Friday, January 5, 2024

*சைவம் என்பது என்ன*? *யார் சைவர்* ? *சிவாலயம் என்பது என்ன* ?

⚜️   *சைவம் என்பது என்ன*?   *யார் சைவர்*  ?
   *சிவாலயம் என்பது என்ன* 
 
சிவம் (தமிழ் ) ஷிவம் (சமஸ்கிருதம்) என்றால் *செம்மை மங்கலம்*  என்று பொருள்.  

*சிவப்பு செம்மை நிறம்  மங்கலம் ஆனந்தம்*.    கருப்பு அமங்கலம்  துக்கம்.   

*அவதாரம் பிறவி    அம்சம்  உள்ளிட்ட மாசு மலம் இல்லாத தூய செம்பொருளை  மங்கலப் பொருளை வழிபடுவதே சைவம்* . அதுவே *மெய்ஞானம்*. 
     
⚜️   *பிறப்பு என்னும் பேதைமை  நீங்கச் சிறப்பு என்னும் *செம்பொருள் காண்பது அறிவு*   (திருக்குறள்)

என்றார் திருவள்ளுவ வேதியர்.      

    🔴.   *செம்பொருள் துணிவே சீருடைக் கழலே*

 என்பது ஓங்கார வாசகரின் திருவாசகம்.  
              
*அப்பனாய்  அம்மையாய்  எல்லாம் கடந்து எல்லாமாக உள்ள  முழுமுதல் கடவுளை வழிபடும் சைவத் திரு நெறியில் பகவான் அம்மன்  ஆண் பெண் என்று சுட்டி அறியப்படும் உயிரின வழிபாடு இல்லை*.
     
  சிவச்  சின்னங்களான *விபூதியைக்  கீற்றாகவோ பட்டையாகவோ இட்டுக் கொள்வதாலோ  கொட்டையாகவோ மாலையாகவோ ருத்திராட்சம் அணிந்து கொள்வதாலோ  யாரும் சைவர் ஆக முடியாது* .                    

🔯 *வான் வழி ஊடு வந்தேனே*           
           
🕉️   சைவப் பெருமைத்  *தனி நாயகன் எம் இறை*      
   
🔴  *சைவம்  சிவனுடன் சம்பந்தம் ஆதல்*   
        
⚜️  *அம்மையாய் நின்ற பேர் நந்தி தானே*                               

⚜️  *நந்தியை அல்லால்  இறைவன் என்று என் மனம்   ஏத்தகில்லாவே*   (திருமூலர்)          
                                                                                                                       என மண்ணிலே பிறக்காமல்  *சிவலோகத்திலிருந்து    இறங்கி வந்த சிவ கண நாதரான* திருமூலர் வேத ஆகம சார நூலான திருமந்திரத்தில் *அப்பனும் அம்மையுமாக உள்ள *தனிப் பெருங்கடவுளான சிவபெருமானோடு தன்னை சம்பந்தப்படுத்திக்  கொண்டு பிறரை வழிபடாமல்  சிவ நினைவோடு ஈசனை மட்டுமே    வழிபடுவதே சைவம்*  என்று தெளிவுறுத்துகிறார்.   
         
 🔯 *மீளா அடிமை உமக்கே ஆளாய்ப் பிறரைப் பிறரை வேண்டாதே*                  

🌷. *உனக்கே ஆள் பலரையும் பனியாமே* (சுந்தரர்)
         
⚜️.  *மற்று அறியேன் பிற தெய்வம்*
( மாணிக்க வாசகர்)                         

  *🔴          அப்பா உன் அடி அலால் அரற்றாது என் நா*( சம்பந்தர்)          
              
⚜️   *ஒன்று  அவன்  தானே*   
 (திருமந்திரம்)  

⚜️    *ஒன்றே  என் உள்ளத்தின் உள் அடைத்தேன் ஒன்றே காண்*    (காரைக்கால் அம்மையார்)      
                           
⚜️.     *யாவர்க்கும் தந்தை தாய் தம்பிரான்*                  . 

 ⚜️   *தாதாய் மூவேழு உலகினுக்கும் தாயே* ( திருவாசகம்)            

         ⚜️    *அவர் தேவர் இவர் தேவர் என்று சொல்லி இரண்டாட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணிக் கவராதே தொழும் அடியார்* (அப்பர்).                                   

⚜️.       *புரி சடையார் தமை  அல்லால் சொல் பதங்கள்  வாய் திறவாத் தொண்டு நெறி தலை நின்ற    பெற்றியினில் மெய்யடிமை* (சேக்கிழார்)          

             என எல்லாம் கடந்த ஒரே *மெய்க் கடவுளான  தாயுமான  சிவ பரம்பொருளை  மட்டுமே போற்றி வழிபடுபவரே*  சைவர். 

அவதாரம் பிறப்பு வளர்ப்பு  இன்ப துன்பம்  ஆசை கோபம் உள்ள  *செத்துப் பிறக்கும் ஜீவ ராசிகளான பிரம்மன் விஷ்ணு சக்தி கணபதி  முருகன் ஐயப்பன் பைரவர் அந்த பகவான்  இந்த அம்மன்  நவ கிரகம் சப்த மாதர் ஆஞ்சனேயர் என்று  பலப் பல ஆண் பெண் தெய்வங்களோடு மண்ணுலகப் பிறவிகளோடு  சம்பந்தப்படுத்திக் கொண்டு அவர்களை வழிபடுபவர் சைவர் அல்லர்* .

 சிவாலயம் என்பது  பக்தியுடன் பூஜிப்பவருக்கு  *அப்பன் அம்மை  அம்மை யப்பன்  என்று பல்வேறு  வடிவங்களில்  அருள் பொழியும்  சிவ லிங்கம்* ,  
 *நந்தி* , 
*பலி  பீடம்* 
 ஆகியவையே என்று  வேத ஆகம சார நூலான திருமந்திரம் தெரிவிக்கிறது.          

       ⚜️     ஆய *பதிதான் அருள் சிவ லிங்கமாம்* 
               ஆய பசுவும் அடல் ஏறு என நிற்கும் 
              ஆய  பலி பீடம்  ஆகும் நல் பாசமாம் 
            ஆய *அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே*  

என்பது  திருமந்திரம்.               

        ⚜️.  *ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே* ( சுந்தரர்)   

என  *ஈஸ்வரன் கோயிலில் தலத்தில்  பிற வழிபாடு கூடாது*.  செத்துப் பிறக்கும்  ஆண் பெண் வழிபாடு கூடாது,  

*சிவ பரம்பொருள் கோயிலில்  சிவ  வடிவங்கள் மட்டுமே வழிபாட்டிற்கு உரியவை*  என்பதை தேவாரம் பதிகம் பதிகமாகக் காட்டுகிறது. 

 ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...