Wednesday, November 1, 2023

தொழில் முடக்கத்தை நீக்கி.. நல்ல லாபத்தை தரும்.. வெள்ளெருக்கு விநாயகர்..!!

_வெள்ளெருக்கு விநாயகர்..!!_


தொழில் முடக்கத்தை நீக்கி.. நல்ல லாபத்தை தரும்.. வெள்ளெருக்கு விநாயகர்..!!

உலகெங்கிலும் பல கோடி வகையான செடிகள், தாவரங்கள், மூலிகை வகைகள் இருக்கின்றன. அவற்றில் பல தெய்வீக ஆற்றல் வாய்ந்தவையும், உயிர் காக்கும் தன்மையும் கொண்டதுமாகும். அந்த வகையில் வெள்ளெருக்கு செடிக்கு தனி சக்தி உண்டு.

வெள்ளெருக்கை தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என சங்க கால நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.

வெள்ளெருக்கு செடி பல அற்புதமான ஆற்றல்கள் கொண்ட தெய்வீக மூலிகையாகும். இந்த வெள்ளெருக்கு செடியை பற்றி சித்தர்கள் கண்டுபிடித்த சித்த வைத்தியத்தில் மனிதர்களின் பல நோய்களை தீர்க்கும் ஒரு அற்புதமான விருட்சமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

எருக்கன்செடி என்பது ஒரு தெய்வீக மரமாக கருதப்படுகிறது. நவகிரகங்களில் எருக்கன் செடி சூரிய பகவானின் தன்மை கொண்ட ஒரு செடியாக இருக்கிறது. மேலும், இந்த வெள்ளை எருக்கன் செடி சிவபெருமானின் அம்சம் கொண்டதாக கருதப்படுகிறது.

வெள்ளை எருக்கன் செடி வீட்டிற்குள் துஷ்ட சக்திகள் மற்றும் தீய மாந்திரீக சக்திகள் நுழையாதவாறு தடுக்கும் ஆற்றல் மிக்க பாதுகாப்பு கவசம் போல் செயல்படுகிறது.

வெள்ளெருக்கு வேரினால் செய்த பிள்ளையாரை வீட்டில் வைத்து வணங்கினால் புண்ணியம் பெருகும். தன ஆகர்ஷண சக்தியை அள்ளிக் கொடுக்கக்கூடிய வல்லமையானது இந்த வெள்ளெருக்கு விநாயகருக்கு அதிகமாக உள்ளது.

கண் திருஷ்டி படாமல் இருக்க..
குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க..

தொழில் முடக்கம் நீங்கி நல்ல லாபம் பெற..
பணத்தட்டுப்பாடு நீங்க..
வேலை கிடைக்க..

வீட்டில் வெள்ளெருக்கு விநாயகரை நாள்தோறும் தவறாது வழிபட்டு வர வேண்டும்.

வெள்ளெருக்கு பிள்ளையாரை புதியதாக வீட்டுக்கு வாங்கி வந்தவுடன் விநாயகர் சிலை முழுவதும் அரைத்த மஞ்சளை பூசி நிழலிலேயே உளற வைத்துக்கொள்ள வேண்டும். இதன்பிறகு உங்களது பூஜையறையில் வைத்து வழக்கம்போல் வழிபடலாம்.

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...