Monday, May 20, 2024

தஞ்சையில் 24 கருடசேவை நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மற்றும் அந்த ஊரைச் சுற்றிலும் சுமார் 24 பெருமாள் கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களில் இருந்து ஒரே இடத்தில் உத்ஸவப் பெருமாள் கருட சேவையில் எழுந்தருளும் வருடந்தோறும் வைகாசி திருவோண நட்சத்திர நாளில் விமரிசையாக நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ 24 பெருமாள் கருடசேவை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறுகிறது. 
தஞ்சையில் 24 கருடசேவை  
பராசர மகரிஷி எனும் முனிவர், தஞ்சைப் பகுதியில் அழகிய வனம் ஒன்றில் மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் இருந்தார். தேவலோகத்தில் இருந்து தாம் பெற்ற அமிர்தத்தை, அந்த வனத்தில் இருந்த திருக்குளம் ஒன்றில், ஊற்றினார். அந்தக் குளம் புனிதம் பெற்றது. விஷ்ணு அமிர்த புஷ்கரணி எனும் பெயர் பெற்றது.
இதேகாலகட்டத்தில், தஞ்சைப் பகுதியில் குறிப்பாக அந்த வனப் பகுதியில் திடீரெனப் பஞ்சம் நிலவியது. அங்கு வந்த தஞ்சகாசுரன் எனும் அரக்கன், பராசர மகரிஷியைத் துன்புறுத்தினான். அப்போது, மகாவிஷ்ணுவை வேண்டினார் மகரிஷி. அப்போது நரசிம்ம உருவெடுத்திருந்த திருமால், அசுரனை அழித்து, மகரிஷியையும் மக்களையும் காத்தருளினார் என்கிறது புராணம். அங்கே மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்க, நீலமேகப் பெருமாள் எனும் திருநாமத்துடன் திருமால் கோயில் கொண்டார் என்கிறது ஸ்தல புராணம்.
அதுமட்டுமா. பராசரின் வேண்டுகோளை ஏற்று, வைகாசி திருவோண நன்னாளில், மகாலக்ஷ்மியுடன் கருடவாகனத்தில் திருக்காட்சி தந்தருளினார். எனவே இங்கே கருடசேவை விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது

 கருடசேவை சிறப்புற நடைபெறுகிறது இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் நவநீத சேவையும்   உத்ஸவமும் நடக்கிறது.
காலையிலேயே தஞ்சை மற்றும் சுற்றுப் பகுதியில் உள்ள 24 கோயில்களில் உள்ள உத்ஸவப் பெருமாளும் வெண்ணாற்றங்கரையில் இருந்து புறப்பட்டு, வீதியுலா வந்தனர். நீலமேகப் பெருமாள், ஸ்ரீநரசிம்மர், மணிகுன்றப்பெருமாள், ஸ்ரீவேளூர் வரதராஜப்பெருமாள், ஸ்ரீகல்யாண வெங்கடேசர், கரந்தை ஸ்ரீயாதவக் கண்ணன், கொண்டிராஜபாளையம் ஸ்ரீயோக நரசிம்மர், ஸ்ரீகோதண்டராமர், கீழராஜவீதி வரதராஜ பெருமாள், தெற்கு ராஜவீதி ஸ்ரீகலியுக வெங்கடேச பெருமாள், அய்யங்கடைத் தெரு பஜார் ஸ்ரீராமசுவாமி, எல்லையம்மன் கோயில் தெரு ஸ்ரீஜனார்த்தனர், கோட்டை ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீகோவிந்தராஜ பெருமாள், மேல அலங்கம் ஸ்ரீரங்கநாதப் பெருமாள், மேலராஜவீதி ஸ்ரீவிஜயராமர், ஸ்ரீநவநீதகிருஷ்ணர், சகாநாயக்கன் தெரு ஸ்ரீபூலோகக் கிருஷ்ணர், மாச்சாவடி நவநீதகிருஷ்ணர், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், பள்ளியக்ரஹாரம் ஸ்ரீகோதண்டராம சுவாமி, சுக்காந்திடல் ஸ்ரீலக்ஷ்மி நாராயணபெருமாள், கரந்தை வாணியத் தெரு ஸ்ரீவெங்கடேசப் பெருமாள், கொல்லுப்பேட்டைத் தெரு ஸ்ரீவேணுகோபால சுவாமி ஆகிய கோயில்களில் இருந்து 24 பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளும். 
அன்று மாலை சிறப்பு தீபாராதனைகள் வீதியுலா வைபவங்கள் நடைபெறுகின்றன. இந்த கருடசேவையைத் தரிசித்தால் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்! 

படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...