Saturday, April 6, 2024

கோவளம் என்னும் ஊரில் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்.


              

 அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவளம் என்னும் ஊரில் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 74 கி.மீ தொலைவில் கோவளம் என்னும் ஊர் உள்ளது. கோவளத்தில் இருந்து நடந்து செல்லும் தொல தர்ப்பணம் செய்யாதவர்கள், பிதுர்தோஷ நிவர்த்திக்காக அமாவாசையன்று கடலில் நீராடி இத்தல மூலவரை வழிபடுகிறார்கள். புரட்டாசி மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டை செய்வது மேலும் சிறப்பு வாய்ந்ததாகும்.

திருமணமாகாத ஆண்கள், சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தீஸ்வரருக்கு தாலி அணிவித்து வேண்டிக்கொள்கின்றனர்.

இக்கோயிலில் பௌர்ணமி நாட்களில் சிவன் மற்றும் அம்பிகைக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறும்.

இக்கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் சமேத முத்துக்குமாரர் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

மூலவர் சன்னதியின் கோஷ்டத்தில் சத்தியநாராயணர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

*சிறப்பு.*

இத்தலத்து அம்பிகை பொன்னைப்போல மின்னுபவளாகவும், தம்மை வழிபடும் பக்தர்களுக்கு பொன் போன்ற வாழ்க்கையை தருபவளாகவும் அருளுவதால் கனகவல்லி (கனகம்-தங்கம்) என்ற பெயரில் அருளுகிறாள்.

திருமணத்தடை உள்ள பெண்கள், அம்பாள் சன்னதிக்குள் சென்று, தங்கள் கையாலேயே அம்பாளுக்கு தாலி அணிவிக்கும் வித்தியாசமான வழக்கம் இக்கோயிலில் உள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

பிரகாரத்தில் குபேர கணபதி வடக்கு (குபேரதிசை) நோக்கி காட்சியளிக்கிறார். மற்றொரு சன்னதியில் விஜய கணபதி இருக்கிறார்.

சிவன் சன்னதி கோஷ்டத்தில் சிவசக்தி கணபதி இருக்கிறார். விநாயகர் சதுர்த்தியன்று இம்மூவருக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது.

இங்குள்ள மண்டபத்தில் பூமாதேவியுடன் வெங்கடேசர், சூரியன், மகாலிங்கம், மகாகாளி, நாகாத்தம்மன், சுவர்ண பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

இக்கோயில் தூண்களில் ராமாயணத்தின் கதாபாத்திர சிற்பங்கள் மிக அழகாக வடிக்கப்பட்டுள்ளன.

*🛕திருவிழாக்கள்*

திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, பிரதோஷம் ஆகியவை இக்கோயிலில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

*பிரார்த்தனைகள்*

திருமணத்தடை நீங்கவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், தொழிலில் வெற்றியடைவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர்.

*🛕இத்தல நேர்த்திக்கடன்*

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் திருஆலவாய் மதுரை

*இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் - திருஆலவாய்( மதுரை)* *மதுரையிலுள்ள பஞ்சபூத தலங்களில் இது பிருத்வி (நிலம்).* பொதுவாக சிவ...