Wednesday, August 16, 2023

மூன்று மயில்!!ஒரே சந்நிதி!எண்ணியதை ஈடேறச் செய்யும் திண்ணியம் முருகன் கோவில்...!

மூன்று மயில்!!ஒரே சந்நிதி!
எண்ணியதை  ஈடேறச் செய்யும் திண்ணியம் முருகன் கோவில்...!
திண்ணியம் நாயகனான முருகப்பெருமானின் சந்நிதிக்குச் சென்றால் ஆச்சரியம்!

வள்ளி,தெய்வானை
ஸ்ரீமுருகப்பெருமான் மூவரும் தனித்தனி மயில் வாகனங்களில் அமர்ந்தபடி அருட்காட்சி தருகிறார்கள்.

திருச்சி லால்குடி அருகில் உள்ளதிண்ணியத்தில்,
முருகப்பெருமான் குடி கொண்டிருக்கும் சந்நிதியில் வள்ளி,தெய்வானை,முருகப்பெருமான் என மூவரும் தனித்தனி மயில்களில் காட்சி தருகின்றனர்.

ராஜராஜ சோழனின் அக்கா பெயர் குந்தவை பிராட்டியார். இவர் ஆன்மீக கொடை வள்ளலாக திகழ்ந்தார். சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் ( தோராயமாக கி.பி.995). ஒரு மாட்டு வண்டியில் முருகன், வள்ளி மற்றும் தெய்வானை விக்ரகங்களை ராஜ மரியாதையுடன் குந்தவை பிராட்டியார் தஞ்சாவூருக்கு சிப்பாய்களுடன் எடுத்து சென்று கொண்டிருந்தார்.

முருகனை சுமந்து கொண்டு சென்ற மாட்டு வண்டி கூழையாறு என்ற சிறு நதியை கடந்த உடனே  மாட்டின் கால் இடறி  கவிழ்ந்து விட்டது.  அதில் அந்த முருகன் விக்ரகத்தின் வலது கால் உடைந்து விட்டது.

விக்ரகத்தை எவ்வளவு முயற்சி செய்தும் விழுந்த இடத்திலிருந்து தூக்க முடியவில்லை. அதனால் அதே இடத்தில் குந்தவை முருகனுக்கு ஒரு அழகான் கோவில் கட்டினார். இது கல் வெட்டில் பதிவாகியுள்ளது.

பல நூற்றாண்டுகள் கழிந்தன. பலர், எத்தனையோ முறை அந்த‌ உடைந்த மூலவரின் காலை செப்பனிட முயற்சித்து அது ஏதாவது ஒரு காரணத்தால் ஒவ்வொறு முறையும் தோல்வியிலேயே முடிந்தது.

ஒரு முறை அவ்வாறு முயற்சிக்கும் போது ஊர் பெரியவர் ஒருவரின் கனவின் முருகன் தோன்றி "உங்கள் வீட்டில் உள்ள குழந்தை ஊனமாகி விட்டால் அந்த குழந்தையை தூக்கி எறிந்து விடுவீர்களா? அதே போல என்னை ஒன்றும் செய்யாதீர்கள்" என்று கூறிவிட்டார். 

 முருகனே கட்டளை இட்டுவிட்டதால் அதற்கு பின் இன்று வரை யாருமே மூலவரின் காலை சரி செய்ய முயற்சிக்கவில்லை. இன்று கூட அபிஷேகத்தின் போது கூர்ந்து கவனித்தால் தான் இது தெரியும். மற்றபடி வெள்ளி கவசம் சாத்தியிருந்தால் தெரியாது.

இந்த கோவில் இன்றைய திருச்சி மாவட்டம், லால்குடியிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில், காட்டூர் சர்க்கரை ஆலையிலிருந்து 5 கிலோமீட்டர்  தூரத்தில் உள்ளது.

இந்த கோவிலில் சில விசேஷங்கள் உள்ளன. எல்லா கோவில்களிலும் தக்ஷிணாமூர்த்தி தெற்கு திசையை பார்த்து கொண்டிருப்பார். ஞானத்தை தரும் தக்ஷிணாமூர்த்தி போல, முருகன்  தெற்கு திசையை பார்த்து அருள் புரிகிறார். 

இது மிக மிக விசேஷமாகும். உலகில் தெற்கு பார்த்த மூலவர் இருக்கும் இடத்தில் எல்லாம் ஒரு அதீதமான, அற்புதமான‌  சக்தி இருப்பதை உணரலாம். உதாரணம், மயிலை கற்பகாம்பாள், திருச்செந்தூர் முருகன், திருக்கடையூர் அபிராமி போன்றவை. 

அதே போல, வள்ளி மற்றும் தெய்வானை விக்ரகங்களுக்கும் தனித்தனியே மயில் வாகனங்கள் உள்ளன. ஒரே இடத்திலிருந்து நேராக பார்த்தால் முருகனும், இடது பக்கம் பார்த்தால் சிவனும் தெரிவார்கள். இந்த கோவிலில் உள்ள நவகிரகங்கள் அனைத்துமே சூரியனை பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

இது போன்ற விசேஷங்கள் உள்ள கோவில் உலகில் வேறு எங்கும் கிடையாது. இந்த கோவிலில் முருகனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.

கோவிலில் அருளும் ஈஸ்வரன்ஸ்ரீகோடீஸ்வரர்.
வாழ்வில் ஒரு முறை தரிசித்தால்,கோடி முறை தரிசித்த பலன்களைத் தரவல்லவர்.
அம்பிகையின் திருநாமம் ஸ்ரீபிருஹன் நாயகி.

உற்சவர் முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயிலின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்கிறார்.இவரின் திருமேனியும் அழகு!

மேலும்,ஆறுமுகமும் ஈராறு கரங்களுமாகத் திகழும் திண்ணியம் முருகனுக்கு செவ்வரளி மற்றும் விருட்சிப்பூ மாலை சார்த்தி வழிபட்டால் திருமணத் தடை நீங்கும்,குழந்தை வரம் கிடைக்கும்.கல்வியில் சிறக்கலாம் என்று நம்பிக்கையுடன் தெரிவிக் கிறார்கள் பக்தர்கள்.

இங்கு ஒரு முறையேனும் வந்து,கந்தனையும் கந்தனின் தந்தையையும் தாயையும் வழிபட்டால் போதும்!தோஷங்கள் அகன்று விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம்.

திண்ணியம் சென்று குருவாய் அமர்ந்த கந்தகுமாரனை வழிபடுங்கள்.எண்ணியதை ஈடேற்றித் தருவான் திண்ணியம் முருகன்!

No comments:

Post a Comment

Followers

சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்...

🌹ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்?  🌹உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்  சுமார்  40-50 மில்லியன்  பக்தர்க ள...