🔔 கோவிலில் மணி அடிப்பது ஏன்? 🤔
கோவிலில் மணி 🔔 அடிப்பது ஏன்? அதில் உள்ள ரகசியம் 👉 உங்களுக்கு தெரியுமா?
🔔 பெரும்பாலும் கோவில்களில் மணி கட்டி தொங்க விட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். கோவிலுக்கு சென்றவர்கள் சுவாமியை தரிசனம் செய்வதற்கு முன்போ அல்லது பின்போ கோவிலில் உள்ள மணியை அடிப்பது வழக்கமான ஒன்றாகும்.
🔔 கோவிலில் உள்ள மணியை அடிப்பது ஏன்? கோவில் மணியை அடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? என்று இன்றைய பதிவில் தெரிந்து கொள்வோம்.
கோவிலில் மணி வைத்திருப்பது ஏன்?
🔔 கோவிலில் மணி வைத்திருப்பதை பற்றி பெரியவர்களிடம் கேட்டால் அவர்கள் கோவில் மணியை அடித்துவிட்டு வணங்கினால், தங்களின் வேண்டுதலை கடவுள் காது கொடுத்து கேட்பார் என்று சொல்வார்கள்.
🔔 கோவில் மணியை அடிப்பதால் அதில் பல்வேறு நன்மைகள் உள்ளன. அதனால் தான் பெரியவர்கள் அவ்வாறு கூறியுள்ளனர்.
🔔 கோவிலில் இருக்கும் மணியானது சாதாரண உலோகத்தால் ஆனது அல்ல. துத்தநாகம், நிக்கல், குரோமியம், காட்மியம், ஈயம், தாமிரம் மற்றும் மாங்கனீசு உள்ளிட்ட பல்வேறு உலோகங்களால் ஆன மணி தான் கோவில்களில் இருக்கிறது.
🔔 கோவிலில் இருக்கும் மணியை அடிக்கும் போது அது கூர்மையான மற்றும் நீடித்த ஒலியை ஏற்படுத்துகிறது. இந்த மணியில் இருந்து வரக்கூடிய ஒலியானது உங்கள் உடலை இயக்குகின்ற ஏழு சக்கரங்களை தொடுகிறது. இதன் காரணமாக உங்கள் மூளையானது எதை பற்றியும் சிந்திக்காமல் அமைதியான நிலையை அடைகிறது.
🔔 அதுமட்டுமல்லாமல் கோவிலில் மணி அடிக்கும் போது அதிலிருந்து வெளிவரும் சத்தம், மனதில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்களை போக்கி, நேர்மறையான எண்ணங்களை அதிகரிக்கச் செய்கிறது.
🔔 மேலும், மூளையில் செயல்திறனை அதிகரிக்கச் செய்து, விழிப்புணர்வை மேம்படுத்தி, மன நிம்மதியை அளிக்கிறது.
🔔 நாம் கோவில்களில் மட்டுமல்லாமல் வீடுகளிலும் இறைவனை பூஜிக்கும் போது மணி அடிப்பது வழக்கம்.
🔔 எனவே, பூஜையின் போது மணியடிப்பதால் அனைவரின் கவனமும் சிதறாமல் இறைவழிபாட்டில் இருக்கும். மனம் வேறு எந்த சிந்தனைக்கும் போகாமல் இருக்க பூஜையின் போது மணி அடித்து வழிபடுகின்றனர்.
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment