🔥#_தாமிரபரணி மகாத்மியம்..🙏🏼
🔥🙏🏼#திருநெல்வேலியின் தாமிரபரணி வரலாறு 💐
💐#தாமிரபரணியில் புஷ்கர திருவிழா 💐
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர் பூக்கிறது. அதுபோல் தான் கும்பகோணம் மகாமகமும். அதுவும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் வருகிறது. ஆனால் தாமிரபரணியில் ஆண்டுக்கு ஒரு முறை வைகாசி விசாகமான பரணி ஆறு பிறந்த நாளில் எங்கு குளித்தாலும் மகாமகத்தில் குளித்த புண்ணியம் கிட்டுகிறது.12 வருடம் காத்து இருக்காமல் 1 வருடத்தில் அந்த புண்ணியத்தினை தருபவள் தாமிரபரணி தாய்.
'🙏🏼#அந்த_அளவிற்கு சிறப்பு வாய்ந்த தாமிரபரணி ஆற்றில் புஷ்கர திருவிழாவும் நடைபெறுகிறது. ஆனால் அத்திருவிழா 12 ஆண்டுக்கு ஒரு முறைதான் தாமிரபரணியில் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா அன்று தாமிரபரணியில் குளித்தால் இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணி நதிகளிலும் குளித்த புண்ணியம் கிட்டுகிறது.
அந்த திருவிழா எப்போது நடைபெறுகிறது என்பது குறித்த தகவல்கள்:
👍#ஆந்திர மாநிலத்தில் புஷ்கரம் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்காக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது. கௌதம ரிஷ அவருடைய தர்மபத்தினியான அகலிகையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த நேரத்தில் தான் அந்த சம்பவம் நடந்தது. அகலிகையின் அழகைக் கண்டு இந்திரன் மதி மயங்கினான். அகலிகையை அடைய அவன் திட்டம் போட்டான்.
ஒரு நாள் கௌதமர் இல்லாத நேரத்தில் அகலிகை இருக்கும் இடத்துக்கு வந்தான். அவளிடம் தவறாக நடக்க முயற்சித்தான். இதைக்கண்ட ரிஷp இந்திரனை சபித்தார். இந்த சாபத்தால் துவண்டு போன இந்திரன் அதிலிருந்து விடுபட பிரம்மனை நோக்கி கடும் தவம் புரிந்தான். இந்திரனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தனது கமண்டலத்திலிருந்து புஷ்கர கங்கையை கீழே விட்டார். அதில் நீராடி இந்திரன் தனது பாவத்திலிருந்து மீண்டான்.
நவக்கிரகங்களில் ஒன்றாக குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தான். அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினான். குரு பகவானை நோக்கி "உனக்கு என்ன வேண்டும" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த குருபகவான்," எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்" என்று கேட்டார். குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார்
🔥🙏🏼#பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க முடிவு செய்யப்பட்டது.
👍#விருச்சிகம் (தாமிரபரணி):
அதன்படி புஷ்கரம் மேஷம் (கங்கை), ரிஷபம் (நர்மதை), மிதுனம் (சரஸ்வதி), கடகம் (யமுனை), சிம்மம் (கோதாவரி) கன்னி (கிருஷ்ணா), துலாம் (காவேரி) விருச்சிகம் (தாமிரபரணி), தனுசு (சிந்து), மகரம் (துங்கபத்திரா), கும்பம் (பிரம்ம நதி), மீனம் (பிரணீதா) என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகிய தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.
மேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் ராசி நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது. விருச்சிக ராசிக்கு வரும்பொழுது நாம் தாமிரபரணி ஆற்றில் புஷ்கரம், சிவன், பிரம்மன், இந்திரன் ஆகியோர் தங்கியிருக்கும் வேளையில் நாமும் குளித்து மகிழ்வோம்.விருச்சிக ராசிக்கு குருபகவான் வரும் போது இந்த விழாவை தமிழ் அன்னை தாமிரபரணி நல அறக்கட்டளை சார்பாக கொண்டாடப்பட்டது. அதன் நிறுவனர் ஆதித்தன் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்த காலத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட யாத்திரியர்கள் ஆந்திராவில் இருந்து தாமிரபரணி நதிக்கு புனித நீராட வந்தனர். இதை கண்ட பிறகுதான் தாமிரபரணியில் இப்படி ஒரு அற்புதம் உள்ளெதென்று இங்குள்ள மக்களுக்கே தெரிய வந்தது. இரண்டு நாள்களாக நெல்லையில் இருந்து வெளிவரும் பத்திரிக்கைகளிலில் எல்லாம் இந்த திருவிழா குறித்த செய்திகள் தான் வந்தது.
அந்த காலகட்டத்தில் தாமிரபரணி நதியில் தினமும் குளித்து வரும் லட்சகணக்கான மக்கள் எல்லாம் தங்களை அறியாமலேயே இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளிலும் குளித்த புண்ணியத்தினை பெற்றனர். அந்த பாக்கியம் தாமிரபரணி கரையில் வசித்த மக்களுக்கு கிடைத்தது. இதை தான் அறிஞர் பெருமக்கள் எல்லாம் விரும்பினார்கள். அதன்பின் தாமிரபரணி அறக்கட்டளை ஒரு சபதம் எடுத்தது. அதன்படி தாமிரபரணி கரையை எல்லாம் துப்புறவு செய்யவேண்டும் என்று. அதற்கான நடவடிக்கைகளிலும் அநத அறக்கட்டளை இறங்கியது.
ஆனால் இந்த புத்தகம் அச்சேறும் வரை அதற்கான பணி துவங்கவில்லை தாமிரபரணி ஆற்றில் படகு ஓடும் ஒரே கிராமம் புலவன்பட்டிதான். இந்த ஊரின் எதிர்புறம் கேஸ் கீப்பர் தோப்பு, திருப்பதியாபுரம், இந்திரா நகர், கோரைகுளம் போன்ற கிராமங்கள் உள்ளது. இங்கு வாழும் மிக அதிகமான மக்கள் பிழைப்பு தேடி வெளிய+ரிலிருந்து வந்த மக் கள். இவர்கள் செல்வ செழிப்புடன் வாழ இங்குள்ள விளைநிலங்கள் உதவியதால் மில் தொழில் போக மீதி நேரங்களில் விவசாயம் செய்ய முன்வந்தனர்.
புலவன்பட்டி கிராமத்தில் உள்ள பாறைக்கு வித்தியாசமான பெயர்கள் நிலவி வருகிறது. இதில் ஷவில்லடிச்சான் பாறை| என்ற பெயருடன் ஒரு பாறை உள்ளது. இப்பாறைக்கு ஏன் இப்பெயர் வந்தது என்று கேட்டால் இந்த கிராம மக்களிடம் இருந்து இந்தபதில் வந்தது. "இந்தப் பாறை அருகில் தான் வேலையில்லாத நேரங்களில் பலர் நின்று ஊர் வம்புகளை பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பேச்சு வில்லடித்ததை போல் மாறி மாறி வரும். அதற்கு முடிவே வராது. ஆகவேதான். இந்த பாறைக்கு "வில்லடிச்சான் பாறை" என்று பெயர் வந்தது" என்றனர்.
சிவந்திபுரத்தில் தாமிரபரணி வடக்கு கரைக்கு செல்லும் பாதையின் பெயர் தைப்பூச ரோடு. இந்த ரோட்டுக்கு இப்பெயர் வர காரணம் இங்கு தைப்பூச மண்டபம் ஒன்று உள்ளது. முன்பு வடகரையில் இருந்து விறகு வெட்டி வருபவர்களும், வேட்டையாடி மான், மிளா போன்ற மிருகங்களை கொன்று அதை தோளில் போட்டுக் கொண்டு ஆற்றை கடந்து தென்கரைக்கு ஒடிவருவார்கள். அவர்கள் காட்டிலாக அதிகாரிகளிடம் பிடிபடாமல் ஓடிவரும்போது, தங்கள் கடந்து வந்த தொலைவுகளை அவர்கள் அடையாளம் சொல்லிக்கொண்டே ஒடிவருவார்கள்.
அவர்கள் அந்தந்த இடங்களில் உள்ள கல்களுக்கு பெயர் வைத்து இது சின்னக் கடவு. இது பெரிய கடவு என்று அதை தாண்டும்போது சத்தமாக சத்தம் போட்டுக் கொண்டு ஓடி வருவார்களாம். ஆகவே அந்த மைல் கல்கள் உள்ள இடம் தற்போதும் சின்னக்கடவு. பெரிய கடவு என்று அழைக்கப்படுகிறது.
🔥🙏🏼#அகத்திய மாமுனி தாமிரபரணி நதிக்கரையில் தவபூஜை செய்த இடம் தான் தைப்பூச மண்டபம். இந்த தைப்பூச மண்டபம் பல்லா யிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே உள்ளது. இந்த மண்டபம் அருகே தான் பழைய பாபநாச கோவில் உள்ளது. இந்த மண்டபம் ஆற்றுக்குள் நீராழி மண்டபம் போல் உள்ளது. இதில் ஒரு காலத்தில் மகாராணிகள் குளிக்க கூட பயன் படுத்தி இருக்கலாம். முழுக்க முழுக்க தண்ணீர்குள்ளே பல ஆண்டுகள் இருந்தும் கூட இந்த மண்டபத்தில் ஒரு கீறலோ, ஒரு வெடிப்போ ஏற்படவில்லை. இது ஆச்சரியமானதாகும்.
இந்த மண்டபத்தில் தை மாதங்களில் சிலர் பூஜை செய்தார்களாம். ஆனால் தற்சமயம் எந்த பூஜையும் நடைபெறவில்லை.முன்னர் காலத்தில் இந்த ஊருக்கு மேற்கே தாமிரபரணியில் எந்த அணையும் கட்டப்படவில்லை. தற்சமயம் கோடை மேலழகியான் அணைக்கட்டு மேலணை, கீழணை, சேர்வலாறு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அணைகள் கட்டுவதற்கு முன்னால் திடீர் மழை பெய்தால் 15 நிமிடங்களில் காட்டு வெள்ளம் புலவன்பட்டிக்குள் புகுந்து விடும். அந்த வேளையிலும் கூட தைப்பூச மண்டபம் சேதம் அடையவில்லை.
""""#தொரும் """""'🙏🏼
No comments:
Post a Comment