வீர ஆஞ்சனேய கோயில்...!
வீர ஆஞ்சனேய கோயில் (Veeranjaneya Temple) அல்லது காண்டி சேத்திரம் என்பது இந்தியாவில் ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தில் காண்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள இந்து கோவிலாகும்.
பாபக்னி ஆற்றின் கரையில் உள்ள அபயஹஸ்த ஆஞ்சநேய சுவாமி கோயில்
இந்த தலத்தின் வரலாறு ராமாயணம், திரேதா யுகத்திற்கு முந்தியது.
புராணத்தின் படி, இராமர், அனுமன் படத்தினை இங்குள்ள பாறையில் தன்னுடைய அம்பினால்
இந்த இடத்தில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தபோது போது வரைந்ததாகவும், அப்பொழுது வாயு பகவான் (வாயு கடவுள் மற்றும் அனுமனின் தந்தை) விருந்தோம்பலைப் பெற்றுக் கொண்டார்.
அனுமனின் இடது கையின் சிறிய விரலைத் தவிர வரைபடத்தை இராமர் முடித்துள்ளார். பின்னர் வியாச ராசர் இந்த படத்தை ஒரு விக்கிரகமாகச் செதுக்கியுள்ளார், அதே சமயம் வியாச ராசர் அனுமனின் இடது கையின் சிறிய விரலைச் செதுக்க முயன்றபோது, சிலையின் விரல் தானாகவே துண்டிக்கப்பட்டு இரத்தபோக்கு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
இராவணன் மீது இராமரின் வெற்றி செய்தியைக் கேட்டபின், வாயு பகவான் இராமரை வடக்கு நோக்கி அயோத்தி நோக்கிச் செல்லும் வழியில் வரவேற்பதற்காக இந்த இடத்தை தங்க மலர்களால் அலங்கரித்திருக்கிறார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
தங்கப் பூக்களின் இந்த விழாவை மரணத்திற்கு அருகில் இருப்பவர்களால் தான் காண முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்.
No comments:
Post a Comment