Thursday, April 4, 2024

வீட்டில் தூபம் போடுவதால் ஏற்படும் பயன்கள்.

_வீட்டில் தூபம் போடுவதால் ஏற்படும் பயன்கள்!_

நம் வீட்டில் தூபம் போடுவதால் பல நன்மைகள் உண்டு. தூபம் போடுவதால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீங்கி வீட்டில் நல்ல பாசிடிவ் வைப்ரேஷன் ஏற்படும். இதை வீடு முழுவதும் போடுவதால் தேள், பூரான் போன்ற பூச்சிகள் வீட்டிற்குள் வராது. தூபத்தில் சில மூலிகைகள் சேர்க்கும்போது நமது உடலுக்கு நல்லதாகும். சளி, ஜலதோஷம் போன்ற பிரச்னைகளும் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது. சுமங்கலி பெண்கள் வீட்டில் விளக்கேற்றி தூபம் போட்டால், வீட்டில் உள்ள தரித்திரம் விலகி லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

சந்தன தூபம்: 

சந்தனத்தை அரைத்து நன்றாகப் பொடியாக எடுத்து வைத்துக்கொண்டு அதை தூபத்தில் போடும்போது வீட்டில் மன நிம்மதியும், வீடு முழுவதும் நறுமணமும் கிடைக்கும். இதன் மணத்திற்கு இறைவனே இறங்கி வந்துவிடுவார் என்று நம்பப்படுகிறது. நம் மனதில் நினைக்கும் காரியம் விரைவில் நடக்கும் என்று கூறப்படுகிறது.

சாம்பிராணி தூபம்: 

வீட்டில் சாம்பிராணி தூபம் போடுவது தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும், வீட்டில் செல்வம் அதிகரிக்கும். பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றை நீக்கும். கண் திருஷ்டியை விலகும். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் இந்த தூபம் போடலாம்.

ஜவ்வாது தூபம்: 

ஜவ்வாது தூபம் போடுவதால் வீட்டில் அதிஷ்டம் அதிகரிக்கும். நோய்கள் குறையும், துன்பங்கள் நீங்கிவிடும் என்று நம்பப்படுகிறது. ஐவ்வாது வாசனை கமகமவென்று இருக்கும். இதை வீடு முழுவதும் போடுவதால் செல்வம் அதிகரிக்கும்.

அகிலி தூபம்: 

அகிலி ஒருவித தாவரமாகும். அதனுடைய இலையையோ அல்லது பட்டையையோ காய வைத்து பயன்படுத்தும்போது நல்ல பயன்களை தரும். வீட்டில் உள்ள செல்வம் மென்மேலும் பெருகுவதோடு, குழந்தை பேறு இல்லாதவகளுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆன்மிக ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் பயன்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

துகிலி தூபம்: 

வீட்டில் துகிலி தூபம் போடும்போது குழந்தைகளின் ஆரோக்கியமும், ஆயுளும் வளரும் என்று நம்பப்படுகிறது.

துளசி தூபம்: 

துளசி பெருமாளுக்கு உரியதாகும். இது லட்சுமி கடாட்சம் கொண்டதால் செல்வ செழிப்பு கிட்டும். வாழ்க்கையில் வெற்றியடைய துளசி தூபம் சிறந்ததாகும். திருமணத்தடை, வீடு கட்டும் போது ஏற்படும் பிரச்னைகளை போக்கும்.

தூதுவளை தூபம்: 

தூதுவளை இலையை காய வைத்து பொடி செய்து அதில் தூபம் போடும்போது தெய்வ நிந்தனைகளிலிருந்தும், முன்னோர்களின் சாபத்திலிருந்தும் விடுபடலாம். வீட்டில் குலதெய்வம் வாசம் செய்யும்.

வெள்ளை குங்கிலியம்: 

வெள்ளை குங்கிலியத்தை கொண்டு தூபம் போட்டால் வீட்டில் உள்ள துர்சக்திகள் நீங்கும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

வெண்கடுகு தூபம்: 

வெண்கடுகு தூபம் போடுவதால் பகைமை குறையும், வீட்டிற்கு வெளியே தொழில் ரீதியாக இருக்கும் எதிரிகள் குறையும். வீட்டில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்னைகளும் நீங்கும்.

மருதாணி விதை தூபம்: 

மருதாணி விதை லட்சுமி கடாட்சம் கொண்டது. வீட்டில் உள்ள பில்லி, சூன்ய கோளாறுகள் நீக்கும். வீட்டில் எல்லா இடங்களிலும் பரவுவது போல தூபம் போடுவதால் தீய சக்திகள் நீங்கும்.

வேப்பம் பட்டை தூபம்: 

வேப்பம் பட்டையை பொடி செய்து வீடு முழுவதும் தூபம் போடுவதால் வீட்டில் உள்ள தரித்திரம் நீங்கி, லட்சுமி கடாட்சம் உண்டாகும். வீட்டில் கொசுக்கள் வராது.

நன்னாரி வேர் தூபம்: 

நன்னாரி வேர் தூபம் போடுவதால் ராஜ வசியம் கிடைக்கும். கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும், பிரிந்து இருப்பவர்கள் கூட ஒன்று சேருவார்கள் என்று கூறப்படுகிறது.

இங்கே சொல்லியிருக்கும் பொருட்கள் அனைத்துமே நாட்டு மருந்து கடைகளில் எளிதாகக் கிடைக்ககூடியதேயாகும். எனவே, இவற்றை வாங்கி வீட்டில் தூபம் போட்டு பயன் பெறுங்கள். தினமும் வீட்டில் தூபம் போடுவது நல்லதேயாகும். எனினும், தினமும் தூபம் போட்டால், அது சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. எனவே, வெள்ளி, செவ்வாய் போன்ற மங்களகரமான நாட்களில் தூபம் போடுவது உகந்ததாகும்.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...