Tuesday, January 2, 2024

சிவன் மீது தீராக்காதல் கொண்டவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்கவும்.

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பர். குமரன் மட்டுமல்ல, குமரன் தந்தையும் இருக்கிறார் பல இடங்களில்.
இந்த மூன்று சிவன் கோயிலுக்கும் சில ஒற்றுமை உள்ளது. 

மூன்று மலைகளிலும் சிவன் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார்.

மூன்று மலைகளும் ஒரே நேர்கோட்டில் சுமார் 30 to 35 கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்திருக்கும்.

1. தொப்பேஷ்வரசுவாமி மலை ( கிழக்கு திசை ) 
2. ரங்கமலை ( மேற்கு திசை )
3. கொண்டரங்கி மலை ( மேற்கு திசை )

சிவன் மீது தீராக்காதல் கொண்டவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய இடம்.

1. தொப்பையசாமி மலை :

திண்டுக்கல் To கரூர் வழி கோவிலூர்  பஸ் ஸ்டாப் இறங்கி அங்கிருந்து R.கோம்பை செல்லும் பேருந்தில் ஏறி சின்னழகு நாயக்கனூரில் இறங்கி மலை அடிவாரம் சென்று மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். அனைத்து நாட்களிலும் தரிசனம் செய்யலாம்.

2. ரங்கமலை:

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் ரங்கமலை அமைந்துள்ளது. அனைத்து
 நாட்களிலும் தரிசனம் செய்யலாம்.

3. கொண்டரங்கி மலை :

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ள கீரனூரில் கிராமத்தில் உள்ளது கொண்டரங்கி மலை. அனைத்து நாட்களிலும் தரிசனம் செய்யலாம். காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை மட்டும் தான் குகை கோவில் திறந்திருக்கும் விசேஷ நாட்களில் மட்டும் மதியம் 2 மணி வரை திறந்திருக்கும். 

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..

_மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..._ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறை...