நெற்றியில் குங்குமம் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!
நெற்றியில் குங்குமம் வைக்கும் பெண்களை பார்ப்பது என்பது, தற்போது அறிதாகவே இருக்கிறது.
குங்குமம் வைப்பதன் மகிமை குறித்து தெரியாதவர்கள் தான், ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள்.
குங்குமம் வைத்துக் கொள்வதால் ஏற்படும் பலன்களை பார்ப்பதற்கு முன், குங்குமம் எப்படி தயாராகிறது என்பதை பார்ப்போம்.
படிகாரம், சுண்ணாம்பு, தண்ணீர், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்துதான் குங்குமம் செய்ய வேண்டும்.
இதில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இரும்புச்சத்தாக மாறிவிடும்.
படிகாரம், கிருமி நாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது.
தொற்று நோய் கிருமிகளும் நெருங்காது. மூளைக்கும், உடலின் பிற பகுதிகளுக்கும் செல்லும் நரம்புகளுக்கு நெற்றி வகிட்டில் குங்குமம் இடுவதால் அபாரமான சக்தி கிடைக்கிறது.
திருமணமான பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள்.
அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு ஷேமத்தைக் கொடுக்கும்.
திருமணமான பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமஹா லட்சுமியின் இருப்பிடம் பெண்களின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.
குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது மிக மிக கடினம்.
பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அரக்கு நிற குங்குமம் லஷ்மி நாராயணனை ஒரு சேரக் குறிப்பதாகும்.
தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் வைப்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.
குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும்.
குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.
குங்குமத்தை நெற்றியில் வைப்பதால், நெற்றியின் புருவத்தில் உள்ள நுண்ணிய பகுதியில், நம் உடலில் உள்ள மின்காந்த சக்திகள் அதிகமாக வெளிப்படுகிறது.
அந்த சக்தியானது, நம் உடலில் உஷ்ணம் காரணமாக ஏற்படும் தலைக்கனம் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளை தடுத்து, உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மேலும் இதனால் நம் உடலின் மனோசக்தி அதிகரித்து, நம்முடைய முகம் பிரகாசமாக இருக்க உதவுகிறது.
சுமங்கலி பெண்களுக்கு குங்குமம் வைக்க சிறந்த திசை எவை என கூறப்படுகிறது.
மங்கலத்தின் அடையாளமாக விளங்கும் குங்குமத்தை சுமங்கலி பெண்கள், கிழக்கு நோக்கி நின்று கொண்டு
ஸ்ரீம் ஸ்ரீயை நம; ஸம் சுபம் பூயாத்,
எனும் லட்சுமி மந்திரத்தை கூறி, தன்னுடைய புருவ மத்தியில்
குங்குமத்தை வைக்க வேண்டும்.
இதனால் பெண்களின் வாழ்க்கையில் லஷ்மி கடாஷம் உண்டாகி, திருஷ்டி தோஷம் நீங்கும்.
நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு சூரிய நமஸ்காரம் செய்தால், தனிப்பலன் கிடைக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.
காரணம் சூரியனின் கதிர்கள் நெற்றியில் இட்டுள்ள குங்குமத்தின் மீது படும்போது குங்குமத்துடன் சேர்க்கப்படும் படிகாரம், சுண்ணாம்பு, தண்ணீர், மஞ்சள் மற்றும் விட்டமின் டி அல்ட்ரா கதிர்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து காந்த சக்தியை உருவாக்குகின்றன.
ஒரு 40 வருடங்களுக்கு முன்பு ஆண்களும் பெண்களும் பெரிய பதவியில் இருப்பவர்கள் மற்றும் அவ்வளவு ஏன் மிராசுதார் கூட நெற்றியில் குங்குமம் பெரிதாக வைத்து கொள்ளும் பழக்கம் இருந்தது.
ஏன் இன்றும் கூட சிலர் நெற்றியில் குங்குமம் பெரியதாக இட்டு கொள்கின்றனர்.
பெருமாள் சிவன் கோவிலில் குங்குமம் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல கூடாது.
அப்படி செய்தால் மஹாலக்ஷ்மியின் அருள் உங்களுக்கு கிடைக்காது.
அதேபோல் குங்குமம் அரக்கு நிறத்தில் காணப்படும் குங்குமமே மிகவும் சக்தி வாய்ந்தது.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா இளங்கோவன்
நெல்லிக்குப்பம்
No comments:
Post a Comment