Wednesday, December 6, 2023

உவரி ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி_போற்றி..! #ஸ்ரீபிரம்மசக்தி_அம்பாள்_போற்றி..!



#உவரிநாயகி அருள்தரும் பிரம்மசக்தி அம்பாள் திருக்கோவில் - உவரி.!!!
தென்தமிழகத்தில் பிரம்மசக்தி அம்மனை வழிபடும் பக்தர்களின் விருப்பத்திற்கு இணங்க வாரந்தோறும் புதன்கிழமையில் பிரம்மசக்தி அம்மன் வழிபாடு தொடர்பான பதிவுகளை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நன்றி.!

பொதுவாக உவரியில் பிரம்மசக்தி அம்பாளிடம் வேண்டுதல்களை வைத்து, நிறைவேறியவுடன் #பச்சை_பட்டு எடுத்து வைத்து நேர்ச்சை செலுத்துகின்றனர்.

உகந்த நாள் - புதன்கிழமை.
உகந்த நிறம் - பச்சை.
உவரிநாயகி அருள்தரும் ஸ்ரீபிரம்மசக்தி அம்மனை பஞ்சமி, #புதன்கிழமை, தமிழ் மாத கடைசி வெள்ளி, விசாகம், புனர்பூச நட்சத்திர நாட்களில் கருவறை தீபத்தில்
நல்எண்ணெய் சேர்த்து, வெண்தாமரை மலர் சூட்டி வழிபட கல்வியில் சிறந்து
விளங்கலாம் என்கிறார்கள். இங்கு சுயம்புலிங்க சுவாமியை வழிபட்டு, ப்ரம்மசக்தி அம்மன் சந்நதியில் குழந்தைகளுக்கு அட்சரப்பியாசம்
(குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்வு)செய்து வழிபட்டால் குழந்தைகள்
மேதைகளாய் இருப்பர் என்கிறார்கள்.

இதற்கு நாம் விஜயதசமி வரை காத்திருக்க வேண்டியதில்லை, இத்திருக்கோயிலில் பஞ்சமி,புதன் கிழமை, புனர்பூச நாட்களில்
அட்சரப்பியாசம் செய்து வழிபடல் சிறப்பு. பிரம்மசக்தி அம்மன் அருகில்
சிவனணைந்த பெருமாள் சன்னதி உள்ளது. சிவபெருமானுடன் திருமால் பெண்வடிவம் கொண்டு அணைந்ததால் சிவனணைந்த பெருமாள் என்று பெயர். குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சிவனணைந்த பெருமாள் சந்நதியில் மரத்தொட்டில் கட்டி வழிபட குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிட்டும்
என்கிறார்கள். பேச்சியம்மன், இசக்கியம்மன், மாடசுவாமி சன்னதிகளும் உள்ளன. இங்கு இசக்கியம்மனுக்கு 'எண்ணெய் மஞ்சனம்' என்னும் கலவை சாற்றி வேண்டுதல் வழிபாடு செய்கிறார்கள்.

'எண்ணெய் மஞ்சனம்' என்பது
இசக்கியமனுக்கு நல்எண்ணெய் ,மஞ்சள் பொடி சாற்றி வழிபடுவது ஆகும். இங்கு
இசக்கியம்னுக்கு 'எண்ணெய் மஞ்சனம்' சாற்றித் தொடர்ந்து 8 தமிழ் மாத கடை
வெள்ளி நாட்களில் வழிபட குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கிறார்கள்.

                       இறைபணியில்....
    ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
          உவரி-திருநெல்வேலி மாவட்டம்.

உலகில் உள்ள அனைத்து பிரம்மசக்தி அம்மன் திருக்கோவில்களுக்கும் மூலக்கோவில் உவரி திருக்கோவில். 

உவரி ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமியை போன்ற வரலாற்று தலபுராணங்கள் உவரி பிரம்மசக்தி அம்மனுக்கும் உண்டு.

ஆதாரம் : 

Shodhganga கேரளப் பல்கலைக்கழக வரலாற்று ஆய்வுகள்.

தலைப்பு : "பிரமசக்தியம்மன் கதை ஒரு திறனாய்வு" - சிவ. விவேகானந்தன

                     இறைபணியில்...
  ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
        உவரி-திருநெல்வேலி மாவட்டம்.

#உவரி_ஆவணித்திருவிழா

ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமியை போன்ற வரலாற்று தலபுராணங்கள் உவரி பிரம்மசக்தி அம்மனுக்கும் உண்டு...!!

#உவரி_ஸ்ரீபழையஅம்பாள்

உவரி அருள்தரும் ஸ்ரீ பிரம்மசக்தி அம்பாள் கோவில் சிலை பழுதுபடவே அதை மாற்றி புதிய சிலை நிறுவினர். அப்போது பழைய சிலையை என்ன செய்வது என்று குழம்பும் போது பூசாரி ஒருவர் சிலையை கடலில் போடும்படி யோசனை கூறியுள்ளார். அவர் கூற்றுபடியே சிலையை கடலில் போட்டனர். அந்த பூசாரியின் மனைவி அச்சமயம் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அன்று இரவு அம்பாள் பூசாரியின் கனவில் சென்று, உனக்கு குழந்தை முடமாகப்பிறந்தால் அதை கடலில் எறிந்துவிடுவாயா என்றும், கோவில் நிர்வாகத்தாரின் மனைவி கனவில் சென்று "அம்மா என் கண் எரியுதே" "கண் எரியுதே" என்ற அழுகுரலையும் உணர்த்தியிருக்கிறாள் தேவி. பின்பு காலையில் விஷயம் மக்களுக்கு தெரியப்பட்டு, கடலில் எரிந்த சிலையை எடுத்து பரிகாரங்கள் செய்து மண்டபத்தின் இடப்பாகம் திட்டு அமைத்து #பழைய_அம்பாள் என வழிபட்டனர். இன்றும் நீங்கள் இந்த அம்பாளின் சிலைவடிவை பழைய அம்பாள் என்ற பெயரில் மண்டபத்தினுள் இடப்புறம் தரிசிக்கலாம்.

                       இறைபணியில்...
    ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை.
         

தலைப்பு : "பிரமசக்தியம்மன் கதை ஒரு திறனாய்வு"

#உவரிநாயகி_ஸ்ரீபிரம்மசக்தி_அம்பாள்

முற்காலத்தில் உவரி அருள்தரும் ஸ்ரீ பிரம்மசக்தி அம்பாள் கோவிலில் கொடைவிழாவின் போது பெண்கள் தெய்வமேறி ஆடுவர். கடைசியாக ஆடிய பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்து கைக்குழந்தையாக இருந்த நிலையில் அம்மன் அருள்வரவே அவர் அமர்ந்த நிலையில் ஆடினார். அச்சமயத்தில் அருகிலிருந்த ஒருவன் வேடிக்கையாய்  இப்போது இக்குழந்தை அழுதால் பால்கொடுப்பது யார் என்று கேலி செய்துள்ளான். ஆடிமுடிந்த நிலையில் அப்பெண் குழந்தையை அம்பாள் முன் கிடத்தி , "நீ உண்மையான தெய்வமாக இருந்தால் இனி எந்த பெண்ணின் மீதும் அருள்வரக்கூடாது" என்று கேட்டார். அன்று முதல் இருபத்தோறு ஆண்டுகள் எவரும் இக்கோவிலில் அருள்வந்து ஆடியதில்லை. 

இருபத்தோறு ஆண்டுகளுக்குப்பிறகு கைக்குழந்தையாய் இருந்த அப்பெண்ணிண் மகன் அருள்வந்து ஆடினார். அப்படி அவர் ஆடும்போது அக்னிசட்டி எடுத்து ஆடுவது வழக்கம். அப்போது தன் இடது கையில் உள்ள தீச்சட்டியை வலது கைக்கு மாற்றுவதில்லை. அக்னிசட்டியுடன் ஊரைவலம்வரும்போது,  மீனவர்களில் ஒருவன் இந்தசட்டி சூடாது இதுவெல்லாம் பொய் என கேலி செய்தான். அப்போது தான் முதல்முறை தெய்வமேறி ஆடுபவர் இடதுகையில் வைத்திருந்த தீச்சட்டியை வலது கைக்கு மாற்றி தன் கையை அம்மீனவனின் நெஞ்சில் வைத்து,  

 "சுடவே செய்யாது அப்பா" 

என்று கூற அவ்விடம் பொத்துக் கொப்பளித்தது. அவன்படும் துன்பம்,வேதனை தாங்க முடியாமல் அவன் குடும்பத்தினர் அவனை கோவிலில் வைத்து தலைவாழை இலையில் கிடத்தி மன்னிப்பு கேட்டு ஐந்து முடிச்சு காணிக்கை வைத்து அம்மனை வழிபட அக்கணமே அப்புண் வேதனை குறைந்து ஆறத்தொடங்கியது. அப்போது ஆடியவருக்குப்பின் வேறு எவரும் அவர் குடும்பத்தில் எவரும் ஆடியதில்லை..! பின்பு குருக்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தெய்வமேறி ஆடியுள்ளார்...! தற்போதுவரை குருக்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெய்வமேறி அருள்வாக்கு கூறி வருகின்றன

                      இறைபணியில்...
    ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை.
         உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

உலகத்தின் அன்னை உமையவள்,
அருள்தரும் #ஸ்ரீபிரம்மசக்தி_அம்பாள்
அருள்மிகு ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி திருக்கோவில், உவரி. #திசையன்விளை.

படைத்த உயிரினங்கள் அனைத்திற்கும் படியளக்கும் பரமசிவனாரின் பிள்ளைகள் அழைத்தால் வந்தேன் என அபயம் அளிக்கும் அன்னை ஸ்ரீபார்வதாதேவி அலைகடல் ஆர்பரிக்கும் உவரி தலத்தில் ஸ்ரீபிரம்மசக்தி அம்பாளாக கொலுவிருக்கிறாள்.

தாயானவள் ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலில் சுயம்பு நாதரின் அருகில் கொலுவிருக்கிறாள் மழலை வரம் அருள்வதில் வல்லவள் ஸ்ரீபிரம்மசக்தி அம்பாள்.

 #ஸ்ரீசுயம்புலிங்கசுவாமி_போற்றி..!
 #ஸ்ரீபிரம்மசக்தி_அம்பாள்_போற்றி..!

                      இறைபணியில்....
   ஸ்ரீ சுயம்புலிங்கசுவாமி பக்தர்பேரவை,
          உவரி - திருநெல்வேலி மாவட்டம்.

#உவரி_ஆவணித்திருவிழா.

ஓம்நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

யோக நிலையில் சிவன் எறும்பு ஈஸ்வரர்.

கீழக்கடம்பூர், மேலக்கடம்பூர், சிதம்பரம் நடராஜர் கோயில்கள் அருகில் உள்ளது.  யோக நிலையில் சிவன். அரிதிலும் அரிதான சிற்பம்.எந்த கோய...