Thursday, December 28, 2023

வீட்டில் பல்லி இருந்தால் பண கஷ்டம் வருமா? அல்லது தரித்திரம் பிடிக்குமா?

வீட்டில் பல்லி இருந்தால் பண கஷ்டம் வருமா? அல்லது தரித்திரம் பிடிக்குமா? என்பது உங்களுக்கு தெரியுமா ?
படம் ஸ்ரீரங்கம் கோயில் பல்லி சொர்க்கவாசல் கதவுக்கு பல்லி அருகில் அமைந்துள்ளது
கரப்பான் பூச்சி, வண்டு, தும்பி, பல்லி ஆகியவை இருப்பது மிகவும் இயல்பானது. ஆனால், சிலருக்கு அவை இருப்பது பிடிக்காது. ஏனென்றால், கரப்பான் பூச்சிகள் பல விதமான நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தும். இன்னும் சிலருக்கு வீட்டிற்குள் பல்லி இருப்பது பிடிக்காது. அதை அடித்து வெளியில் துறத்தாமல் நாம் வீட்டிற்குள் நுழைவது இல்லை. ஆனால், சிலர் பல்லி என்ன செய்யப்போகிறது வீட்டில் உள்ள பூச்சிகளை சாப்பிட்டு ஓரமாக இருக்கட்டும் என பரிதாபம் பார்த்தும் விடுவதுண்டு. இவை பெரும்பாலும் ட்டின் சுவர்கள் மற்றும் மூலைகளில் காணப்படுகின்றன. யாரையும் தொந்தரவு செய்வதில்லை.
வீட்டிற்குள் பல்லி  இருப்பதை கண்டாலே நம்மில் பலருக்கும் பிடிக்காது. அதை அடித்து வீட்டை விட்டு துரத்தினால் மட்டுமே பலரது மனம் நிம்மதியாகும். ஆனால், ஜோதிட ரீதியாக வீட்டிற்குள் பல்லி இருப்பது பண வரவையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அந்தவகையில், பல்லியைப் பார்ப்பது சுபம் என்று சிலர் அசுபம் என்றுகூறுகின்றனர். பல்லியை பார்ப்பது நல்லதா கெட்டதா என இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.
பல்லி லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. புதிய வீட்டின் பூஜையறையில் வெள்ளி பல்லி சிலைகளை பயன்படுத்தி பூஜை செய்வது உண்டு. ஏனென்றால், பல்லி வீட்டின் மகிழ்ச்சியையும் செல்வத்தையும் அதிகரிக்கும் என நம்ப்படுகிறது. இவ்வளவு ஏன், தமிழகத்தில் பல்லிக்கு என தனி கோயில் உள்ளது.
காஞ்சிபுரத்தில் இருக்கும் ஒரு பெருமாள் கோயிலில் தங்க பல்லி உள்ளது. இதனை தொட்டு தரிசனம் செய்து விட்டு வந்தால் நல்ல நிகழ்வுகள் நிகழும்.
பூஜையறை மற்றும் வரவேற்பு அறை
வாஸ்து சாஸ்திரத்தின்படி, உங்கள் வீட்டு பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லிகள் தென்பட்டால் அது மிகவும் மங்களகரமானதுஒரு விஷயம். எதிர்க்காலத்தில் அதிக பணவரவை பெறப்போகிறீர்கள் என்பதையும், உங்களுக்கு எந்த பணத்தடைகளும் இருக்காது என்பதையும் இது குறிக்கிறது
. தீப திருநாள் தீப திருநாளான தீபாவளி அன்று
வீட்டில் பல்லியை இருந்தால், ஆண்டு முழுவதும் லட்சுமி தேவி அருள் உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டும் அல்ல, இதனால் மகத்தான மகிழ்ச்சியையும் செல்வத்தையும் பெறுவீர்கள்.
மூன்று பல்லிகள்
வீட்டில் ஒரே இடத்தில் 3 பல்லிகளை சேர்த்து பார்ப்பது என்பது மிகவும் அதிர்ஷ்டம். அதாவது, உங்கள் பூஜை அறையில் மூன்று பல்லிகளை ஒன்றாக பார்த்தால் அது மிகவும் மங்களகரமான ஒரு விஷயம். இதனால், உங்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நீங்கள் ஒரு புதிய வீட்டிற்குள் நுழையும் அதே நேரத்தில் உங்கள் கண்ணுக்கு பல்லி தென்பட்டால், அது மிகவும் மங்களகரமானதாக நம்பப்படுகிறது. அதேமாதிரி நீங்கள் பல்லியை அடிக்கடி பார்க்கிறீர்கள் என்றால் முன்னோர்களின் ஆசி உங்களுக்கு உள்ளது என்று அர்த்தம்.
சில கோயில்களில் மரத்தை சுற்றி பலர் நின்று கொண்டு எதையோ கைகாட்டி பார்ப்பதை பார்த்திருப்போம். அது வேறு எதுவும் அல்ல, கோயில்களில் உள்ள விருச்ச மரங்களில் பல்லியை பார்ப்பது தேவர்களை பார்ப்பதற்கு சமம். அதேபோல் வீட்டின் நிலைவாசலில் பல்லியைப் பார்ப்பதும் மிகவும் விசேஷமான ஒன்று.
பல்லி வீட்டில் இருப்பதினால் பயப்பட தேவையில்லை. அது அனைத்தும் நல்ல சகுனம் தான். நமக்கு நன்மையை மட்டும் தான் அளிக்கும். அது சில நேரம் சத்தம் எழுப்பலாம் அதுவுமே நல்ல விஷயம்தான். அந்த சத்தம் எந்த இடத்தில் இருந்து வருகிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அடிக்கடி பல்லி சத்தம் எழுப்புகிறது என்பதைக் கூட நல்ல விஷயமாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இனிமேல் உங்கள் வீட்டில் பல்லியை பார்த்தால் அதனை அடித்து விரட்டாதீர்கள்.

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...