Friday, October 27, 2023

சந்திரகிரகணத்தில் வரும் ஐப்பசி அன்னாபிஷேகம்...எந்த நேரத்தில், எப்படி வழிபட வேண்டும்?

சந்திரகிரகணத்தில் வரும் ஐப்பசி அன்னாபிஷேகம்...எந்த நேரத்தில், எப்படி வழிபட வேண்டும்?
பெருமாளை அலங்காரப் பிரியர் என்பது போல் சிவனை அபிஷேகப் பிரியர் என்பார்கள். ஒவ்வொரு பொருள் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வது ஒவ்வொரு விதமான பலனை தரும். அது போல் அன்னத்தால் அபிஷேகம் செய்தால் பிறவா நிலை கிடைக்கும். இதையே நம் முன்னோர்கள் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பார்கள். ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் ஐப்பசி மாதத்தில் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது பாவங்கள் அனைத்தையும் போக்கக் கூடியதாகும்.


    
ஐப்பசி பெளர்ணமி நாளில் தான் சந்திரன், தனது சாபங்கள் முழுவதுமாக நீங்கி, பதினாறு கலைகருடன் தனது கதிர்களை வீசி பிரகாசமாக காட்சி அளிப்பார். இந்த நாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு திருமணம், குழந்தை பாக்கியம், கணவரின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஆகியன கிடைக்கும். சந்திரனை முடியில் சூடி காட்சி தரும் சிவனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவது  சந்திரகிரகணத்தில் வரும் ஐப்பசி அன்னாபிஷேகம்...எந்த நேரத்தில், எப்படி வழிபட வேண்டும்?
ஐப்பசி அன்னாபிஷேகம் :
ஐப்பசி அன்னாபிஷேகம் :

சிவ பெருமானை வழிபட்டு, அவருடைய அருளை பெறுவதற்குரிய சிறப்பான நாட்களில் ஒன்று பெளர்ணமி. அனைத்து மாதங்களிலும் பெளர்ணமி வந்தாலும் கார்த்திகை மற்றும் ஐப்பசி மாதங்களில் வரும் பெளர்ணமிகள் சிவனடியார்களுக்கு மிக முக்கியமான ஒரு நாளாகும். கார்த்திகை பெளர்ணமி அன்று திருவண்ணாமலை தீபம். 

ஐப்பசி அன்னாபிஷேக பலன்கள் 

சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுவதே அன்னாபிஷேகம் ஆகும். இன்றைய தினம் நாம் அபிஷேகம் செய்யம் ஒவ்வொரு பருக்கை அன்னத்திலும் சிவ பெருமான் எழுந்தருளி காட்சி தருவதாக ஐதீகம். அதனால் அன்னாபிஷேக தரிசனம் கண்டால், பல கோடி லிங்கங்களை ஒரே நேரத்தில் வழிபட்ட பலன் நமக்கு . இதனால் கடன் தீரும், வறுமை நீங்கும், பாவங்கள் தீரும், செல்வ வளம் சேரும், தரித்திரம் என்பது ஏற்படாது. ஒவ்வொரு யுகத்திலும் உயிர்கள் ஒவ்வொரு பொருளை ஆதாரமாக சொண்டு வாழ்வதை போல், கலியுகத்தில் உணவை ஆதாரமாகக் கொண்டே உலகம் இயங்கி வருகிறது.



ஒரு உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கக் கூடிய உணவைக் கொண்டு, சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும். இந்த ஆண்டு ஐப்பசி மாத பெளர்ணமி அக்டோபர் 28 ம் தேதி சனிக்கிழமை வருகிறது. இதே நாளில் இந்த ஆண்டின் கடைசி சந்திரகிரகணமும் நிகழ உள்ளது. இதனால் கிரகணத்தன்று அன்னாபிஷேகம் செய்யலாமா? எந்த நேரத்தில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என்ற குழப்பம் பக்தர்களிடம் எழுந்துள்ளது. இதனால் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதற்கு உரிய சரியான நேரம் 
எது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்


​சந்திர கிரகணத்தில் வரும் அன்னாபிஷேகம் :
​சந்திர கிரகணத்தில் வரும் அன்னாபிஷேகம் :

இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் அக்டோபர் 28 ம் தேதி இரவு 11.31 மணிக்கு துவங்கி, அக்டோபர் 29 ம் தேதி அதிகாலை 03.36 வரை உள்ளது. ஏது பகுதி நேர சந்திர கிரகணமாகவே நிகழ உள்ளது. இந்தியாவில் இந்த சந்திர கிரகணத்தை காண முடியும் என சொல்லப்படுகிறது. பொதுவாக கிரகண நேரத்தில் கோவில்கள் அடைக்கப்பட்டு விடும், சுப காரியங்கள் எதையும் செய்ய மாட்டார்கள். ஆனால் இந்த சந்திர கிரகணமானது இரவு நேரத்திலேயே நிகழ்வதால், இந்த கிரகணத்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாது என சொல்லப்படுகிறது. இதனால் ஐப்பசி மாத பெளர்ணமி வழிபாடு மற்றும் அன்னாபிஷேகம் ஆகியவற்றை வழக்கம் போல் செய்யலாம்.

அன்னாபிஷேகம் செய்ய ஏற்ற நேரம் :
அன்னாபிஷேகம் செய்ய ஏற்ற நேரம் :

அக்டோபர் 28 ம் தேதி அதிகாலை 04.01 மணிக்கு துவங்கி, அக்டோபர் 29 ம் தேதி அதிகாலை 02.27 வரை பெளர்ணமி உள்ளது. அன்று சனிக்கிழமை என்பதால் காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலம் உள்ளது. அதனால் அன்னாபிஷேகம் செய்து வழிபடுபவர்கள் காலை 07.45 முதல் 08.45 மணிக்குள் வழிபாட்டை மேற்கொள்ளலாம். அந்த நேரத்தில் முடியாதவர்கள் காலை 10.35 மணி முதல் பகல் 01.20 மணிக்குள் வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். பகல் 01.30 முதல் 3 மணி வரை எமகண்டம் உள்ளது. மாலையில் வழிபடுபவர்கள் 4 மணிக்கு மேல் செய்யலாம். அதே சமயம் கிரகணம் துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதால் இரவு 9 மணிக்கு வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...