Monday, August 28, 2023

சென்னைக்கு அருகில் மகேந்திரா சிட்டி அருகே குடி கொண்டிருக்கிறார் ஹயக்ரீவர்.

கல்வியில் சிறக்க அவசியம் போக வேண்டிய கோயில்...!
கல்விக்கு கடவுளாம் சரஸ்வதி தேவி குருவாகவழிபடும் ஹயக்ரீவரை கல்வியும், ஞானமும் அறிவும், ஆற்றலும் சித்திக்க வழிபட வேண்டும்.

சென்னைக்கு  அருகில் மகேந்திரா சிட்டி அருகே குடி கொண்டிருக்கிறார் ஹயக்ரீவர்.

மிகச்சரியாக மகேந்திர சிட்டிக்கு எதிரே இருக்கும் சாலையில் சென்றால் 3 கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே நகரத்திற்கான சாயல் இருக்கும். அதன் பின்னர் சிறு குன்றுகளும், வயலும், குளமுமான பாதை. கொஞ்சம் தொலைவு பயணப்பட்டதும் செட்டிப்புண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர் ஆலயம் வந்துவிடும்.

வழக்கமாக கோயில்களுக்கு முன்பாக தேங்காய், பூ, பழங்கள் அதிகம் விற்கப்படும். இங்கோஅந்த கடைகளை விட அத்தனை விதமான நோட்டுப்புத்தகங்களும், பேனாக்களுமாக விற்கும் சிறு கடைகளை அதிகம் பார்க்கலாம். 

யோக நிலையில் அமர்ந்த கோலத்துடன் நான்கு கரங்களுடன் சங்கு சக்கர தாரியாக இருக்கும் இறைவனின் முகத்தை தரிசிக்கலாம். 

அவர் முன்பாக நோட்டு பேனாவையோ, புதிய வகுப்பு பாடப் புத்தகங்களையோ தேர்வு நேரத்தில் ஹால் டிக்கெட்டுகளோ வைத்து வணங்கி பெற்றோரும் பிள்ளைகளும் ஆசி பெற்று செல்கிறார்கள். 

வகுப்பின் தொடக்கத்தில் செட்டிப்புண்ணியம் கோயிலுக்கு செல்வது பலருக்கும் அந்தக் கடவுளே தங்கள் பிள்ளைகளுக்கு துணையாக இருப்பது போன்ற தைரியத்தை தந்துவிடும்.

தேர்வு நெருக்கத்தில் கோயிலுக்கு செல்பவர்கள் அங்கு திரண்டுள்ள கூட்டத்தை பார்த்தாலே மிரண்டு போய்விடுவார்கள். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசை நிற்கும்.

ஹயக்ரீவர் கல்விக் கடவுளாம் சரஸ்வதிக்கே மகா குருவானவர். அரக்கர்களால் ஒளித்து வைக்கப்பட்ட வேதங்களை மீட்டுக் கொடுத்தவர். மங்கிய அறிவையும், ஞானத்தையும் அவரே மீட்டுத் தருவார் என்று நம்பி இங்கு வந்து யோக ஹயக்ரீவரை தரிசித்து செல்கிறார்கள்.

1848ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் கோயில் சிலைகள் கொள்ளை போவதை தடுக்க பல பிரயத்தனங்களை எடுக்க வேண்டி இருந்தது. அப்படி கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் இருந்து தேவநாதபெருமாளும், யோக ஹயக்ரீவரும், அப்போது அடர்ந்த காடாக இருந்த செட்டிபுண்ணியம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டனர். அப்போதிருந்து இங்கேயே பிரத்யட்சமாக காட்சி அளிக்கிறார்.

கோயிலில் தென்படும் அழிஞ்சல்மரத்தில் படிக்கவும், திருமண தடைகள் நீங்கவும், வீடு கட்டவுமாக வேண்டுதல் வைத்து ஆடையின் ஈரிழைகளை கட்டி வைத்திருப்பதை காணலாம்.

ஹயக்ரீவருக்கு பிடித்தமான ஏலக்காய் மாலையை அணிவித்து வழிபடுவதும், அவருக்கு உகந்த புதன்கிழமை வணங்குவதுமாக அவரது அருளை பெறலாம்.
யோக ஹயக்ரீவரை வழிபட்டால், கல்வியும் ஞானமும் சித்திக்கும். கல்வித்தடைகள் அகலும், 

பேச்சில் சிரமம் உள்ளவர்கள் தேன்நிவேதனம் செய்து சாப்பிட்டுவர பேச்சுப் பிரச்னைகள் அகலும் என்பது நம்பிக்கை

“ஞானானந்த மயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ
வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே"

ஓம் நமோ நாராயணாய 🙏

No comments:

Post a Comment

Followers

வில்வ மரம் பற்றிய தகவல்கள்...

வில்வ மரம் பற்றிய தகவல்கள்... 1)தீட்டுடன் வில்வ மரத்தின் அருகில் செல்லக்கூடாது, தொடக்கூடாது. தீட்டு என்பது, பிறப்பு, இறப்பு, மற்...