Friday, July 28, 2023

விநாயகர் வழிபாடும் - சனி தோஷமும்...!

விநாயகர் வழிபாடும் - சனி தோஷமும்...!
ஜாதகத்தில் சனி தோஷம் கொண்டு துன்பங்கள் அனுபவிப்பார்கள் “விநாயகரை” வழிபட்டால் போதும், வேறு எதுவும் செய்யத் தேவையில்லை. 

இதனை விளக்கும் புராண கதை ஒன்றை காணலாம். ஒரு தடவை ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் நிஷ்டையில் இருந்து, விநாயகர் தன்னைப் பிடிப்பதற்காகச் சனி பகவான் வருவதை அறிந்து கொண்டார். அவன் வந்ததும் ஒரு ஓலைச் சுவடியை நீட்டினார். “அதில் இன்று போய் நாளை வா” என்றிருந்தது. 

பின்னர் விநாயகப் பெருமான் அதை அரசமரத்தடியில் வைத்தார். பின்பு சனி பகவானிடம் “சனீஸ்வரா எந்த நாளும் இந்த அரசமரத்திற்கு வருக. இந்த ஓலைச் சுவடியில் என்ன எழுதி இருக்கிறதோ அதன்படி நடப்பாயாக!” என்று சபித்து விட்டு மறைந்து விட்டார். 

அதன் பிரகாரம் சனீஸ்வர பகவான் தினமும் அந்த அரச மரத்தடிக்குச் சென்று அதில் உள்ள வாசகத்தைப் படித்து ஏமாந்தபடி திரும்புவது வழக்கமானது. 

இப்படி பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஏமாந்துபோன சனிபகவான், விநாயகரைப் பிடிப்பது என்பது முடியாத காரியம் என்றுணர்ந்து அவரை துதித்து வழிபடத் தொடங்கினார். 

விநாயகரும், அவர் முன்தோன்றி “சனீஸ்வரா, காரணமின்றி யாரையும் உன் சக்தியைப் பயன்படுத்தித் தவறாக நடக்கக்கூடாது. இதற்கு உன் அனுபவம் ஒரு படிப்பினையாகட்டும். இன்று முதல் என்னை வணங்கும் பக்தர்களையும் நீ பிடித்து துன்புறுத்தக் கூடாது” என்று கூறி அவருக்கு ஆசி அளித்து மறைந்தார்.

இதன்படியே இன்றும் சனி தோஷம் உள்ளவர்கள் விநாயகரை அவருக்கு உகந்த நாட்களான சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி இன்னும் பிற நாள்களிலும் வணங்கி வர சனிதோஷத்தில் இருந்து முற்றிலும் விடுபடுகிறார்கள்.

சனி பிடிக்காதது மட்டுமல்ல, சனியின் கெடுபலன் களையும் குறைத்து அருள்புரிகிறார் விநா யகர், நவக்கிரக கோட்டையில், அதுவும் சனி பகவான் எதிரில் அமர்ந்து கொண்டு.

நவக்கிரக கோட்டையில் ஸ்ரீ நவசக்தி சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்கள் எல்லாம் தனித்தனி சந்நிதிகளில் விநாயகர் எழுந்தருளியிருக்கும் 
ஒரே வளாகத்தில் அமைந்துள்ளனர். 

வேலூரில் இருந்து 36 கி.மீ. தொலைவில் உள்ளது பொன்னை. பொன்னையில் இருந்து 3 கி.மீட்டரில் உள்ளது நவக்கிரகக் கோட்டை. வேலூரிலிருந்து பொன்னைக்கு பேருந்து வசதி உண்டு. பொன்னையில் இருந்து மினி பஸ் மற்றும் ஆட்டோ மூலம் நவக்கிரகக் கோட்டையை அடையலாம்.

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...