ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். இந்த திருநாள் அன்று அனைவரது வீட்டிலும் அந்த அறுவடையில் கிடைத்த புதிய அரிசியை சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் பொங்கல் செய்து சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். இந்த பொங்கல் அன்று கிராமங்களில் வெகுசிறப்பாக கொண்டாடி மகிழ்வார்கள். சரி இந்த பதிவில் பொங்கலை பற்றி சில வரிகள்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் கட்ட
தமிழரை போற்றும் நன்னாள், உழவரை போற்றும் பொன்னாள்.
உழைக்கும் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்கும், தமது நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் நாள் பொங்கல் திருநாள் ஆகும்.
பொங்கல் திருநாள் நான்கு நாட்கள் மிகவும் சிறப்பா கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப் பண்டிகை. இரண்டாம் நாள் தைப்பொங்கல். மூன்றாம் நாள் மாட்டு பொங்கல். நான்காம் நாள் காணும் பொங்கல்..
முதல் நாள் போகிப் பண்டிகை பொங்கல் திருநாளின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீட்டில் உள்ள பழைய பொருட்கள் மற்றும் தேவை இல்லாத பொருட்கள் அப்பிரபடுத்தப்பட்டு வீட்டினை சுத்தம் சேர்வார்கள்.
இரண்டாம் நாளான தை பொங்கல் அன்று புதுப்பானையில் பொங்கல் செய்து அதனை முதலில் கதிரவனுக்கு படைப்பார்கள். பின் குடும்பத்தினர் அனைவரும் உண்டு மகிழ்வார்கள்.
மூன்றாம் நாள் மாட்டு பொங்கல்: உழவு செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் திருநாள் ஆகும். அன்றைய நாளில் மாடுகளை கட்டும் தொழுவதை சுத்தம் செய்து கால்நடைகளை குளிப்பாட்டி அலங்காரம் செய்து அந்த தொழுவத்திலேயே பொங்கல் செய்து கொண்டாடுவார்கள்.
நான்காம் நாள் காணும் பொங்கல்: இந்த பண்டிகை அன்று உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியவர்களின் ஆசி பெறுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற பாரதியார் கூற்றுப்படி பொங்கல் திருநாள் கொண்டாடப்பட வேண்டும்.
உழவன் இயற்கைக்கும், நாம் உழவனாக்கும் நன்றி தெரிவிக்கும் நன்னாளே பொங்கல் திருநாள்.
தமிழர் தம் மண்ணின் பெருமைக்கும் அவர்தம் மரபுக்கும் புகழ் சேர்க்கும் அற்புத திருநாள் இது.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment