வாராஹியை உபாசனை செய்பவர்கள், தாமரைக் கிழங்கு. மாகாளிக் கிழங்கு, பனங்கிழக்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு போன்றவற்றை நிவேதிக்கலாம். தவிர, எல்லாக் கிழங்கு வகைகளுமே ஸ்ரீ வாராஹிக்கு ஏற்றவைதான்.
செவ்வரளி மாலைதான் வாராஹிக்கு விசேஷமானது. என்றாலும், கருந்துளசி, வில்வம், முல்லை, நீல சங்குப் பூ, மல்லிகை இவற்றாலும் மாலை அணிவிக்கலாம். மாசிப் பச்சை, விபூதிப் பச்சை, கருந்துளசி, மருக்கொழுந்து, கதிர்ப் பச்சை போன்ற தளிர்களையும் அம்பிகைக்குச் சூட்டலாம்.
செம்பருத்தி, செவ்வரளி, பிச்சி, நீலச் சங்கு புஷ்பம், காட்டு மல்லிகை, தெத்திப் பூ, பிச்சிப் பூ போன்றவைகள் அர்ச் சனைக்கு விசேஷமானவை. காரியத் தடைகள் விலகவும் நன்மைகள் கைகூடவும் செய்யப்படும் ஹோமங்களில் நாம் ஆகுதியைக் கொடுக்கும் வஸ்திரங்களின் நிறத்தைப் பொறுத்து பலனும் மாறுபடும்.
No comments:
Post a Comment