Thursday, August 17, 2023

ஆவணி மாத பிறப்பு..எப்படி இருக்கும். ஆவணி மாதம் சிவ வழிபாட்டிற்கு உரியதாகும்.

 ஆவணி மாத பிறப்பு..எப்படி இருக்கும். 
ஆடி மாதம் எப்படி அம்மன் வழிபாட்டிற்கு உரியதோ, அதே போல் ஆவணி மாதம் சிவ வழிபாட்டிற்கு உரியதாகும். ஆவணி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் விரதம் இருந்து வழிபட மிகவும் ஏற்ற நாட்களாகும். சூரிய பகவான் தனது சொந்த வீடான சிம்ம ராசியில் பயணிக்கும் காலமே ஆவணி மாதமாகும். அதனால் இந்த மாதத்தை சிம்ம மாதம் என்றும் அழைப்பதுண்டு.

ஆவணி மாதம் 2023 : முக்கிய விரதங்கள், பண்டிகை நாட்கள் என்னென்ன? 

ஆவணியானது தமிழ் சூரிய மாதத்தில் சிங்க மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் மாதங்களின் அரசன் என்ற சிறப்பையும் ஆவணி மாதம் பெறுகிறது.

தமிழ் மாதங்களில் 5-வது மாதமாக வரும் ஆவணி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலம் தான் ஆவணி மாதம் என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.  ஆவணிக்கு இணையான மாதமும் இல்லை, சிவபெருமானை விட பெரிய இறைவனும் இல்லை என்று அகத்தியர் கூறியுள்ளார். இதன் மூலம் ஆவணி மாதம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

உலகின் முதல் சிவன்கோயில்.. மரகத நடராஜர் சிலை பற்றிய சுவாரஸ்ய வரலாறு தெரியுமா?

ஆவணியானது தமிழ் சூரிய மாதத்தில் சிங்க மாதம் என்று அழைக்கப்படுகிறது. இதனால் மாதங்களின் அரசன் என்ற சிறப்பையும் ஆவணி மாதம் பெறுகிறது. மேலும் சிவபெருமானின் ஆசியை பெற உகந்த மாதம் இந்த ஆவணி மாதம். ஆவணி மாதத்தில் விநாயாக சதுர்த்தி, மகா சங்கடஹர சதுர்த்தி கிருஷ்ண ஜெயந்தி, ஓணம் போன்ற முக்கிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மேலும் ஆவணி அவிட்டம், வரலட்சுமி விரம், ஆவணி ஞாயிறு, புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி போன்ற விரதங்களும் கடைபிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு ஆவணி மாதம் வரும் வெள்ளிக்கிழமை பிறக்கிறது. அதாவது ஆகஸ்ட் 18-ம் தேதி ஆவணி 1-ம் தேதி வருகிறது. எனவே ஆவணி மாதத்தில் வரும் முக்கிய விரத நாட்கள், பண்டிகைகள் குறித்து பார்க்கலாம்

 தமிழ் தேதி  ஆங்கில தேதி  கிழமை  விஷேசங்கள்
ஆவணி 1 ஆகஸ்ட் 18 வெள்ளி ஆவணி மாதப்பிறப்பு
ஆவணி 3 ஆகஸ்ட் 20  ஞாயிறு நாக சதுர்த்தி, சதுர்த்தி விரதம்
ஆவணி 4 ஆகஸ்ட் 21 திங்கள் நாக பஞ்சமி, கருட பஞ்சமி, சோமவார விரதம்
ஆவணி 5 ஆகஸ்ட் 22 செவ்வாய் சஷ்டி
ஆவணி 8 ஆகஸ்ட் 25 வெள்ளி வரலட்சுமி விரதம்
ஆவணி 10 ஆகஸ்ட் 27 ஞாயிறு ஏகாதசி விரதம்
ஆவணி – 11 ஆகஸ்ட் 28 திங்கள்  பிரதோஷம், சோம பிரதோசம்
ஆவணி 12 ஆகஸ்ட் 29 செவ்வாய் திருவோண விரதம், ஓணம்
ஆவணி 13 ஆகஸ்ட் 30 புதன் ஆவணி அவிட்டம், பௌர்ணமி ரக்‌ஷ பந்தன்
ஆவணி 14 ஆகஸ்ட் 31 வியாழன் காயத்ரி ஜபம், பௌர்ணமி
ஆவணி 17 செப்டம்பர் 03  ஞாயிறு சங்கடஹர சதுர்த்தி
ஆவணி 19 செப்டம்பர் 05  செவ்வாய் கார்த்திகை, பலராம ஜெயந்தி, ஆசிரியர் தினம்
 ஆவணி 20 செப்டம்பர் 06   புதன்  கிருஷ்ண ஜெயந்தி
 ஆவணி 22 செப்டம்பர் 8  வெள்ளி தேவமாதா பிறந்தநாள்
 ஆவணி 24 செப்டம்பர் 10  ஞாயிறு ஏகாதிசி
 ஆவணி 25 செப்டம்பர் 11  திங்கள் பாரதியார் நினைவு நாள்
 ஆவணி 26 செப்டம்பர் 12  செவ்வாய் பிரதோஷம்
ஆவணி 27 செப்டம்பர் 13  புதன் மகா சிவராத்திரி
 ஆவணி 28 செப்டம்பர் 14  வியாழன்  அமாவாசை
 ஆவணி 30 செப்டமர் 16  சனி 
சந்திர தரிசனம்
 ஆவணி 31 செப்டம்பர் 17 ஞாயிறு விஸ்வகர்மா ஜெயந்தி, கன்னி சங்கராந்தி
*ஓம் நமசிவாய*

No comments:

Post a Comment

Followers

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..._ இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலா...