இன்று ஶ்ரீ ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த நாள்.
ராகவேந்திரர் ஜீவ சமாதி அடைந்த இடம் மன்சாலி எனப்படும் மந்த்ராலய கிராமம் துங்கபத்திரா நதிக்கரையில் அமைந்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் வசத்தில் உள்ள மந்த்ராலயம் இப்போதும் ஒரு குக்கிராமமே. ராகவேந்திரரின் மடத்தையும், மடத்தைச் சுற்றி நிகழ்ந்துகொண்டிருக்கும் வேலைகளையும் நீக்கி விட்டுப்பார்த்தால், இக்குக்கிராமத்தில் ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடலாம்.
மத்வாசாரியரால் மொழியப்பட்ட த்வைத நெறியில் வந்த ஆச்சார்யர்களுள் முக்கியமானவர் ராகவேந்திரர். இவருக்கு முன்பு வியாசராஜ யதி (வியாசயதி ராஜர்), சுரேந்திரர், விஜயீந்த்ர தீர்த்தர், சுதீந்திரர் போன்றவர்கள் மத்வத்தை முன்னெடுத்தவர்கள். மத்வருக்குப் பிறகு ராகவேந்திரரின் காலமே மத்வ, த்வைதத்தின் பொற்காலம் என்று அறியப்படுகிறது.
1595ல் தமிழ் நாடு புவனகிரியில் பிறந்த ராகவேந்திரர், வேதங்களைக் கற்று, உபநயனம் செய்துகொண்டு, திருமணம் செய்துகொண்டு, சன்னியாசம் மேற்கொண்டு, பாத யாத்திரை சென்று, வழியில் பல்வேறு வாதங்களை மேற்கொண்டு பலரை வென்று, இறுதியில் மாஞ்சாலி (மன்சாலி என்றும் சொல்லப்படுகிறது) என்னும் மந்த்ராலயத்தில் ஜீவ சமாதி அடைந்ததாக அவரது வாழ்க்கை வரலாறு விவரிக்கிறது. ராகவேந்திரர் பற்றிய வாழ்க்கை வரலாறுகள் முழுவதுமே அவரை ஒரு சித்தராகவும் மகானாகவுமே காட்டுகின்றன.
அவருடய இறுதி உபதேசம்
1.நேர்மையான வழியில் வாழ வில்லை என்றால்
நேரிய சிந்தனை வராது
2 நலிந்தவர்க்குச் செய்யும் சமூக சேவை, நாராயணனுக்குச் செய்யும் சேவையாகக் கருதப்படும். மானவ சேவையே மாதவ சேவை.
3. அற்புதங்கள் மட்டுமே செய்துகாட்டுபவரை விட்டு எப்போதும் விலகியே நில்லுங்கள்.
4. நல்லறிவு அற்புதங்களைக் காட்டிலும் மிகச் சிறந்தது.
5. இறைவன் மீது பக்தி செலுத்துங்கள். ஆனால், இந்த பக்தி மூட பக்தியாக இருக்கக் கூடாது.
No comments:
Post a Comment