_"51, சக்தி பீடங்கள்"_
இயங்குவது சக்தி, இயக்குவது சிவன் என்பதை உணர்த்த ஆதி மெய்ஞானிகள் நமது உடலில் ஏழு சக்கரங்களில் உள்ள யோகநாடிகளை 51 சக்தி பீடங்களாக குறிப்பிட்டுள்ளனர்.
மனித உடலில் உள்ள ஆறு ஆதாரங்களிலும் பிராண மூச்சு செலுத்தப்படும் போது, அந்த ஆதாரங்களில் சுற்றி உள்ள இதழ்களாகிய யோக நாடிகளில் மூச்சின் அதிர்வால் ஒலி தோன்றும். ஒவ்வொரு ஆதாரங்களின் இதழ்களான சொல்லப்படும் யோக நாடிகள்
முறையே;
மூலாதாரம் 4,
சுவாதிஷ்டானம் 6,
மணிபூரகம் 10,
அநாகதம் 12,
விசுத்தி 16,
ஆக்ஞை 2
ஆக மொத்தம் =50 .
50;இதழ்களுக்கு 50 அட்சரங்கள் எனவும், பிரணவம் ஆகிய "ஓம்" என்னும் ஒலியே அனைத்து ஒலிகளுக்கும் காரணமாக அமைவதால் 50+ 1 =51 என்றும், இவையே 51 அட்சரங்களாகிய 51 சக்தி பீடங்களாக ஆதி மெய்ஞானிகள் நமக்கு உணர்த்தி உள்ளனர்.
51 சக்தி பீடங்களும் அமைந்துள்ள இடங்கள்:-
தமிழ்நாட்டில் அமைந்துள்ள சக்தி பீடங்கள் (18)
1. காஞ்சி காமாட்சி- காஞ்சிபுரம், காமகோடி பீடம்.
2. மீனாட்சி அம்மன் -மதுரை, மந்திரிணிபீடம்.
3. பர்வதவர்த்தினி- ராமேஸ்வரம், சேதுபீடம்.
4. அகிலாண்டேஸ்வரி- திருவானைக்கா, ஞானபீடம்.
5. அபீதகுஜாம்பாள்- திருவண்ணாமலை அருணைபீடம்.
6. கமலாம்பாள் -திருவாரூர், கமலைபீடம்.
7. பகவதி அம்மன்- கன்னியாகுமரி, குமரிபீடம்.
8. மங்களாம்பிகை- கும்பகோணம், விஷ்ணுசக்திபீடம்.
9. அபிராமி அம்மன்- திருக்கடையூர், காலபீடம்.
10. மகாகாளி திருவாலங்காடு, காளிபீடம்.
11. பராசக்தி- திருக்குற்றாலம், பராசக்தி பீடம்.
12. லலிதா அம்மன்- குளித்தலை, சாயாபீடம்.
13. விமலை உலகநாயகி-
பாபநாசம், விமலைபீடம்.
14. காந்திமதி அம்மன்- திருநெல்வேலி, காந்தி பீடம்.
15. பிரம்மவித்யா- திருவெண்காடு, பிரணவ பீடம்.
16 தர்மசம்வர்த்தினி- திருவையாறு' தர்ம பீடம்.
17. திரிபுரசுந்தரி- திருவொற்றீயூர், இஷீபீடம்.
18. மகிஷமர்த்தினி- தேவிபட்டினம், வீரசக்தி பீடம்.
கர்நாடகாவில் அமைந்துள்ள சக்தி பீடங்கள் மூன்று:-
19. மூகாம்பிகை -கொல்லூர், அர்த்தநாரி பீடம்.
20 பத்ரகர்ணி -கோகர்ணம், கர்ணபீடம்.
21. சாமுண்டீஸ்வரி -மைசூர், சம்பப்பிரதபீடம்.
ஆந்திராவில் அமைந்துள்ள சக்தி பீடங்கள் மூன்று:-
22. பிரம்மராம்பாள்- ஸ்ரீசைலம், சைலபீடம்.
23.ஞானாம்பிகை- காளஹஸ்தி, ஞானபீடம்.
24. மாணிக்காம்பாள்- திராஷாரொமா, மாணிக்க பீடம்.
இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள சக்தி பீடங்கள் நான்கு:-
25. மார்க்கதாயினி- ருத்ர கோடி, ருத்ர சக்தி பீடம்.
26. நாகுலேஸ்வரி -நாகுலம், உட்டியாணபீடம்.
27 ஸ்ரீ லலிதா- பிரயாகை, பிரயாகைபீடம்.
28. நீலாம்பிகை -சிம்லா, சியாமளபீடம்.
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள சக்தி பீடங்கள் மூன்று:
29. மகாலட்சுமி -கோலாப்பூர், கரவீரபீடம்.
30 திரியம்பகதேவி- திரியம்பகம், திரிகோண பீடம்.
31. பவானி-துளஜாபுரம், உத்பலாபீடம்.
உத்திர பிரதேசத்தில் அமைந்துள்ள சக்தி பீடங்கள் இரண்டு:-
32. விசாலாட்சி -காசி, மணிகர்ணிகா பீடம்.
33. விரஜைஸ்தம்பேஸ்வரி- ஹஜ்பூர், விரஜாபீடம்.
மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள சக்தி பீடங்கள் இரண்டு:-
34. சங்கரி- மகாகாளம், மகோத்பலாபீடம்.
35. மகாகாளி -உஜ்ஜையினி, ருத்ராணி பீடம்.
கேரளாவில் அமைந்துள்ள சக்தி பீடங்கள் ஒன்று:
36.பகவதி அம்மன்- கொடுங்கலூர், மகா சக்தி பீடம்.
ஹரியானாவில் அமைந்துள்ள சக்தி பீடங்கள் இரண்டு:
37.. ஸ்தாணுபிரியை- குருஷத்ரம், உபதேசபீடம்.
38. முக்திநாயகி- ஹஸ்தினாபுரம், ஜெயந்தி பீடம்.
காஷ்மீரில் அமைந்துள்ள சக்தி பீடங்கள் இரண்டு:
39. வைஷ்ணவி- ஜம்மு, வைஷ்ணவி பீடம்.
40. சம்புநாதேஸ்வரி- ஸ்ரீநகர்,ஜ்வாலாமுகிபீடம்.
குஜராத்தில் அமைந்துள்ள சக்தி பீடங்கள் இரண்டு:
41 சந்திரபாகா- சோமநாதம் பிரபாஸாபீடம்.
42. அம்பாஜி- துவாரகை, சக்திபீடம்.
மற்றும் பிறயிடங்கள்;-
43. நந்தா தேவி -விந்தியா சலம், விந்தியா பீடம். மிர்ஜாப்பூர்.
44. காமாக்யா -கவுகாத்தி, காமகிரிபீடம், அஸ்ஸாம்.
45. பிரதானகாளி- கொல்கத்தா, உத்ர சக்தி பீடம், மேற்கு வங்காளம்.
46. பைரவி- பூரி, பைரவி பீடம், ஒரிசா.
47.காயத்ரி -ஆஜ்மீர் அருகே புஷ்கரம், காயத்ரி பீடம், ராஜஸ்தான்.
48. திரிபுர மாலினி- கூர்ஜரம் அருகே ஜாலந்திரம், ஜாலந்திர பீடம், பஞ்சாப்.
49. மந்த்ரிணி- கயை, திரிவேணி பீடம், பீகார்.
50. பவானி பசுபதி- காட்மாண்ட், சக்தி பீடம், நேபாளம்.
51. தாட்சாயினி -மானஸரோவர்,தியாகபீடம்,திபெத்.
மொத்தம் ( 51)
இந்த 51 பீடங்களும், நிலத்திற்கான சக்திபீடம், நீருக்கான சக்தி பீடம், நெருப்புக்கான சக்தி பீடம், காற்றுக்கான சக்தி பீடம், ஆகாயத்திற்கான சக்தி பீடம், என பஞ்சபூத சக்திகளாக பிரிந்து இவை மனிதனின் சூட்சும உடலில் உள்ள சக்கரங்களில் செயல்படும் விதத்தை உணர்ந்து சதா சர்வ காலமும் இப்படி இயங்குவதை பெண் சக்தியாக உருவகப்படுத்தி இயக்குவதற்கு மூல காரணமான இயக்கத்தை சிவன் என்று உருவாக படுத்தி நமக்கு உணர்த்தி உள்ளனர்.
இதுபோல் நமது புராணங்கள் விஷ்ணு தன் சக்ராயுதத்தால் சக்தியை 51 துண்டுகளாக வெட்டி அதன் பாகங்கள் 51 இடங்களில் விழுந்ததாகவும், அந்த 51 இடங்களே சக்தி பீடங்களாக வணங்கப்பட்டு வருகின்றன என்று வரலாறு கூறுகிறது. மணிபூரக சக்கரம் விஷ்ணு என்றும் அந்த சக்கரத்தில் உருவாகும் உஷ்ணமே காக்கும் விஷ்ணு என்றும் பார்த்தோம். இந்த மணிபூரக சக்கரத்தில் இருந்து உடலில் எல்லா பாகங்களுக்கும் மற்றும் ஆறு ஆதாரங்களில் உள்ள 51 யோக நாடிகளுக்கும் நரம்புகளின் வழியாக நாடிகள் உயிர் காக்கும் உஷ்ணத்தை கொண்டு செல்வதையே விஷ்ணு சக்ராயுதத்தால் 51 துண்டுகளாக வெட்டினார் என சூட்சுமமாக மெய் ஞானிகள் நமக்கு உணர்த்தியுள்ளனர்.
No comments:
Post a Comment