Sunday, January 28, 2024

ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம் இருப்பது ஆயிர லிங்கம்.


     
  ஆயிரம் முகம்,  ஆயிரம் கரம்,  ஆயிரம் திருவடி உடைய   பரமேஸ்வரனுக்கு *ஆயிர நாதர்* என்று திருநாமம்.  
*ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம் இருப்பது   ஆயிர லிங்கம்*.    
🌷  *ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும்*
         *ஆயிரம் பொன் வரை போலும் ஆயிரம் தோள் உடையானும்*                                                  
       *ஆயிரம்  ஞாயிறு போலும் ஆயிரம்  நீள் முடியானும்* 
           ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே                                                                                                                                                                                                                                                                                                                   

☸️  *பத்து நூறு அவன்* பைங்கண் வெள்ளேற்று அண்ணல்                                                   
           *பத்து நூறு அவன்  பல் சடை தோள் மிசை*    (திருநாவுக்கரசர்) 

என்று  ஆயிர நாதரைத் திருநாவுக்கரசர் துதிக்கிறார்.                                                                      
        
*பெண்ணும் ஆயிரம் உடையார்*(சம்பந்தர்)   

என *ஆயிரம் முகம் உடைய   தாயாக உள்ளவர்  ஆயிர அம்மை ஆயிர நாயகி*. 

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்,

 திருவுத்தர கோச மங்கை  மங்களேஸ்வரர் கோயில்,

 ராமேஸ்வரம் ராம நாதர் கோயில், 

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்  கோயில், 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்,

 திருவாலங்காடு ஆலங்காட்டீசர் கோயில்,  

திருவொற்றியூர் தியாக ராஜர் கோயில் 

காளையார் கோயில், 

வைதீஸ்வரன் கோயில் 

மற்றும் பெரும்பாலான பழங்காலத் திருக் கோயில்களில்  *தனிச் சந்நிதியிலோ பிரகாரத்திலோ* சஹஸ்ர லிங்கம் எனப்படும் *ஆயிர லிங்கம்*  உள்ளது.  

ஆயிரம்  தாமரை போன்று ஆயிரம் திருவடி திருமுகம் உடைய ஈசன் திருக்காட்சி அருளினால் *தாமரைக் காடே வந்தது போல் உள்ள சிவந்த பேரழகுத் திருமேனியை* 

 🛑  *செந்தாமரைக் காடு அனைய மேனி*  

என்று ஓங்கார வாசகர் கண்டு களிக்கிறார்.  

*பெண்ணும் ஆயிரம் உடையார்*

என்று *ஆயிர  அம்மை தாயுமானவரைத்* திரு ஞான சம்பந்தர் போற்றுகிறார்.
           
              *ஆயிரம் திருவடிகளும் தூக்கி வைத்து ஆடும் ஆயிர நடராஜர் புஜங்க லலித மூர்த்தியின்  திரு நடனத்தைத்* திருநாவுக்கரசரும் திரு மங்கை ஆழ்வாரும் போற்றுகின்றனர். 

*சைவப் பெருமக்களுக்கு இந்து சிகா மணிக்களுக்கு  திருமுறைச் செம்மல்களுக்கு  சத்குரு ஜகத்  குருமார்களுக்கு ஆதீனங்களுக்கு*  
*ஆயிர நாதரை ஆயிர அம்மையைத்   தெரியாது*. 

            *ஈசனைப் பற்றி கண்டவனும் கண்டபடி  கிறுக்கிய  நாஸ்திகக் கதைகளும்   நாஸ்திக வசனங்களும் கற்பனை வடிவங்களும் கற்பனை விழாக்களும்  கற்பனை அம்மன்களும் மட்டுமே தெரியும். 
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...