விநாயகருக்கு ஏன் எலி வாகனம்?
விநாயகருக்கு எலி வாகனமாக இருக்கிறது. வடமொழியில் எலியை மூஷிகம் என்பர்.
அதையொட்டி அவருக்கு மூஷிக வாகனன் என்பது பெயராயிற்று. பெருச்சாளி அல்லது எலியை ஆகு எனவும் அழைப்பர். அதனால் விநாயகர் ஆகுவாகனன் எனப்படுகிறார், அனைத்துச் சிவாலயங்களிலும், விநாயகர் ஆலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும் பெருச்சாளி வாகனங்கள் இருக்கின்றன.
பெருங்கோயில்களில் வெள்ளியாலான மூஷிக வாகனங்களை வைத்திருப்பார்கள். விநாயகர் என்றால் நமது ஞாபகத்திற்கு முதலில் வருவது, விநாயகரின் வாகனமான எலிதான்.
அப்படி கொழுக் மொழுக்கென்று இருக்கும் பிள்ளையார் எதற்காக சின்னஞ்சிறு எலியில் மேல் பயணம் செய்கிறார்.
யானைக்கு சவாரி செய்ய ஒரு சுண்டெலி! விந்தையாக இல்லையா..? ஆனால் இங்குதான் அக்காலக் கலை மேதைகளின் அழகுணர்வும் முரண் நுண்மையும் வெளிப்படுகிறது.
எதனால் என்றால் அது ஒரு அடையாளம் என்பதற்காக. மனிதனுள் ஆசைக்கு எலி அடையாளம். அதற்கு இருப்பதோ சிறு வயிறு. துளைகளை தோண்டி குவியல் குவியலாக மண்ணை போடுவது எல்லோரும் அறிந்ததே.
பார்க்கும் எல்லாவற்றையும்
கடித்து உண்ணும்.காரணம்
அதனுடைய பல் வளர்ச்சியும் ஒன்று என்பது
ஒரு விஞ்ஞான கருத்தாகும்.
உண்மையில் மனிதன் விஷயத்திலும் நடப்பது அதுவே. மனிதனால் எவ்வளவு சாப்பிட முடியும். ஆனாலும், தலைமுறை தலைமுறையாக சம்பாதித்து குவியல் குவியலாக சொத்தை சேர்த்து வைப்பான் மனிதன்.
இதற்காக எவ்வளவு போராட்டமோ, கஞ்சத்தனமோ… இந்த விஷயத்தில் மனிதனுக்கு எலிக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா என்று சிந்தித்து பார்க்கலாம்.
அதனால் தான் எலி மீது விநாயகப் பெருமான் உட்கார்ந்தது போல நம் முன்னோர்கள் ஒரு புராண சின்னத்தை ஊகித்தார்கள். மனதில் உள்ள ஆசைகளை அது போல் நாம் அழுத்தி வைக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே அதிலுள்ள சூட்சுமம்.
ஆசைகளை அடக்கி வைத்தால் மனிதன் மனதிற்கு எஜமானன் ஆவான். இல்லை எனில் அடிமை ஆவான். அதுதான் அந்த அடையாளத்தின் உள்ளர்த்தம். விநாயகர் மூஷிகத்திற்கு எஜமானர் ஆக வேண்டும் என்பதே அதில் உள்ள சூட்சுமம்.
No comments:
Post a Comment