Saturday, August 5, 2023

வள்ளலாரின் சத்தியஞானசபையின்_இரகசியம் ?🔥

🔥#சத்தியஞானசபையின்_இரகசியம் ?🔥 
நமக்குள் காணும் அனுபவம், ஜோதி தரிசனம் ஆத்மதரிசனம் எப்படி இருக்கும் என்பதனை சாட்சிக்காக வடலூரில் சத்திய ஞான சபையில் உருவாக்கிகாட்டி நம்மை அறியச் செய்தார் ! 

#தைப்பூச ஜோதி தரிசனம் காணத்தவறாதீர்கள் என்றும் பறை சாற்றினார் வள்ளலார் ! 

ஏன் தெரியுமா ? 

அன்றுதான் கிழக்கே காலையில் சூரியன் உதயமாகும் அதே வேளையில் மேற்கே சந்திரன் அஸ்தமனமாகும் ! நடுவே சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் இதுதான் நாம் காணும் நம் #அகஅனுபவம் ! #ஞானநிலை ! 

நமது வலது கண் சூரியன் எனவும், இடதுகண் சந்திரன் எனவும் நம் இருகண்ணும் உள்ளே ஒன்று சேரும் இடம் அக்னிகலை, ஜீவஸ்தானம் ஜோதிதரிசனம் கிட்டும் இடம் எனவும் ஞானிகள் கூறியதை,,, 

புறத்தே வடலூரில் சத்திய ஞானசபையில் அமைத்துக் காட்டினார் ! 

வடலூரில் சத்திய ஞான சபையின் எதிரில் தைப்பூசத்தன்று காலை, முதல் ஜோதி தரிசனத்தின்போது மட்டுமே இவ்வரிய ஞானக்காட்சியை இயற்கையாக பார்த்து பரவசப்படலாம் ! 
வாருங்கள் வடலூருக்கு !

இதுபோலவே, இறைவன் உங்கள் இரு கண்களில் சூரிய சந்திரர்களாகவும் உங்கள் தலையில் உள் மத்தியில் உச்சிக்கு கீழே அண்ணாவுக்கு மேலே ஜோதி - ஆத்ம ஜோதியாக துலங்கி வழி நடத்துகிறான் ! 

இதுவே ஞானஇரகசியம் எல்லோரும் அறிந்து கொள்க என வள்ளல் பெருமான் திருவருட்பாவில் தெளிவாக கூறுகிறார் !

"#கையறவிலாத நடுக்கண் புருவப்பூட்டு கண்டு 
களிகொண்டு திறந்துண்டு நடு நாட்டு"

"#தகுந்த_ஆச்சாரியார் மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப் பெற்றுக் கொள்வது நலம்" என்று வள்ளல் பெருமானே நேரடியாகவே ஞானதவநிலையை கூறுகிறார்.

சத்தியஞானசபையை என்னுள் கண்டனன் என்று வள்ளல் பெருமான் பாடியுள்ளார் ! 

தன் அகஅனுபவத்தை நாமும் அறிந்து ஞானம் பெறவே #வடலூரில் சத்திய ஞான சபை அமைத்து #ஜோதிதரிசனம் காண வைத்தார்கள் !! 

எவ்வளவு பெரிய கருணை உள்ளம் வள்ளலாருக்கு ! 

எல்லோரும் ஞானம் பெறட்டுமே என எல்லா ஞான இரகசியங்களையும் வெளிப்படுத்தியுள்ளார் ! 

சொற்கோவிலாக #திருவருட்பா ! 
கற்கோவிலாக #சத்தியஞானசபை ! 

இதுபோன்ற ஞானவள்ளல் உலகில் யாராவது உண்டா ? அதனால்தான் அன்பர்கள் இராமலிங்கத்தை திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் என அன்போடு அழைத்து மகிழ்ந்தனர் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

No comments:

Post a Comment

Followers

திண்டுக்கல் சென்றாயப்பெருமாள் ஆலயம்......

*திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு கோட்டைப்பட்டி அருள்மிகு சென்றாயப்பெருமாள் ஆலயம்* *மூலவர் சென்றாயப்பெருமாள் முறுக்கு மீசை, தாடியு...