Saturday, November 25, 2023

கார்த்திகை தீபம் பற்றிய பதிவுகள் :*

*கார்த்திகை தீபம் பற்றிய பதிவுகள் :*
திருக்கார்த்திகை தீபத்திருநாள் உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் காலம் காலமாக கொண்டாடப்படும் ஒரு பழமையான பண்டிகையாகும். சங்க இலக்கியங்களிலும், புராணக்கதைகளிலும் கூட திருக்கார்த்திகை திருநாள் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

பஞ்சப்பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்ட பின்னரே நாம் அனைவரும் நம் வீட்டில் தீபங்களை ஏற்ற வேண்டும். இந்நாளில் சிவபெருமானின் நாம் ஏற்றும் ஜோதி வடிவத்தில் காட்சி தருகிறார்.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை திருத்தலம்.

காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் தான் இந்த திருவண்ணாமலை! பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் இந்த திருக்கோயில் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233வது தேவாரத்தலமாகும். 

பழமையான திருக்கார்த்திகை திருவிழா
நம் மனித வாழ்வில் தீபம் என்ற ஒன்று இன்றியமையாததாக இருந்து வருகிறது. 

விளக்கை எப்படி ஏற்ற வேண்டும், அதன் தீபம் எப்படி இருக்க வேண்டும் என்பதும் கூட புராணங்களில் சொல்லப் பட்டிருக்கிறது. 

தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள அனைவராலும் அனுசரிக்கப்படும் தீபத் திருவிழாவான இது தமிழ் நாட்காட்டியின்படி கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. 

ஆனால் இந்த விழா எப்போது ஆரம்பித்தது என்பதற்கான சரியான தகவல்கள் இல்லை. அந்த அளவிற்கு இந்த திருவிழா பழமையானதாம்!

*திருக்கார்த்திகை திருவிழா 2023*

கார்த்திகை மாதம் தொடங்கிய முதல் நாளில் இந்தாண்டு கார்த்திகை தீபத்திருநாள் கடந்த 17ம் தேதி வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 

வெள்ளி கற்பக விருக்ஷம், வெள்ளி ரதம், ரிஷப வாகனம் என கோலாகலமாக தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. 

நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலை 6 மணிக்கு மலை மேல் பிரமாண்டமாக மகா தீபம் ஏற்றப்படும்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் நெல்லிக்குப்பம். 



No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...