Friday, January 12, 2024
திருவாசகம் உருவானது எப்படி?யார் யாரெல்லாம் உருவாக காரணம்?
திருவாசகம் உருவானது எப்படி?யார் யாரெல்லாம் உருவாக காரணம்?சிவபெருமானும் குற்றவாளி ஆகிவிட்டாரா?புலம்பி அழுதது சிவபெருமானா?மணிவாசகரா?விவரத்தை அலசுவோம்.திருவாசகம் உருவாக மூன்றுபேர் மட்டுமே காரணம். சிவபெருமான், மணிவாசகர், தமிழன்னை இந்த மூவர்மட்டுமே திருவாசகம் உருவாக முழுமுதல் காரணம்.எப்படி உருவானது திருவாசகம்.பலப்பல பிறவி எடுத்து இறைவன் தமக்களித்த அத்துணை பிறவிகளையும் மகிழ்வோடு ஏற்று திளைத்த மணிவாசகர் சொர்கத்தைவிட மேலான சிவபுரம் இருப்பதையும் இறைவனால் பிறவி அறுபடசெய்தால் மட்டுமே அங்கே சென்றுசேர முடியும் என்பதை அறிந்துகொள்கிறார்.ஆனால் பயணம்செய்ய வழிதெரியாது.ஏங்குகிறார். அதற்கான வழியை எவரேனும் உரைக்க மாட்டார்களா என தேடலில் ஈடுபடுகிறார்.மணிவாசகர்மீது இரக்கம்கொண்ட தமிழன்னை சிவஞானபோதம் எனும் சிவபுரம் அடைவதற்கான வழிகாட்டுதலை சமைத்து எவரிடம் இதை மணிவாசகருக்கு கொடுத்து அனுப்புவது என்று சிந்தித்தபோது மிகநீண்ட திருவடிகளை கொண்ட சிவபெருமானை அந்த பணிக்கு நியமித்து சிவபெருமானே தாங்கள் மிகநீண்ட திருவடியை கொண்டவர்கள். அதனால் இந்த சிவஞானபோதத்தை பெற்றுகொண்டு ஒரடி எடுத்துவைத்தாலே மணிவாசகரை அடைந்துவிடுவீர்கள்.இதை அவருக்கு படைத்து அருளிவிட்டு கையோடு அவரையும் சிவபுரத்திற்கு அழைத்துவாருங்கள் என்பது தமிழன்னை சிவபெருமானுக்கு இட்டகட்டளை. பரம்பொருளும் அவ்வண்ணமே சிவஞானபோதம் அருளி மணிவாசகரை கையோடு சிவபுரம் அழைக்கின்றார். என்ன காரண்மோ மணிவாசகரை விடுத்து பெருமான் சிவபுரம் சென்றுவிடுகிறார். தமிழன்னைக்கு கோபம் தாங்கமுடியவில்லை.சிவபெருமானே தங்களிடம் என்ன சொல்லி அனுப்பினேன். தாங்கள் என்ன காரியம் செய்துவிட்டு வந்திருக்கிறீர். வந்தால் மணிவாசகரோடு சிவபுரம் வாருங்கள். இல்லாவிடில் அங்கேயே தங்கிவிடுங்கள் என்கிறார் தமிழன்னை.அதோடு மட்டுமன்றி தாங்கள் குற்றம் செய்ததால் மணிவாசகரை சிவஞானபோதத்தை அருளச்சொல்லி தாங்கள் தம் கரங்களால் அதை எழுதிக்கொண்டு வாருங்கள் என்கிறார். பரம்பொருளும் மணிவாசகரின் இதயத்தில் அமர்ந்து இமைப்பொழுதும் நீங்காது அமர்ந்து மணிவாசகரின் மனத்தை மாற்றி அவரிடம் சிவஞானபோதமாம் திருவாசகத்தை தமக்கு அருளச்சொல்லி அதை தம் கரங்களால் எழுதி மூல ஓலையை சிவபுரத்திற்கும் படி ஓலையை சிற்றம்பலத்திலும் விட்டுசெல்கிறார். அப்படி கிடைத்ததுதான் சிவபுரம் செல்ல நமக்கு வழிகாட்டியாய் விளங்கும் திருவாசகம். (நீள்கழல்கள் காட்டி=மிக நீண்ட திருவடிகளை எமக்கு காட்டி சிவஞானபோதத்தையும் அருளியவனே- மணிவாசகர்)திருவாசகத்தை படிப்போம்.சொல்லிய பொருளை அறிவோம்.சிவபுரம் செல்லும் தகுதியை பெறுவோம்.சிவாயநம.சிவசிவ.
Subscribe to:
Post Comments (Atom)
Followers
சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..
அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி....
-
கடலூர் மாவட்டம் ஆற்று திருவிழா அன்று விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள், சிறுகிழங்கு, கரும்பு உள்ளிட்ட பொருட்க...
-
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம்,திருக்கண்டேஸ்வரம் சிவன்கோயில் Thirukandeswaram sivan temple கடலூர்-பண்ருட்டி சாலையில் பத்தாவத...
-
பிறப்பு முதல் இறப்பு வரை மர்மம் நிறைந்த முக்கோண சிவாலயங்கள் (3 sivan temples secrets) எங்கே இருக்கு தெரியுமா ? உலகுக்கெல்லாம் ஒப...
No comments:
Post a Comment