Monday, November 27, 2023

பரம் பொருளை நினைத்து சொல்ல வேண்டிய போற்றிகள் .....

*காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரையில்
பரம் பொருளை நினைத்து சொல்ல வேண்டிய போற்றிகள் .....
 
1.காலையில் துயில் எழும் போது :-

அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி

2.குளிக்கும் போது :-

சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

3.கோபுர தரிசனம் காணும் போது :-

தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

4.வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது :-

காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

5.நண்பரைக் காணும் போது :-

தோழா போற்றி துணைவா போற்றி

6.கடை திறக்கும் போது :-

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

7.நிலத்தில் அமரும் போது :-

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

8.நீர் அருந்தும் போது :-

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

9.அடுப்பு பற்ற வைக்கும் போது :-

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

10.உணவு உண்ணும் போது :-

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

11.மனதில் அச்சம் ஏற்படும் போது :-

அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

12.உறங்கும் போது :-

ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி !

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...