Saturday, October 21, 2023

திருநீறு எவ்வளவு இந்த உயிருக்கு பயன்படுகிறது என்பது பற்றிப் பார்ப்போம்

அன்பே சிவம் மனமே குரு சிவாயநம நமசிவாய

திருநீறு
திருநீறு எவ்வளவு இந்த உயிருக்கு பயன்படுகிறது என்பது பற்றிப் பார்ப்போம்
சைவத் திருவேடங்களில் திருநீறு உருத்திராக்கம் சடாமுடி ஆகியன இம்மூன்றும் மிகவும் உன்னதமாக போற்றப்படுகின்றன இறைவனே திருநீற்றினை மேனி( உடல் முழுவதும்) முழுவதும் பூசி விரும்பி அணிந்துள்ள குறிப்புகள் புராணங்களிலும் உபநிடதங்களிலும் ஆகமங்களிலும் திருமுறைகளிலும் நிறைந்துள்ளன
திருநீற்றின் ஆற்றலால் திருஞானசம்பந்தர் சமணர்களை வாதில் வென்றது வரலாற்றுச் சான்றக உள்ளது அடியார் பெருமக்கள் திருநீற்றினை இறைவன் அருளிய பெரும் செல்வமாக ( சொத்தாக) போற்றி அணிய வேண்டும் கையிருப்பில் திருநீற்றுப்பை  வைத்துக்கொண்டு அவ்வப்போது திருவைந்தெழுத்து ( சிவாயநம) என நினைந்து அணிய வேண்டும் திருநீற்றின் மகிமை முழுவதும் அறியாததாலேயே அடியார் பெருமக்கள் கூட திருநீற்றினை நிறைய அணியா நிலை உள்ளது

“திருஞானசம்பந்தர் வாக்கில் விபூதியின் பெருமை ” சொல்லப்பட்ட திறத்தை பார்ப்போம்

1: மந்திரம் ஆவது நீறு

2: வானவர்கள் அணிவது நீறு

3: அழகு தருவது நீறு

4: வணங்கப்படுவது நீறு

5: வேத சிவ ஆகமங்களில் புகழ்ந்து கூறப்படுவது நீறு

6: கொடிய துயர்களை ( துன்பங்களை) நீக்க கூடியது நீறு

7: சிவஞானம் தருவது நீறு

8: அறியாமையை போக்குவது நீறு

9: ஓதத் தக்கது நீறு

10: உண்மையாய் நிலைபெற்றிருப்பது நீறு

11: முத்தி தருவது நீறு

12: முனிவர் அணிவது நீறு

13: சத்தியமாவது நீறு

14: தக்கோர் புகழ்வது நீறு

15: இறைவனிடம் பக்தியை ஏற்படுத்துவது நீறு

16: போற்றிப் பரவ இனியது நீறு

17: எண் வகைச் ( அட்டமா சித்திகளை) சித்திகளை அருளுவது நீறு

18: காண இனியது நீறு

19: கவர்ச்சியை ( தேஜஸ் – ஒளியை) கொடுப்பது நீறு

20: போற்றி அணிந்து கொள்வோருக்கு பெருமைகள் கொடுப்பது நீறு

21: கொடிய மரணத்தை தவிர்ப்பது நீறு

22: அறிவை ( ஞானத்தை) தருவது நீறு

23: உயர்வை ( மேலான நிலையை) அளிப்பது நீறு

24: பூசிக் கொள்ள இனியது நீறு

25: புண்ணியம் தருவது நீறு

26: அதன் ( திருநீற்றின்) பெருமை பேச இனியது நீறு

27: பெருந்தவப் புரிவோருக்கு உலகியல் ஆசை கெடுப்பது நீறு

28: முத்தியாகிய ( திருவடிப்பேறு, முக்திப்பேறு) நிலையான பேரின்பம் நல்குவது நீறு

29: உலகோரால் ( உலகியல் வாழ்க்கை வாழும்) புகழப்படுவது நீறு

30: செல்வங்கள் ( நிலையான செல்வம்) ஆவது நீறு

31 : உலகியல் துன்பம் நீக்குவது நீறு

32: மன வருத்தங்களை தணிப்பது நீறு

33: வானுலகம் அளிப்பது நீறு

34: பொருத்தி ( உடல் முழுவதும்) அமைவது நீறு

35: புண்ணியர்கள் பூசுவது நீறு

36: முப்புரங்களை அழித்தது நீறு

37: இம்மைக்கும் மறுமைக்கும் துணையாய் இருப்பது நீறு

38: அதன் ( திருநீற்றின் தன்மைகளை நூலில் பார்த்து உணர்வது) பெருமைகளை பயிலப்படுவது நீறு

39: பாக்கியமாவது நீறு

40: அறியாமையால் மூழ்கும் துயிலை தடுப்பது நீறு

41: மும்மலங்களை ( ஆணவம்,கன்மம்,மாயை) அகற்றி சுத்தம் செய்வது நீறு

42: சிவ பக்தனான இராவணன் விரும்பி அணிவது நீறு

43: அதன் ( திருநீற்றின்) பெருமைகளை எண்ணி இன்புறத் தகுவது நீறு

44: பாரசக்தி ( பார்வதி அம்மை அம்சம்) வடிவமானது நீறு

45: எல்லா பாவங்களையும் ( பஞ்ச மகா பாவங்கள்) நீக்குவது நீறு

46: தராவணமாவது ( அசுரர்கள் விரும்பி அணியும்) (தரா -சங்கு) நீறு

47:தத்துவங்களாவது ( 36 தத்துவங்கள் மற்றும் 60 தாத்வீகங்கள்) நீறு

48: திருமாலும்
 நான்முகனும் அறியாதது நீறு

49: மேலுறையும் ( கவசமாக) தேவர்கள் காப்பாக மேல் அணிவது நீறு

50: பிறவிப் பிணி ( அறியாமை என்ற இருள்) அடையும் உடலிடர் தீர்த்துப் பிறவி அறுப்பது நீறு

51 : புத்தரும் சமணரும் காண அவர்கள் கண்களை திகைக்கச்செய்வது நீறு

52: அதை திருவைந்தெழுத்தை ( சிவாயநம) கருதி தியானிக்க இனியது நீறு

53: எண் ( எட்டு திசைகளிலும்) திசைகளிலும் சிவமே பரம்பொருள் என வாழும் மெய்ஞானிகள் ஏற்றிப் போற்றுவது நீறு

54: அண்டமெல்லாம் வாழும் சிவனடியார்கள் பணிந்து போற்றுவது நீறு

55: பாண்டியனின் தீப்பிணியை உலகோர் முன் திருநீற்றின் பெருமைகளை பாட அவன் பிணி தீர்த்தது நீறு

இவ்வாறு திருநீற்றின் பெருமைகளை சொல்லிக்கொண்டே இருக்கலாம் ஆகவே திருநீறு நமக்கெல்லாம் கவசம் போல் உடலில் உள்ள உயிரை ஈடேற்றும் ஒரு சிறந்த மருந்தாகும்
இந்தப் பிறவி என்னும் நோயை தீர்க்க வல்லமை வாய்ந்த மாமருந்தாகும் திருநீறு எனவே சிவனடியார்கள் எப்போதும் திருநீற்றை பூசிக்கொண்டே இருக்க வேண்டும்

திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment

Followers

தருமபுர ஆதீனத்தின் சொந்தமான 27 கோவில்கள் உள்ளன.

தருமபுர ஆதீனம் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை- தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ளது. வரலாறு தருமபுர ஆதீனம் பொ.ய...