Thursday, April 4, 2024

கோமுக தீர்த்தம் என்றால் என்ன?



*கோமுக தீர்த்தம் என்றால் என்ன?*
*சகல தோஷம் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ உதவும் கோமுக தீர்த்தம் ...!*


கோவில்களில் தெய்வங்களுக்கு அபிஷேக அரிய பல புண்ணிய திரவிய பொருட்களில் சில சாதாரணமாக கிடைக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.

அவற்றில் திருத்தலங்களில் தெய்வ கருவறையில் இருந்து வெளியேற கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கும் கோமுகமும் மகா தீர்த்தம் இந்த கோமதி ஒன்றாகும்...

🕉️

இந்த கோமுகத்திலிருந்து வரும் புனித தீர்த்தம் மிகுந்த சக்தி வாய்ந்தது.

கோவிலுக்கு செல்லும் போது பலர் இந்த கோமுகத்திலிருந்து கிடைக்கும் புனித நீரை தலையில் தெளித்து கொள்வதை நாம் பார்த்திருப்போம். 

சிலர் பிடித்து கொண்டு வீட்டிற்கும் எடுத்து செல்வர்...

இன்னும் சிலர் பார்ப்பதற்கு அசுத்தமாக தெரிவதால் என்னவென்றே தெரியாமல் முழித்து விட்டு சென்று விடுவர்.

கோவில் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் தெய்வ சிலைகளுக்கு செய்யப்படும் அபிஷேக பொருட்கள் இறைவனின் திருமேனி மீது பட்டு வழிந்து கருவறையிலிருந்து இந்த கோமுகம் வழியாக தான் வெளியேறும். 

இங்கு பற்பல கோடி தேவதைகள் குடி கொண்டிருப்பதாக வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

🕉️

பூமியில் ஓடும் கங்கை, யமுனை, சரஸ்வதி போன்ற புண்ணிய நதிகளின் பலன்களை விட இந்த கோமுக தீர்த்தம் மிகவும் மகிமை வாய்ந்தது...

இந்த புண்ணிய நதிகளே கோமுக தீர்த்தத்தை தெளித்து தூய்மை அடைவதாக சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


கோவிலுக்கு செல்லும் போது கோமுக நீரை தெளித்து கொள்வதால் நம்மிடம் இருக்கும் தீவினைகள் ஒழிந்து மனம் சுத்தமாகும் என்பது ஐதீகம். 

விசாக நட்சத்திரத்தன்று இந்த புனித தீர்த்தத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து கொண்டு சென்று வீட்டில், உங்கள் வியாபார ஸ்தலங்களில், பணம் வைக்கும் இடத்தில்,வாகனம் மற்றும் குடும்ப நபர்களின் மீதும் தெளித்து விட வேண்டும். 

இதனால் வளம் பெருகி செல்வ செழிப்பு உண்டாகும். 

பரணி, மகம் நட்சத்திரத்தன்று பிடித்து கொண்டு வரப்படும் கோமுக தீர்த்தத்திற்கு தனி சிறப்பு உண்டு. 

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்படியே இருக்கும்.இந்த இரண்டு நட்சத்திரங்களன்று தெளித்து கொள்வதால் விபத்துகள் ஏற்படாது. 



எம பயம் நீங்கும். 

கோமுக நீரை கொண்டு வந்து பூஜை அறையில் எப்போதும் இந்த நீரை வைத்திருக்கலாம். 

முக்கிய நட்சத்திரத்தன்று இதே போல் செய்வதால் சகல தோஷங்கள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.எந்த விதமான கண் திருஷ்டியும் நீங்கும். 

கெட்ட கனவுகள் வந்து பயமுறுத்தாது. 

இந்த தீர்த்தத்தை அருந்துவதால் தீராத பிணிகள் தீரும். 



கார்த்திகை நட்சத்திரத்தன்று கோமுக தீர்த்தத்தை தெளித்து கொள்வதால் பிரிந்த தம்பதியர் விரைவில் ஒன்று சேருவார்கள்.

ரோகிணி நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும். 

திருவாதிரை நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் ஆரோக்கியம் சீர்படும்.

புனர்பூசம் நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் திருமண தடை நீங்கும்.

பூசம் நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் பூர்வ ஜென்ம பாவங்கள் விலகும். 

அஸ்தம் நட்சத்திரத்தன்று தெளித்து கொள்வதால் உதவிகள் கிட்டும். 

கடன் பிரச்சனை தீரும்...

*மேலும் உங்கள் நல்லாசியுடன் எங்களது ஆன்மீக சேவை தொடரும்...*

*ஓம் நமச்சிவாய வாழ்க*

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...