Monday, November 13, 2023

அருள்மிகு ஶ்ரீ மிருத்யுஞ் ஜயேஸ்வரர் திருக்கோயில், மஞ்சக்குடி , குடவாசல் தாலுகா, நார்சிங்கம்பேட்டை, திருவாரூர்




அருள்மிகு ஶ்ரீ மிருத்யுஞ் ஜயேஸ்வரர் திருக்கோயில், மஞ்சக்குடி , குடவாசல் தாலுகா, நார்சிங்கம்பேட்டை, திருவாரூர்

🙏🏻தென்னாடுடைய  சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி🙏🏻


தென்னிந்திய  கட்டடக்கலையில் கட்டப்பட்டுள்ள இந்த சிவாலயம் 800 ஆண்டுகள் முதல் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவத்தலமாகும் , திருக்கோவில் முழுக்க முழுக்க பெருமான் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது .



🛕மூலவர் :
மிருத்யுஞ் ஜயேஸ்வரர்


🛕அம்மன்/தாயார்: பாலாம்பிகா


🛕தல விருட்சம் : வில்வம்



🛕தீர்த்தம் : கெந்தம்




🛕ஆகமம்/பூஜை : சிவ ஆகமப்படி பூஜை




🛕புராண பெயர் : நரசிம்மபுரம்



🛕ஊர் ; நார்சிங்கம்பேட்டை


🛕மாவட்டம் :திருவாரூர்



🛕மாநிலம் :தமிழ்நாடு



🛕திருவிழா:சிவராத்தி உள்ளிட்ட சிவனுக்குரிய அனைத்து விசேஷங்களும் கொண்டாடப்படுகின்றன.


🛕தல சிறப்பு:மூலவர் தவிர்த்து இங்குள்ள பிற விக்கிரஹங்களுக்கு புதிதாக பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது.
 மூவலருக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.


🛕பொது தகவல்: கிழக்கு மற்றும் மேற்கு இருபக்கம் வாயிலில் கிழக்குப்பக்கம் பார்த்த வகையில் மூலவர், மகாகணபதி, சுப்ரமணியர், வள்ளி தெய்வானையுடன் தனித்தனி சன்னிதியில் (தலா ஒரு கலசம் அமைக்கப்பட்ட விமானம்) அருள்பாலிக்கின்றனர் தெற்குபக்கம் பார்த்த வகையில் தாயார்
பாலம்பிகை சூரியன், பைரவர், சைனபெருமாள் மேற்குப் பக்கம் பார்த்த வகையிலும், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் தெற்குபக்கம் பார்த்த வகையில்
அருள்பாலிக்கின்றனர். 




🛕கோயிலுக்கும் வடக்குப் பக்கம் மிகப்பெரிய தீர்த்தக்குளம் உள்ளது. 



🛕கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்கள் தனித்தனி சன்னிதியில் அருள்பாலிகின்றனர். 


🛕 புதியதாக கோயில் கட்டி கடந்த 2013 ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடத்தினர். 



🛕2014 ஜனவரி 25-ம்தேதி புதிதாக துர்க்கை பிரதிஷ்ட்டை செய்துள்ளனர்.


🛕பிரார்த்தனை
திருமணம் மற்றும் புத்திரபாக்கியம் உள்ளிட்ட சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கவும் பிரார்த்திக்கின்றனர்.



🛕நேர்த்திக்கடன்:
பிரார்த்தனைகள் நிறைவேறியதும் பக்தர்கள் அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜை செய்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துக்கின்றனர்.



🛕தலபெருமை:
மஞ்சக்குடி பஸ் நிலையத்தின் அருகில் சோழ சூடாமணி ஆற்றின் வடக்கே ஒரு கி.மீ.தொலைவில் கோயில் உள்ளது. 


🛕சீனிவாச பெருமாள், ஆலங்குடி குருபகவான், வலங்கைமான் மகா மாரியம்மன் இக்கோயிலுக்கு சிறப்பு சேர்க்கிறது.



🛕தல வரலாறு:1000-1500 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது கோயில் அமைக்கப்பட்டுள்ள இப்பகுதியில் காடு சூழ்ந்து இருந்தது. அப்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் கால்நடைகள் காணாமல் போன போது தேடி சென்ற நிலையில் காட்டில் லிங்கம் மட்டும் தெரிந்துள்ளது.



🛕 அப்பகுதியினர் காடுகளை அழித்து பார்த்த போது கோயில் இடிந்து லிங்கம் இருப்பது தெரிந்தது. அதன் பின் கோயில்கட்ட முன் வந்த நிலையில் மஞ்சக்குடி சுவாமி தயானந்த சரஸ்வதி' அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.




🛕கோவை தடாகம் ஜெகநாதசுவாமி மூலம் ஆலோசனை பெற்று இக்கோயில் ஈசன் முக்தியை வென்றவர் என கண்டறியப்பட்டு எம பயம் போக்க முக்தீஸ்வரர் என்ற பெயர் கண்டறியப்பட்டுள்ளது. அதன் பின் மிருத்யுஞ்ஜயேஸ்வரர் பெயர் சூட்டி கோயில் கட்டும்பணி துவங்கியது. 



🛕சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமி அவர்கள் முயற்சியா லும், ஸ்ரீராம் குழுமம் கண்ணன் அவர் புதல்வர் மணி ஆகியோர் மூலம் பொருளதவி செய்து, புதிதாக கோயில் கட்டும் பணி முடிந்து கடந்த 2013 ஜனவரியில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தற்போது சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் தம்பி சீனிவாசன் அவர்களின் பராமரிப்பில் கோயில் செயல்படுகிறது.



🛕சிறப்பம்சம்:மூலவர் தவிர்த்து இங்குள்ள பிற
விக்கிரஹங்களுக்கு புதிதாக பிரதிஷ்டை செய்து அபிஷேகம் செய்யப்படுகிறது. மூவலருக்கும் அபிஷேகம் செய்யப்படுகிறது.



🛕திருக்கோவில் முகவரி:

அருள்மிகு மிருத்யுஞ் ஜயேஸ்வரர் திருக்கோயில், மஞ்சக்குடி அஞ்சல், குடவாசல் தாலுகா, நார்சிங்கம்பேட்டை, திருவாரூர்-612610.

போன்:

+91 89399-11550



🙏🏻 நற்றுணையாவது நமசிவாயமே 🙏🏻


சித்தமெல்லாம்  சிவமயத்துடன் கடையேன் ஞான சிவம் என்கின்ற ஜெயம் ஶ்ரீ கா பா.ஞானசேகரன்.
9976460143


 🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻

No comments:

Post a Comment

Followers

ஆலயங்களில் வலம் வரும் முறைகளும் அவற்றின் பலன்களும்

*ஆலயங்களில் வலம் வரும் முறைகளும் அவற்றின் பலன்களும் பற்றிய பதிவுகள்* : கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு, இறைனின...