*அருள்மிகு பச்சைவண்ணப் பெருமாள் திருக்கோயில்...!!*
*🙏 தினம் ஒரு ஆலய தரிசனம் பகுதியில் இன்று அருள்மிகு பச்சைவண்ணப் பெருமாள் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...*
*இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?*
🙏 காஞ்சிபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து வசதி உள்ளது.
🙏 இக்கோயிலின் நுழைவு வாயில் கிழக்கு நோக்கியும், மூலவரின் மண்டப வாயில் தெற்கு நோக்கியும் அமைந்திருக்க, மூலவரான பச்சைவண்ணப் பெருமாள் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.
🙏 இக்கோயிலின் மூலவரான பச்சைவண்ணப் பெருமாள், மரகதமேனியனாக பச்சை நிறத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
🙏 மகாவிஷ்ணு இத்தலத்தில் ராமராக காட்சியளித்தவர் என்பதால் கருவறையில் தாயார்கள் இல்லை.
🙏 இவர் ஜோதிவடிவில் காட்சி தந்திருக்கிறார் என்பது இக்கோயிலின் நம்பிக்கை ஆகும்.
*வேறென்ன சிறப்பு?*
🙏 இக்கோயிலின் பிரகாரத்தில் அம்பாள் மரகதவல்லி தனிச்சன்னதியில் காட்சியளிக்கிறாள்.
🙏 இவர் யந்திர ரூபிணி, சீதை, மகாலட்சுமி ஆகிய மூன்று தாயார்களின் அம்சமாக இக்கோயிலில் அருள்பாலிக்கிறாள்.
🙏 பெரும்பாலும் தாயார் சன்னதியின் அருகில் அல்லது முன்புறம் அமைக்கப்படும் ஸ்ரீசக்கரபீடம், இங்கு தாயாரின் பீடத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது மிகவும் சிறப்பம்சமாகும்.
🙏 தாயாரின் சன்னதியில் நாகதீபம் வைக்கப்பட்டுள்ளது. இங்கு வைக்கப்பட்டுள்ள நாகதீபத்தை ஏற்றி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
🙏 இக்கோயிலின் பிரகாரத்தில் நாக சன்னதியும் அமைந்துள்ளது.
*என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?*
🙏 வைகுண்ட ஏகாதசி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம் ஆகியவை இங்கு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
*எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?*
🙏 திருமணத்தடை, புத்திர தோஷம், நாக தோஷம், புதன் தோஷம் ஆகியவை நீங்க இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர்.
*இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?*
🙏 இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு பச்சைநிற வஸ்திரம் சாற்றியும், துளசி அர்ச்சனை செய்தும், விசேஷ திருமஞ்சனம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
ஓம் நமசிவாய
படித்து பகிர்ந்தது
இரா .இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment