*கந்த சஷ்டி* *ஆரம்பம். சிறப்பு* *பதிவு* .
*விரதம் இருப்பவர்களின் கவனத்திற்கு* .
கந்தசஷ்டி விரதத்தை கடைபிடிக்க வேண்டிய முறை. 🙏🏽
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும்.
அத்தகைய ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாக சொல்லப்படுவது கந்தசஷ்டி விரதம். கந்தனின் அருள் பெற, கந்தசஷ்டி விரதத்தை எவ்வாறு கடைபிடிப்பது எனப் பார்ப்போம்.
*கந்தசஷ்டி விரதம்* *இருக்கும் முறை* :
🌟 விரதத்திற்கு முதல் நாளே வீட்டினை சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம்.
🌟 கந்தசஷ்டி ஆரம்பம் முதல் இறுதி வரை விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் நீராட வேண்டும்.
🌟 காலையிலும், மாலையிலும் குளித்து விட்டு வீட்டிலுள்ள சுவாமிக்கு பூக்களை வைத்து அகல் விளக்கு ஏற்ற வேண்டும்.
🌟 முருகன் கோவில்களுக்கு சென்று விளக்கேற்றி அர்ச்சனை வழிபாடு செய்ய வேண்டும்.
🌟 விரதம் மேற்கொள்ளும் நாளில், முருகனை மனதில் நினைத்துக்கொண்டு கந்தசஷ்டி கவசம், கந்த குரு கவசம், சண்முக கவசம் போன்ற கவச நூல்களை பாட வேண்டும்.
🌟 திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தசஷ்டி கவசம் மற்றும் கந்தரது அனுபூதி போன்ற நூல்களையும் ஓதலாம்.
🌟 இந்த விரதத்தை அன்ன ஆதாரமின்றி ஆறு நாட்களும் கடைபிடிக்கலாம். இதை செய்ய முடியாதவர்கள் சஷ்டி அன்று முழு விரதம் இருந்து கந்தனை வழிபடலாம்.
🌟 பகலில் பழம் பால் மட்டுமே உண்ண வேண்டும். உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் எளிய உணவாக காலையில் சிற்றுண்டி அருந்தலாம்.
🌟 காலை முதல் மாலை வரை குறைந்த அளவு பானம் மட்டும் அருந்தி மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு விரதத்தை நிறைவு செய்யலாம் அல்லது இரவு பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
🌟 மலைக்கோவில்களில் மலையை வலம் வந்தால் மிகுந்த புண்ணியம் உண்டாகும். கோவில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது.
🌟 கோவில்களில் தங்கி விரதம் இருக்க முடியாதவர்கள் அவரவர் இருப்பிடத்திலேயே விரதம் இருக்கலாம்.
🌟 இவ்வாறு ஆறுநாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து ஆறாவது நாளில் சூரசம்ஹாரம் என்னும் நிகழ்ச்சியை முருகன் கோவிலில் தரிசனம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும்.
🌟 கந்தசஷ்டி விரதத்தை அவரவர் உடல் நிலைகளுக்கு தகுந்தவாறு அனுசரிக்க வேண்டும்.
🌟 முருகனின் துதியை போற்றுவோம். துன்பம் இல்லாமல் நன்மையை பெறுவோம்.
அரகரா அரகரா அரகரா அரோகரா அரோகரா அரோகரா
ஓம் முருகா சரணம் சரணம்
ஓம் முருகா சரணம் சரணம்
ஓம் முருகா சரணம் சரணம்..!!
🪷🪷🪷
No comments:
Post a Comment