1. அண்ணாமலையாரை தரிசித்தால் உயிர்களைப் பற்றியுள்ள கொடிய வினைகள் அனைத்தும் நீங்கும்.
2. அண்ணாமலையாரை நேரில் வந்து தரிசித்தாலும் தூரத்தில் இருப்போர் மனத்தால் நினைத்தாலும் போதும் வேதாந்தத்தின் உண்மைப் பொருளான ஆத்ம ஞானம் கிடைக்கும்.
3. திருவண்ணாமலையில் வசிப்பவர்களுக்கு குருவினுடைய தீட்சை முதலிய எதுவும் இல்லாமலேயே இறைவனோடு இரண்டறக் கலக்கும் முக்தி கிடைக்கும்.
4. திருவண்ணாமலை தீபத்தை ஒருதரம் பக்தியுடன் பார்த்தவன் சந்ததி தழைக்கும். அவனுக்கும் மறுபிறப்பும் இல்லை.
5. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படுதை கண்டவர்களின் மானிடத் தன்மை நீங்கி ருத்ர தன்மை உண்டாகிறது. அவன் பாக்கியவான் ஆகிறான்.
6. கார்த்திகை தீபத்தன்று காமம் முதலான குணங்களை விட்டு பெரும் முயற்சி செய்தாவது தீபத்தை தரிசிக்க வேண்டும்.
7. திருக்கார்த்திகை தினத்தன்று ஈஸ்வரனை ஒரு வில்வத்தால் பூஜித்தவன் கூட முக்தி அடைகிறான்.
8. தீப தரிசனத்தால் கங்கை முதலான சகல புண்ணிய தீர்த்த பலன்களும் ஒருங்கே உண்டாகும்.
9. கர்த்திகை பவுர்ணமி அன்று சந்திர பகவான் 16 கலைகளுடன் பரிபூர்ணமாக பிரகாசிக்கிறான்.
அந்த அமிர்த கிரணங்களை ஒரு மனிதன் தன் உடலில் ஏற்றால் அவனுக்கு அற்புதமான மனோ சக்தியும், தெய்வ பலனும் கிடைக்கும்.
10. திருவண்ணாமலையில் கிரி வலம் வருவது பேறுகள் எல்லாவற்றையும் தருவதாகும்.
சென்ற ஜென்மங்களில் செய்த பாவங்கள் கிரிவலம் செய்கிற ஒவ்வொரு அடியிலும் நசிந்து விடும்.
No comments:
Post a Comment