Monday, December 4, 2023

ஸ்ரீ பைரவர் வாகனம் :ஏன் நாய் வாகனம் ?


பைரவருக்கு ஏன் நாய் வாகனம் ? எமபயமற்ற யோகசித்தி நாம் பெற வேண்டும் என்று உணர்த்துவதே நாய்களின் தோற்றப் படைப்பாகும்.ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை
ஸ்ரீ பைரவர் வாகனம் :

சோமாசி மாற நாயனார் செய்த யாகத்திற்கு சிவன் நான்கு நாய்களை அழைத்து வந்தார் !அந்த நான்கு நாய்களும் நான்கு வேதங்களாகும் .சிவ அம்சமான பைரவருக்கு நாய் வாகனமும் காவல் தெய்வங்களுக்கு "வேட்டை நாய் "வாகனமும் உள்ளன . எவ்வளவு தான் அடித்தாலும் நாய் தன்னை வளர்த்தவனை விட்டு பிரிவதில்லை அதே சமயம் தன எஜமானனை தாக்க வந்தவனை தீங்கு நினைப்பவனை உணரும் சக்தியும் கொண்டு துன்பம் நேர்ந்தால் மிரட்டவும் மீண்டும் எதிரிக்கு அச்சமும் தந்து சமயத்தில் அவனுக்கு தாக்குதலும் பயங்கரமாக இருக்கும் மனிதன் நன்றி உள்ளவனாகவும் அதே சமயம் பிறருக்கு துன்பம் வரும் நேரத்தில் அவர்களுக்கு பாதுகாப்பளிப்பவனாகவும் இருக்க வேண்டும் என்று கருதியே பைரவர் சாமிக்கும் காவல் தெய்வங்களுக்கும் வேட்டை நாய் வாகனமாக தரப்பட்டுள்ளது குழந்தை இல்லாதவர்கள் சிறிய நாய் பொம்மை வாங்கி வைத்து பைரவரை குழந்தை வரம் வேண்டி பிரார்த்தித்து பைரவரிடம் வேண்டிக்கொள்வதுண்டு

திருமாலை எட்டு இடங்களில் அவரின் உக்கிரத்தை தணிக்க உடலை 8 இடங் களில் ஸ்ரீ பைரவர் பிய்த்து எறிந்தார். இந்த எட்டு பிரிவும் எட்டு நாய்களாக வேதங்களாக மாறி பைரவரை வழிபடுவதாக உள்ளது.
நாய் நன்றி உள்ள பிராணி யாகும். நாய் ஒரு காவல் தெய்வமாகும். எமன் வரும் திக்கை முதன் முதலில் உணரும் சக்தி நாய்க்கு மட்டுமே உள்ளது. அதனால் தான் மனிதனின் உயிருக்கு பங்கம் விளைவிக்கும் கொள்ளையர்களையும், திருடர்களையும், அன்னியர்களையும் இரவு காலத்தில் அடையாளம் கண்டு கூறும் சக்தி நாய்க்கு மட்டுமே உள்ளது.

துப்பறியும் துறையிலும், கொலை, கொள்ளை குற்றங் களை கண்டுபிடிக்க நாய் பயன்படுத்துகின்றனர். வீட்டிற்கு காவலாக நாயை வளர்க்கின்றோம். எமபயமற்ற யோகசித்தி நாம் பெற வேண்டும் என்று

உணர்த்து வதே நாய்களின் தோற்றப் படைப்பாகும்.

ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி வேணும் வைரவமூர்த்தி துணை
அந்தகாசூரன் என்ற ஒரு அரக்கன் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

தாருகாபுரத்தை எரித்த அக்னி சிவனின் நெஞ்சில் சிறு குழந்தையாக இருந்தது. அதைச் சக்தி தேவி வளர்த்து வந்தாள்.

தேவர்களின் துயர் துடைக்க அக்னி குஞ்சுக்கு சிவன் ஆணையிட்டார். அதன் விஸ்வருபம் தான் பைரவ பெருமான.

பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்றும் பொருள் கூறப்படுகிறது.

படைத்தல், காத்தல், அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து லட்சக்கணக்கான உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது.

படைத்தல் தொழிலை உடுக்கையும், காத்தல் தொழிலைக் கையில் உள்ள கபாலமும், அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும்.

இந்த கடவுளே அனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவரக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகைக் காக்கிறார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராகப் பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார்.

இவருக்குத் தகுந்த பூஜைகள் செய்தால் மட்டுமே திருப்தியடைந்து நம்மை ஆபத்துகளிலிருந்து  காப்பாற்றுவார்.

அந்தகாரத்தை நீக்கி உலகிற்கு ஒளியைக் கொடுப்பவர் ஸ்ரீ பைரவரே. திரிசூலத்தை மனக்கண்ணினால் எண்ணினாலே போதும். ஸ்ரீ பைரவர் உடன் வந்து அருள் செய்வார்.

பைரவரின் வாகனம் நாய் - இதுவே நான்கு வேத வடிவமாகும்.

பைரவ வழிபாட்டிற்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி, தேய்பிறை சஷ்டி, மாத  பரணி நட்சத்திரம் மற்றும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மிகவும் ஆற்றல் அளிக்கும் நாட்களாகும்.

பைரவருக்குண்டான பொது காயத்ரி

சுவாநத் வஜாய வித்மஹே

சூலஹஸ்தாய தீமஹி

தந்தோ பைரவ பிரசோதயாத்

பைரவரின் காயத்ரியை அஷ்டமி தினத்தில் சொல்லி வரலாம். அருகில் இருக்கும் ஆலயத்துக்குச் சென்று பைரவரை வழிபடலாம்.

நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.

வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை  மலர்களால் அஷ்டோத்திரமோ, சகஸ்ரநாமமோ அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.

இழந்த சொத்தைத் திரும்பப்பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகைச் சிறு மூட்டையாகக்கட்டி நெய் அல்லது நல்லெண்ணெய் இட்டு தீபம் ஏற்றுவது பைரவ  தீபமாகும்.

சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.

திருமணத்தடை நீங்க  ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.

பகைபயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்து வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 அஷ்டமிகளில் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...