Friday, August 18, 2023

விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவது ஏன்?

விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றுவது ஏன்?
 இந்து மதத்தில் பல தெய்வ வழிபாடுகள் உள்ளன. அவற்றில் பல தெய்வங்களுக்கு பல்வேறு நறுமணம் வீசும் மலர்களால் மாலை சூட்டி வழிபடுவார்கள். 

ஆனால் விநாயகருக்கு அருகம்புல் மாலையே மிகவும் பிடித்தது. விநாயகர் பூஜை செய்வதற்கு அன்னம், மோதகம், அவல், பழங்கள் இல்லாது போனாலும் அருகம்புல்லும், தண்ணீரும் இருந்தால் போதும் என்பார்கள்.

 முன்னொரு சமயம் அனலாசுரன் என்ற ஒரு அரக்கன் தேவர்களையும், ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்தியதோடு யாகங்களுக்கும், நற்காரியங்களுக்கும் இடையூறாக இருந்து வந்தான். அவன் வாயிலிருந்து அக்கினியை உமிழ்ந்து எதிரிகளை அருகில் வரவிடாமல் செய்வதால், இந்திரனால் அவனை போரிட்டு வெல்ல முடியவில்லை.

வேறு வழியின்றி இந்திரன், தேவர்கள் புடைசூழ கைலாயம் சென்று விநாயகப் பெருமானிடம் அனலாசுரனை வதம் செய்து தங்களைக் காக்க வேண்டுமென்று முறையிட்டார்கள்.

அவர்களது வேண்டுகோளை ஏற்ற விநாயகப்பெருமான் வெற்றி பெற முடியாமல், அவனை அப்படியே விழுங்கிவிட்டார். வயிற்றுக்குள் சென்ற அரக்கன் வயிற்றை வெப்பமடையச் செய்தான்.

விநாயகருக்கு அவனுடைய வெப்பத்தை தாங்க முடியாததால், அவருக்கு கங்கை நீரால் குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லை கொண்டு வந்து விநாயகரின் தலைமேல் வைத்தார். அருகம்புல்லின் மகத்துவத்தால் அவரது எரிச்சலும் அடங்கியது.

அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகிவிட்டான். இந்த மண்ணில் முதன் முதல் தோன்றியது  அருகம்புல்.

ஆகவே தான் அவரின் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பெறுகிறது. மண்ணின் நாயகர் ஆன அவர் இந்த மண்ணில் விளைந்த எளிய பொருட்களைக் கொடுத்தாலே போதும், திருப்தி அடைவார்.

அன்று முதல் விநாயகர் தன்னை அருகம்புல்லால் அர்ச்சிப்பவர்களுக்கு தான் சகல நன்மைகளையும் செய்வேன் என அருள்பாலித்தார்.

பலன்கள் :
அருகம்புல் அர்ச்சனையால் ஞானம், கல்வி, செல்வம் அனைத்தும் கிட்டும்.

வினாயகரிற்கு அர்ச்சித்த ஒரு அருகம்புல்லிற்கு இந்திரரின் மணிமுடியே 
தரவல்லது 

அருகம்புல் உபாசனை. அதாவது நமது சகல பாவங்களையும் களைய வல்லது.

விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தால், நம் பாவங்களெல்லாம் தீயிலிட்ட பஞ்சாய் காணாமல் போய்விடும்.

சுக்ல பட்ச சதுர்த்தியன்று அருகம்புல் சாற்றி வழிபட வெற்றி கிடைக்கும்.!

No comments:

Post a Comment

Followers

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..._ இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலா...