Saturday, December 30, 2023

வான்மீகிக்கு தரிசனம் அளித்த இறைவன்



*வான்மீகிக்கு தரிசனம் அளித்த இறைவன்*

வடமொழியில் வன்மீகம் என்றால் கரையான் புற்று என்று பொருள்.
உமையொரு பாகனும் அப்படியே தந்தருளினார். அதன்படியே இத்தலம் திருவான்மியூர் என்றாயிற்று.
வடமொழியில் வன்மீகம் என்றால் கரையான் புற்று என்று பொருள்.

ராமாயணத்தை இயற்றிய வான்மீகி முனிவர் முதலில் வேடனாக இருந்தவர்.

தனக்கு உபதேசிக்கப்பட்ட ராம நாமத்தை தன்னை கரையான் புற்று மூடி மறைக்கும் வரை உறுதியுடன் ஜெபித்தார்.

அதனாலேயே அவரை வான்மீகி என்றழைத்தனர்.

வான்மீகி முனிவர் ஆயிரம் ஆண்டுகள் தவமியற்றினார்.

ஆதிகாவியமாகிய ராமாயணத்தையும் இயற்றினார்.

அக்காரணங்களால் தாமும் அமரத்துவம் பெற்றதை எண்ணி வான்மீகர் சற்றே கர்வம் கொண்டார்.

அச்சமயத்தில் அவரைக் காண அழியா வரம் பெற்ற சிரஞ்சீவியான மார்க்கண்டேயர் வந்தார்.

சிவபக்தரான மார்க்கண்டேயர் வான்மீகியிடம், "வான்மீகரே, அமர்த்துவம் எய்த ஆயிரம் ஆண்டுகள் தவம் எதற்கு? ஒருநாள் ஒரு பொழுது சிவபூஜை செய்தால் போதுமே!" என்றார்.

ராம பக்தரான வான்மீகர் அதனை கேட்டு சினம் கொள்ளவில்லை. தாமும் சிவதரிசனம் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டார்.

அதற்கான வழியை மார்க்கண்டேயரும் அவரிடத்தில் தாங்கள் தென்னகத்து செல்லும் பொழுது ஓரிடத்தில் நான் இங்கு இருக்கிறேன் என்று அசிரீரி கேட்கும்.

அந்த இடத்தில் தவமியற்றினால் விரைவில் சிவதரிசனம் கிடைக்கும் என்றார்.

அதன்படியே தென்னகம் வந்த வான்மீகிக்கு நான் இங்கு இருக்கிறேன் என உணர்த்தி இறைவன் அருள்பாலித்த திருத்தலம் தான் திருவான்மியூர்.

இத்தலத்தில் இறை தரிசனம் பெற்ற வான்மீகி தான் தரிசனம் பெற்ற கடற்கரை தலம் எனது பெயராலேயே அழைக்கப்பட வேண்டும்.

சிவபெருமானின் சடையில் உள்ள கங்கையின் ஒரு பகுதி அங்கு தீர்த்தமாக தங்க வேண்டும்.

ஈசன் தன் தாண்டவக் கோலங்களை தான் (வான்மீகர்) காணும்படி ஆடியருள வேண்டும் என சிவபெருமானிடம் மூன்று வரங்கள் கேட்டார்.

உமையொரு பாகனும் அப்படியே தந்தருளினார். அதன்படியே இத்தலம் திருவான்மியூர் என்றாயிற்று.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...