரிந்த உதவி நாயகரையும்  போற்றும் தெய்வ மழலை  *உதவி என்ற திரு நாமத்தைப்*  பதிகம் முழுவதும் காட்டுகிறார்.  

தல வரலாறு கூறும் சிற்பங்கள் சுவற்றில் உள்ளன.
            
 பக்க வாசலைக் கொண்டுள்ள கருவறையில் உள்ள மிக அழகிய *லிங்கப் பரம் பொருளை மகா விஷ்ணு எப்போதும் பூஜிக்கிறார்  என்பதால்* லிங்கப் பரம்பொருள் முன்  குபேர உத்தரர் திருவுருவம் வரையப்பட்டுள்ள திரை உள்ளது.  

தீபாராதனை நடக்கும்போது குபேர உத்தரருக்கு தீபாராதனை காட்டித் திரை விலக்கப்படுகிறது.

   இத் திருக் கோயிலில்  *சிவாலய மரபிற்கு ஏற்ப பள்ளியறை இல்லை* .                                       

⚜️  *கண் இன்றிக் காணும்  செவி இன்றிக்  கேட்டிடும்*  (திருமூலர்)     
                                                  
⚜️  *ஓய்விலாதன* ,     

*தாயான ஈசற்கே*    (திருவாசகம்)

  என   *உறக்கமும் விழிப்பும் இல்லாத*,  

*ஓய்வு இல்லாமல் சதா சர்வ காலமும்  ஐந்து தொழில் புரிகின்ற*, 

*அங்கம் இல்லாத நெருப்பு உரு லிங்கமான*,  

 *காம தகனராகிய*,   

*தானே இறைவியாய் அருள் பொழியும்  தாயுமான ஈஸ்வரன் அலயத்தில்  பள்ளியறை கட்டுவது பிற்காலப் புன்மை, சிவ நிந்தனை, சிவாலய அபச்சாரம்* .  

துர்வாசர்  உருவமும்  அவர் பிரதிஷ்டை செய்து  பூஜித்த லிங்கமும் பிரகாரத்தில் உள்ளன. 

சிவ பூஜை செய்யும் காட்சி சிற்பமாக உள்ளது.     
                                                           
         வாமனேஸ்வரரின்  பேரருளைப் பெற்ற வணிகர் உதவி நாயகருக்குக் கோயில் கட்டி மகிழ்ந்தார்.

  *தந்தை தாய் சேய் ஆகிய மூவுருவத்  தியாக ராஜர் சந்நிதி*  உள்ளது.

  நடராஜர் நேரே நுழை வாசலுடன் தனிச் சந்நிதியில் உள்ளார். 
    
🔥  *நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து*  (சம்பந்தர்) 
     
என தேடித் திரிந்து அலைந்து  கை கூப்பித் தொழுது நிற்கும் பிரம்ம விஷ்ணுக்களுக்கு  *லிங்கத்தின் நடுவே அடி முடி மறைத்துக் காட்சி அருளிய லிங்கோற்பவர்  அண்ணா மலையார்*  உள்ளார் . 

  பரா சக்தி பிரதிஷ்டை செய்து பூஜித்த லிங்கம் மண்டபத்துடன் கூடிய தனிச் சந்நிதியில் உள்ளது. 

*பரா சக்திக்கு அருளிய அருள்புரி லிங்கமும் நான்கு யுக லிங்கங்களும் உள்ளன* .  

பரா சக்தி,  லட்சுமி,   சப்த மாதர்கள்  உதவி நாயகரை   வழிபட்டு  நலம் அடைந்துள்ளனர். 

சப்த மாதர்கள் பிரகாரத்தில் உள்ளனர்.   

ஈசனுக்குச் சற்று பின்னால் அதே  திசையில் தனிச் சந்நிதியில்  பரா சக்தி  உள்ளாள். 

 *பெரும்பாலான கோயில்கள் போன்றே  இக்கோயிலிலும்  கற்பனைப் பெயருடன் உள்ள அம்பாள்  சந்நிதி  பிற்காலச் சந்நிதி* .  

யானை லட்சுமியும் சிவ மைந்தர் காவல் தெய்வ  பைரவரும்  தனிச் சந்நிதியில் உள்ளனர். 
         
திருக் கோயிலுக்கு  அருகே சிரீ காழி நாடு உடைய பிள்ளைத் திரு மடம் என்று திருஞான சம்பந்தர் திருமடம் இருந்ததைக் கல்வெட்டு கூறுகின்றது. 

 சிவப்பிரியா

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...