Tuesday, December 5, 2023

சென்னை மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

சென்னை மாவட்டத்தின் மையப்பகுதியில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இத்தலத்து அம்பாள், ஆவுடையார் மீது நின்றபடி, சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். இவளது பாதத்தின் முன்பு ஸ்ரீசக்கரம் உள்ளது.

அம்மன் சன்னதிக்கு முன்புறம் நவக்கிரக மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர் அம்பாளின் நேரடி பார்வையில் உள்ளதால், உக்கிரம் குறைந்து காட்சியளிக்கிறார்.

சிவன் சன்னதிக்கு முன் வலப்புற தூணில் சிவ ஆஞ்சநேயர் இருக்கிறார். இவரை வணங்கினால் நாம் கண்ட நற்கனவுகள் பலிக்கும், தீய கனவுகளாக இருந்தால் அவை நம்மை அண்டாமல் விலகி ஓடும் என்பது நம்பிக்கை. எனவே இவரை 'கனவு ஆஞ்சநேயர்" என்று அழைக்கிறார்கள்.

பதிவு செய்ய கிளிக் செய்யுங்கள்...!
வேறென்ன சிறப்பு?

இங்குள்ள விநாயகர் வன்னிமர விநாயகர் ஆவார். திரிதள விமானம் மற்றும் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் இக்கோயில் அமைந்துள்ளது.

கோயிலுக்கு வெளியே அரசமரத்தின் அடியில் ஒரு லிங்கம் தனிச்சன்னதியில் உள்ளது. இவரது கருவறைக்குள் சென்று நாமாக பாலாபிஷேகம் செய்தும், வில்வ இலை அர்ச்சனை செய்தும் வழிபடலாம்.

இங்கு சப்தநாகத்தின் கீழ் சகோதர விநாயகர் தனிச்சன்னதியில் உள்ளார். இந்த விநாயகர் சிலையின் பின்புறம் ஒரே நாகத்தில் அண்ணனும், தம்பியும் முன்னும், பின்னுமாக காட்சியளிப்பது அபூர்வம்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

பங்குனியில் 18 நாள் பிரம்மோற்சவம், சனிப்பெயர்ச்சி, ஆடிப்பூரம், பங்குனி உத்திரம் ஆகியவை இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

திருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக இருக்கவும், சனி தோஷம் நீங்கவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் இத்தல மூலவருக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...