Sunday, October 1, 2023

ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 8.10.23 முதல் 26.4.25 வரை

ராகுகேது பெயர்ச்சி பலன்கள்  பெயர்ச்சி 8/10/2023 திருநாகேஸ்வரம் கோயிலில் ராகு மீனராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றார் 
ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - 8.10.23 முதல் 26.4.25 வரை
ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்துகொண்டு பிரச்னைகளில் சிக்கவைத்த ராகு பகவான் இப்போது ராசிக்குப் பன்னிரண்டாம் வீட்டுக்கு வந்தமர்வதால் சங்கடங்கள் நீங்கும்;

நிகழும் சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தட்சிணாயனப் புண்ணிய கால, வருஷ ருதுவில் கிருஷ்ணபட்சத்து தசமி திதி, பூசம் நட்சத்திரம், சித்தம் நாமயோகம், வணிசை நாமகரணம் சித்த யோகத்தில், பஞ்சபட்சியில் ஆந்தை நடைபயிலும் நேரத்தில் 8.10.23 பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு மேஷ ராசியிலிருந்து மீனம் ராசிக்குள் ராகு பகவானும், துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் கேது பகவானும் நுழைகின்றனர். 8.10.23 முதல் 26.4.25 வரை ராகு பகவான் மீனத்திலும், கேது பகவான் கன்னியிலும் இருந்து பலன் தருவார்கள்.
ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: தொட்டதெல்லாம் துலங்கும்.. உச்சத்திற்கு கொண்டு போகும் ராகு யாருக்கு?

நவ கிரகங்களில் ராகு கேது நிழல் கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை இடப்பெயர்ச்சி அடையும். ராகு கேது இந்தாண்டு வரும் அக்டோபர் இறுதியில் இடப்பெயர்ச்சி அடைகின்றன. மேஷ ராசியில் உள்ள ராகு மீனம் ராசிக்கும் துலாம் ராசியில் உள்ள கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் மகரம் ராசியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் என்ன பலன்கள் கிடைக்கும் யோகங்கள், அதிர்ஷ்டங்கள் தேடி வருமா என்று பார்க்கலாம். ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஒன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். மீன ராசியில் அமரும் ராகு குருவைப்போலவும், கன்னி ராசியில் அமரும் கேது புதன் பகவானைப் போலவும் செயல்படப்போகிறார். 

மகர ராசிக்காரர்களே... நவம்பர் முதல் உங்களுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் செயல்படப்போகிறது. ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நிகழப்போகிறது. இது நாள் வரை உங்கள் ராசிக்கு 4ஆம் இடத்தில் இருந்த ராகு 3ஆம் இடத்திலும் 10ஆம் இடத்தில் இருந்த கேது 9ஆம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். 
 "ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும். காரியங்களுண்டாம்,அன்னதானங்களுண்டாம்.வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம்" என்ற ஜோதிட பாடல் படி ராகு இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார். கடந்த ஒன்றறை ஆண்டுகளாக வரன் தேடியும் அமையாத திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். செய்யும் தொழிலிலோ பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். வீடு கட்டும் யோகம் அமையும் வண்டி வாகனம் வாங்குவீர்கள். முயற்சி ஸ்தானத்தில் வந்து அமரும் ராகுவினால் புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். உங்களை இது நாள் வரைக்கும் ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள்.செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் தொடர்பு கிடைக்கும். அதனால் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் உடலிலும் உற்சாகம் கூடும். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும். மாணவர்களுக்கு இது அருமையான கால கட்டம். தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிடைக்கும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பத்தில் ஒரு பாவி இருந்தால் பலன்கள் இரட்டிப்பாகும் பதவிகள் தேடி வரும் என்று சொல்வார்கள். பத்தாம் வீட்டில் இருந்த கேது பதவியை புரமோசனை கொடுத்தார். இனி பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு கேது பகவான் வருவதால் இதுவரை தடைபட்டு வந்த காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பளமும் கிடைக்கும். பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ஆம் பாவம், அந்த 9ஆம் இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் உற்றார் உறவினர் பகை மறந்து சந்தோசமாக இணையலாம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். அடகில் இருந்த நகைகளை மீட்கும் நேரம் வந்து விட்டது. மகர ராசிக்காரர்கள் வியாழக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது அவசியம். அதே போல விநாயகரை வழிபட நன்மைகள் நடைபெறும். அதிர்ஷ்டம் உங்கள் வீடு தேடி வரப்போகிறது அனுபவிக்கத் தயாராகுங்கள்.

கன்னி ராசிக்காரர்களே

புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. தொழில், வியாபாரம் வருமானம், உறவுகள் என அனைத்தையும் இழந்து இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்ற நிலையில் வாழ்ந்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி இனி மன நிம்மதியை தரப்போகிறது.கடந்த காலங்களில் உங்களின் முயற்சிகளில் தடை தாமதங்கள் வந்து கொண்டு இருந்தது. சண்டை சச்சரவுகள் இருந்தது. நண்பர்கள் உறவினர்கள் கூட உங்களுக்கு எதிராக இருந்தனர். இதன் மூலம் உங்களுக்கு நல்ல படிப்பினை கிடைத்தது. கடனில் சிக்கித்தவிக்கும் உங்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் தீருவதால் உங்கள் கவலைகளும் முடிவுக்கு வரப்போகிறது. ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.  வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாழ்வுமனப்பான்மை, குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். பாதியிலேயே நின்றுபோன பல வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள். பணம் விசயங்களில் கவனம் தேவை. அண்ணன் தம்பியா இருந்தாலும் பணம் விசயத்தில் கவனம் தேவை. நமக்கு ரொம்ப வேண்டியவர்தானே என்று மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் படிவங்களில் கையெழுத்து போட வேண்டாம். கடன் வாங்கி கொடுக்க வேண்டாம். கொடுத்த பணம் திரும்ப வராமல் போய்விடும்.  திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் விலகப்போகிறது. விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறியவர்கள் இனி மனம் திருந்தி ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளுக்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் தேடி வரும். ராகு ஏழாம் வீட்டில் இருந்தாலும் கவலைப்பட வேண்டாம் அஷ்டம குருவிடம் இருந்து விலகப்போகிறார். உங்களுக்கு நல்ல யோகம்தான். இனி வரும் காலங்களில் உங்களுக்கு நிறைய திருப்புமுனைகள் ஏற்படும். இனி வெற்றிகளை மட்டுமே ருசிக்கப் போகிறீர்கள். குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சிறப்பாக முடிப்பீர்கள். அரசாங்கக் காரியங்களில் இருந்து வந்த தடுமாற்றங்கள் விலகும். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். பிள்ளைகள், உயர்கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள். சனி பெயர்ச்சி பலன்: அஷ்டமத்து சனி, கண்டச்சனி.. ஏழரை சனி.. அர்த்தாஷ்டம சனி ஆட்டம் ஆரம்பம்.. உஷார் பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். அரசு வேலை, அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். பேர் புகழ் கிடைக்கும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். எதிர்பார்க்காத பண வரவு வரும். கடன் சுமைகள் நீங்கும். நீங்க கொடுத்து நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும். விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யும் கேது அக்டோபர் மாதம் முதல் கன்னி ராசியில் வந்து அமரப்போகிறார். இனி நெருக்கடிகள் நீங்கும். உங்களுடைய வாழ்க்கை உச்சமடையப்போகிறது. கேது உங்க ராசிநாதன் போல உங்களுக்கு வெற்றிகளை தருவார். மனதில் சந்தோஷத்தையும் சிந்தனையில் தெளிவையும் தருவார் ஞானகாரகன் கேது. ராசியில் கேது அமர்வதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்த்து விடுங்கள் சில நேரங்களில் வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் திணறுவீர்கள். திடீர்ப் பயணங்கள் அடிக்கடி நிகழும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஜென்ம சனியால் இது வரை போராட்டம் ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் நல்ல செய்திகள் தேடி வரும் பொருளாதார நெருக்கடி தீரும். சனி, ராகு, கேது, குரு பெயர்ச்சி : இப்பவே கண்ண கட்டுதே.. 2024 எப்படி இருக்குமோ?.. தப்பிக்க முடியுமா? இதுநாள் வரை பல நெருக்கடிகளை கொடுத்து வந்தனர். இனி அந்த நெருக்கடிகள் எல்லாம் தீரப்போகிறது. இனி மன அழுத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். யோக காரகன் ராகு களத்திர ஸ்தானத்திற்கு வரப்போகிறார். ஞான காரகன் கேது உங்கள் ராசிக்கு வரப்போகிறார். உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றுமாக இருக்கிறது. ஒரே சலிப்போடு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருக்கிறீர்கள். எப்போது விடியும் வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என்று பயப்படவேண்டாம். ராகு கேது பெயர்ச்சி நன்மைகளைத் தரப்போகிறது. மகிழ்ச்சியும் மனநிம்மதியும் தேடி வரப்போகிறது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி தியானம் செய்யுங்கள் நல்லதே நடக்கும் மனக்குழப்பங்கள் தீரும். திருச்செந்தூர் முருகனை செவ்வரளி மாலை சாற்றி வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு 
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு கோடி கோடியாக குபேர யோகத்தை அள்ளித்தரப்போகிறார். மலையாக செல்வமும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கப்போகிறது. சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்று விரிவாகப் பார்க்கலாம். ராகு கேது பெயர்ச்சி: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் மிக வலிமையான கிரகங்கள். குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி போல ராகு கேதுவிற்கும் முக்கியத்துவம் தருகின்றனர். வரும்  ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. ராகு பகவான் மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். கேது பகவான் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். குரு பகவானைப் போல ராகுவும் புதன் பகவானைப் போல கேதுவும் செயல்படப்போவதால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். 
 சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரக்கூடிய ராகு கேது பெயர்ச்சியாக உள்ளது. சிம்ம ராசிக்கு 2ஆம் வீட்டில் கேதுவும் 8ஆம் வீட்டிற்கு ராகு பகவான் பயணம் செய்யப்போகிறார். ராகுவின் அஷ்டம ஸ்தான பயணம் மிகச்சிறந்த புத்திர பாக்கியத்தை தரப்போகிறது. குருவின் வீட்டில் ராகு அமர்ந்து பயணம் செய்வதால் குரு பகவானைப் போல ராகு செயல்படுவார். உங்களால் பிள்ளைகளுக்கு சுகமான வாழ்க்கை அமையப்போகிறது. யோகமான கால கட்டமாக உள்ளது. 
 சிலரின் ஆலோசனையைக் கேட்டு தவறான பாதையில் சென்று பலவிதங்களிலும் சிக்கித் தவித்தீர்களே, இனி சரியான பாதையில் பயணிப்பீர்கள். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும். ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். எதிர்பாராத வகையில் திடீர் செலவுகளும் வந்து சேரும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம். குரு பகவானின் பார்வை வரும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு கிடைக்கிறது. பல சிக்கல்களை சந்தித்து வந்த உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷத்தையும் தரப்போகிறது. செல்வ வளம் வரப்போகிறது. பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். பிசினஸ் செய்யலாம். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்களுக்கு திடீர் லாபம் கிடைக்கும். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். பெண்களுக்கு நகை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். நகை பணத்தை பத்திரப்படுத்துங்கள். குடும்பத்திலும் சமூகத்திலும் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருப்பது நல்லது. அக்டோபர் மாத ராசி பலன் 2023.. வேலையில் புரமோசன்.. திடீர் ஜாக்பாட் யாருக்கு கிடைக்கும்? தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான முதலீடுகளை தவிர்க்கப்பாருங்கள். யாருக்கும் பணம் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முதலீடு செய்வது நல்லது. ராகு நிழல் கிரகம் என்பதால் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். அலுவலகத்தில் சலுகைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கூடும். சிலருக்கு திறமைக்கு ஏற்ற வேலையும், ஊதிய உயர்வும் கிடைக்கும். இதுநாள் வரை தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்த கேது பகவான் வாக்கு, தன ஸ்தானத்தில் அமர்வதால் உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். மகன், மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் சிலரை தேடி வரும். பணவரவுக்கு ஏற்ப விரைய செலவுகளும் தேடி வரும். தூக்க குறைபாடு அதனால் மன உளைச்சல் ஏற்படும். சிலர் வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாடி வீடு கட்டும் யோகம் வரும். சொல்லும் செயலும் வெற்றியைத் தேடித் தரும். அதே நேரத்தில் பண விசயத்தில் கவனம் தேவை. இரண்டாம் வீட்டில் கேது பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும். தன ஸ்தானம் சிறப்பாக அமைந்துள்ளது. எல்லையில்லாத அபரிமிதமான பண வருமானத்தை தரப்போகிறது. நாள்தோறும் விநாயகரை வழிபட வேண்டும். வியாபாரம் தொழிலில் பல மடங்கு லாபம் வரும் வருமானம் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் வீடு தேடி வரப்போகிறது. பயம் பதற்றம் நீங்கப்போகிறது. நம்முடைய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். வீடு கட்ட,பிசினஸ் செய்ய வங்கிக்கடன் கிடைக்கும். கலைஞர்களுக்கு மிக அற்புதமான கால கட்டம்.  திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீக்கும். ஐப்பசி மாதத்திற்குப் பிறகு வரன் பேசி முடிக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகள் நீங்கப்போகிறது. தம்பதியர் இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கப்போகிறது. குடும்ப வாழ்க்கையில் நிறைய நன்மைகள் நடைபெறும். பேச்சில் கவனம் தேவை. ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் எனவே பேச்சை குறைத்து செயலில் கவனம் தேவை. வாக்கு ஸ்தானத்தில் பாம்பு கிரகம் அமரும் போது கொடுத்த வாக்கினை காப்பாற்ற முடியாமல் போகும் கவனம். மாணவர்கள் தினசரியும் விநாயகரை கும்பிட்டு தோப்புக்கரணம் போட்டு வழிபட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டிற்கு சென்று படிக்க யோகம் வரும். தடைகள் நீங்கி விசா கிடைக்கும். ஆன்மீக பேச்சாளர்களுக்கு இது அற்புதமான காலகட்டம். பேச்சினால் வருமானம் அதிகரிக்கும். கேது பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டின் மீது விழுகிறது. சுக ஸ்தானத்தில் கேதுவின் பார்வை விழுவதால் வீடு கட்டும் யோகம் வரும். எட்டாம் வீட்டின் மீது கேதுவின் பார்வை விழுவதால் ஆயுள் கண்டங்கள் நீங்கும். அபரிமிதமான வளர்ச்சி கிடைக்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும் என்றாலும் இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. விநாயகர் வழிபாடு கேதுவினால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கும். அடிக்கடி மவுன விரதம் இருப்பது நன்மையை கொடுக்கும். புதன்கிழமைகளில் விநாயகர் ஆலயத்திற்கு சென்று துளசி வழிபாடு செய்வது நல்லது. வெற்றி மீது வெற்றிகள் தேடி வரும். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி செல்வ செழிப்பையும் குபேரனாக்கும் யோகத்தையும் தரப்போகிறது.

துலாம் ராசிக்காரர்களுக்கு 

இந்த ராகு கேது பெயர்ச்சி நிம்மதி சந்தோஷத்தை தரப்போகிறது. மறைவு ஸ்தானங்களுக்கு போகும் ராகு கேதுவினால் செல்வ வளம் வரப்போகிறது. சங்கடங்களை மட்டுமே சந்தித்து வந்த நீங்கள் இனி சந்தோஷங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். ஜென்ம ராசியில் அமர்ந்து இருந்த கேது நவம்பர் முதல் 12ஆம் வீட்டிற்கு செல்லப்போகிறார். களத்திர ஸ்தானத்தில் இருந்த ராகு ஆறாம் வீட்டிற்கு செல்லப்போகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால் அற்புதங்கள் நிகழப்போகிறது. ஆறாம் வீட்டில் ராகு மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது. மன குழப்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜா யோகமாக அமைகிறது இந்த ராகு கேது பெயர்ச்சி. கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். களத்திர ராகு குடும்பத்தில் கஷ்டத்தை கொடுத்தது. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு இருந்தது. கடந்த காலங்களில் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு நெருக்கடிகளை சந்தித்து வந்த உங்களுக்கு துன்பங்களும் பிரச்சினைகளும் முடிவுக்கு வரும். வீட்டில் நிம்மதியில்லாமல் இருந்த உங்களுக்கு நெருக்கடிகள் நீங்கும். தடைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
இந்த ராகு பெயர்ச்சியால் புதிய தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும். பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். திருமணம் நீண்ட நாள் கனவான புத்திரசம்பத்து கிடைக்கும். ருண ரோக சத்ரு ராகுவினால் நினைத்தது நிறைவேறும் காலம் வந்து விட்டது. உறவினர்களின் பாசமும் நேசமும் அதிகரிக்கும். எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்துள்ளதால் கடன் அடைப்படும் தீராத நோய் திரும். போட்டி பொறாமை பொடி பொடியாகும். ஆறில் ராகு அமர்வது அஷ்ட லட்சுமி யோகத்தை தரக்கூடியது. இதுநாள் வரை இருந்த துன்பங்கள் துயரங்கள் நீங்கும். கடன் பிரச்சினையில் இருந்தும் நோய்களில் இருந்தும் நிவாரணம் பெறுவீர்கள். தம்பதியரிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபராத்தில் இருந்த தடைகள் முன்னேற்றங்கள் நீங்கும். பிள்ளைகள் வழியில் இருந்த செலவுகள் நீங்கும். மன உளைச்சல் நீங்கும். முடியாத காரியங்களை முடித்து காட்டுவீர்கள். எதிரிகள் உங்களைக் கண்டு விலகி ஓடுவார்கள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: தீராத கடனும் தீரும்.. மன நிம்மதி மகிழ்ச்சி யாருக்கு கிடைக்கும் ஜென்ம ராசியில் இருக்கும் கேது 12ஆம் வீட்டிற்கு செல்லப்போவதால் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும் வேதனைகள் மறையும். வெளிநாட்டு யோகமும் தேடி வரப்போகிறது. வெளிநாடு வேலையை விட்டு விட்டு வந்தவர்களுக்கு மீண்டும் அழைப்புகள் வரும். கடுமையான உழைப்பு வெற்றியை கொடுக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும். பெண்களுக்கு இனி நல்ல காரியங்கள் நிறைய நடைபெறும். பட்டம் பதவி புகழ் தேடி வரும். கணவன் மனைவி உறவில் இருந்த விரிசல் நீங்கும். கசப்புகள் நீங்கி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். அக்கம் பக்கத்தினரிடம் எந்த கருத்து வேறுபாடும் வைத்துக்கொள்ளாதீர்கள். மாணவர்களுக்கு நல்ல நேரம் வந்து விட்டது. பிடித்த பள்ளி, கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும். கால்களில் பிரச்சினை வரும் எச்சரிக்கை தேவை. யாரையும் கடுமையாக பேச வேண்டாம். நோய்கள் நீங்கி உங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். கோவில்களுக்கு பயணம் செய்வீர்கள். ஆன்மீக பயணம் அதிகரிக்கும். புது முயற்சிகள் கை கூடும்.வரவு எட்டணா செலவு பத்தணா நிலை மாறி சேமிப்புகள் உயரும்.சுப தேவைகளுக்கு கடன் பட நேரிடும். வண்டி வாகன மாற்றமும் வீடு மாற்றமும் ஏற்படும். சிலருக்கு சொந்த வீடு குடி போகும் வாய்ப்புகளும் தேடி வரும். அம்மாவின் உடல் நலனில் முன்னேற்றத்தை தரும். புது வீடு, உயர்பதவி யோகம் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் யோகத்தை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்றத்தையும் கொடுக்கும். மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி ராஜயோகத்தை கொடுத்து செல்வாக்கு சொத்து சுகத்தை அதிகரிக்கும். திருப்பதி, காளஹஸ்தி சென்று தரிசனம் செய்து வர மென்மேலும் உயர்வு அதிகரிக்கும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் செய்யப்போகும் முதலீடுகள் லாபமாக திரும்ப வரும். வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் உயர் பதவிகள் தேடி வரும். தெய்வ வழிபாடு செய்வதற்கான நேரம் வந்து விட்டது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் விநாயகர் மந்திரத்தை சொல்லுங்கள் நல்ல வேலை கிடைக்கும். சஷ்டி விரதம் இருங்கள் முருகன் அருளினால் சத்ரு தொல்லைகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...