Wednesday, March 20, 2024

108 சங்காபிஷேக பூஜை விமரிசையாக நடந்தேறும். சுவாமிகளுக்கு சங்காபிஷேகம் செய்வதை தரிசிப்பது மகா புண்ணியம்.

சங்காபிஷேகம் செய்வதில் பல சாந்நித்தியங்களும் சடங்கு நியமங்களும் இருக்கின்றன. 108 சங்கு, 1008 சங்கு என அபிஷேகம் செய்வார்கள் சிவபெருமானுக்கு!
108 சங்கு கொண்டு அபிஷேகமோ 1008 சங்கு கொண்டு அபிஷேகமோ... அந்த சங்குகளை பனிரெண்டு ராசிகுண்டங்களாகப் பிரித்து வைத்துக்கொள்ளவேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். பனிரெண்டு ராசி குண்டங்களில் ஒன்பது ஒன்பது சங்குகளாக பிரித்து வைத்துக் கொள்ளவேண்டும்.ஆக, 108 சங்கு கொண்டு ராசி குண்டங்கள் வைக்கப்படுகின்றன.

அங்கே, எட்டுத் திசைகளைப் பார்த்தபடி அந்த சங்கில் இருந்து எட்டு சங்குகள் வைக்கவேண்டும். இப்படியாக வரிசையாகவும் ராசி குண்டங்களாகவும் வைக்கப்பட்டிருக்கும் சங்குகளுக்கு நடுவே, வலம்புரிச் சங்கையும் இடம்புரிச் சங்கையும் வைக்கவேண்டும்.

வலம்புரிச் சங்கு சிவபெருமான். இடம்புரிச் சங்கு பார்வதிதேவி என்கிறார்கள். இறைவன் ஒருவன், இறைவன் சிவன், இறைவனே ஆதி, இறைவனே அந்தம் என்பதாக சங்குகள் வைக்கப்படுகின்றன.

108 சங்குகளைக் கடந்து, எட்டுத் திசைக்கு எட்டு சங்குகள், வலம்புரி, இடம்புரிச் சங்குகள் என பத்து சங்குகள் சேர்த்து 118 சங்குகள் கொண்டும் அபிஷேக பூஜையைச் செய்யலாம்.

ஒவ்வொரு சங்கிலும் நீர் ஊற்ற வேண்டும். அந்த நீரில் பூக்களிட வேண்டும். மாவிலை, தர்ப்பை முதலானவற்றை மந்திர ஜபங்களுடன் வைக்கவேண்டும். சங்கு என்பது புனிதம். நீர் என்பது புனிதம். இரண்டையும் இணைத்து மந்திரம் சொல்லப்படும் போது சங்கும் நீரும் மிக மிகப் புனித நிலையை, ஓர் சாந்நித்தியத்தை அடைகின்றன. அப்படியான சாந்நித்தியம் குடிகொண்டிருக்கும் சங்கு கொண்டு அபிஷேகம் செய்யச் செய்ய, இறைவன் சிவபெருமான் குளிர்ந்து போகிறான். இந்த பூமியைக் குளிரச் செய்கிறான். நம்மை குளிர்வித்து அருளுகிறான் என்பது ஐதீகம்.

சங்காபிஷேக பூஜை விமரிசையாக நடந்தேறும். சுவாமிகளுக்கு சங்காபிஷேகம் செய்வதை தரிசிப்பது மகா புண்ணியம் என்றும் சகல தோஷங்களையும் போக்கும் என்றும் சந்தோஷங்களையும் நிம்மதியையும் தந்தருளும் முக்திப்பேறு கிடைக்கும் என்றும் சொல்லிச் சிலிர்க்கிறார்கள் சிவ பக்தர்கள்!
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது இரா இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

பிள்ளைப்பேறு இல்லாத அந்தண மாதர்கள் தியானித்து திருமாளிகைத்தேவர் அருளால் மகப்பேறு அடைந்தனர்.

திருவாவடுதுறை – நவகோடி சித்தர்புரம் என்ற பெயரை யுடைய திருத்தலம். இத்தலத்தில் போகநாதர் என்னும் சித்தர் ஞான யோக சாதனை செய்து மகிழ்ந்திருந்தார்...