சிவன் புன்னகைத்து "இவள் நம்மைப் போற்றும் அம்மை" என்றார். ஈசனே அம்மை என்றழைத்ததால் இவரைக் காரைக்கால் அம்மையார் என்று அழைத்தனர்.
காரைக்கால் அம்மையாரை அம்மா என்று சிவபெருமான் அழைத்தாரா பின்னர் பல தலங்களுக்கும் சென்று இறுதியில் கயிலையில் சிவ தரிசனம் செய்ய உத்தேசித்து புறப்பட்டுப் போய் கைலாயத்தில் காலால் நடக்காது தனது தலையால் நடந்து போக, இதைக் கண்ட பார்வதி தேவி புரியாமல் வினவ, சிவன் புன்னகைத்து "இவள் நம்மைப் போற்றும் அம்மை" என்றார். ஈசனே அம்மை என்றழைத்ததால் இவரைக் காரைக்கால் அம்மையார் என்று அழைத்தனர்.
தட்டிக் கேட்ட சுற்றத்தாருக்கு இவர் ஒரு சாதாரண மானிடப் பிறவி அல்ல, தெய்வம் என கூற, சுற்றத்தார் மரியாதை கலந்த பயத்துடன் செய்வதறியாது திகைத்து வெளியேறினர்.
மனம் வேதனையில் துடிக்க வாழ்வை வெறுத்து, தனது அழகு நீங்கி எலும்புக் கூடு போன்ற பேய் வடிவம் தந்து அருள் என சிவபெருமானை வேண்டி, அதன்படி உருவம் அமைந்தது.
பின்னர் பல தலங்களுக்கும் சென்று இறுதியில் கயிலையில் சிவ தரிசனம் செய்ய உத்தேசித்து புறப்பட்டுப் போய் கைலாயத்தில் காலால் நடக்காது தனது தலையால் நடந்து போக, இதைக் கண்ட பார்வதி தேவி புரியாமல் வினவ, சிவன் புன்னகைத்து "இவள் நம்மைப் போற்றும் அம்மை" என்றார்.
ஈசனே அம்மை என்றழைத்ததால் இவரைக் காரைக்கால் அம்மையார் என்று அழைத்தனர்.
இறைவனின் திருவடிகளில் அப்பா எனக் கூறி ஆனந்தக் கண்ணீர் விட்டு அமர்ந்தவர் தாம் எப்போதும் ஈசனின் திருவடிகளைப் பற்றியே இருக்க வேண்டும் என வேண்டி விண்ணப்பித்தார்.
இவர் பிரபஞ்ச வெளியின் துடிப்புகளை அதன் சாரங்களைக் கிரகிப்பவராக இருந்தார். பலருக்கும் இவ்வுணர்வு இருந்தாலும், இவரைப் போன்ற சிலரே அதை முழுதுமாய் உணர்ந்து அதற்கேற்றபடி செயல்பட்டுச் சிறப்பான ஓர் இடத்தைப் பிடிக்கன்றனர்.
திருப்பதிகம்: தொடர்ந்து, அம்மையார் இறைவனைக் காண கயிலாயம் சென்றார். கயிலாயம் இறைவன் உறையும் புனிதமான இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழான நிலையில் அம்மையார் சென்றார். இதனை பார்த்த சிவபெருமான், “அம்மையே வருக. அமர்க” என அழைத்து, “நீ வேண்டுவன கேள்” என்றார். அதற்கு அம்மையார், “பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் இறைவா உனையென்றும் மறவாமை வேண்டும். இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி, அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க” என்றார்.
அவ்வாறே அருளிய இறைவன், அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரப்பணித்து அங்கு இறைவன் தன் திருவடிக் கீழ் அம்மையார் என்றும் இருக்க அருளினார். அங்கு சென்ற அம்மையார், 11 பாடல்கள் கொண்ட திருப்பதிகம் பாடி இறைவனின் நிழலின் கீழ் வீற்றிருக்கலானார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அமர்ந்த நிலையில் அம்மையார்: அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் மட்டுமே அமர்ந்த நிலையில் காட்சித்தருவார். காரணம், பேய் உருவம் தாங்கிய அம்மையார், ‘அற்புத திருவந்தாதி’, ‘திருவிரட்டை மணிமாலை’ பாடியபடி சிவபெருமானின் இருப்பிடமான கயிலை மலையை அடைந்தார். அங்கு அம்மையாரை வரவேற்ற சிவபெருமான், அம்மையே அமர்க! என்று கூறினார். இறைவனே அம்மையாரை அமரச் சொல்லியதால் அறுபத்து மூன்று நாயன்மார்களில் அம்மையார் ஒருவர் மட்டுமே அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, இறைவன் மீது முதன் முதலாக பாடல் பாடிய முதல் பெண் புலவர் காரைக்கால் அம்மையார் ஒருவரே.
மாங்கனியின் மகிமை: முக்கனிகளுள் ஒன்றான மாங்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா நடைபெறுவது உலகிலேயே காரைக்காலில் மட்டும்தான். இங்குள்ள இறைவனுக்கு மாங்கனியுடன் பட்டுத்துணி சாற்றி வழிபடும் பக்தர்கள், ஸ்வாமி வீதி உலாவைத் தொடர்ந்து தங்களது வேண்டுதல்கள் நிறைவேறிய மகிழ்ச்சியில் மாங்கனிகளை வாரி இறைக்கின்றனர். இவ்வாறு இறைக்கப்படும் மாங்கனியை குழந்தைபேறு இல்லாத கணவனும், மனைவியும் உண்டால் அவர்களுக்கு அடுத்த ஆண்டே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அமுது படையலில் தயிர் சாதம்: சிறு வயது முதல் சிறந்த சிவ பக்தையாக விளங்கிய காரைக்கால் அம்மையாரின் பக்தியை சோதிக்கும் பொருட்டு, சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் அம்மையாரின் இல்லத்திற்கு உணவு வேண்டி சென்றார். சிவபெருமானின் பசித்த நிலையைக் கண்ட புனிதவதியார், கணவர் கொடுத்தனுப்பிய 2 மாங்கனிகளில் ஒன்றை, தயிர் சாதத்துடன் சிவபெருமானுக்கு பறிமாறினார். எனவே மாங்கனித் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில், பிச்சாண்டவர் வீதி உலா முடிந்து, அமுதுபடையல் நிகழ்ச்சி நடைபெறும்போது, பிச்சாண்டவருக்கு மாங்கனியுடன் தயிர்சாதத்தை அம்மையார் படைக்கும் நிகழ்வு நடைபெறும். அன்றைய தினம் ஸ்வாமி ஊர்வலத்தின்போது பக்தர்கள் பலரும், தயிர்சாதத்தை அன்னதானமாக வழங்குவர்.
உமையொருபாகனைத் துதித்து வேண்டிச் சிவபூத கணங்களில் நானும் ஒன்றானேன் என் மகிழ்ந்து தமக்குள் உண்டாகிய ஞானத்தினால், மனமுருகி, அற்புத திருவந்தாதியையும் இரட்டை மணி மாலையைப் பாடி அருளினார். இவை இரண்டுமே பதினோராம் திருமுறையைச் சேர்ந்தது என்பது சிறப்பு. அந்தாதி என்கின்ற இலக்கண முறை அறிமுகம் செய்யப்பட்டது இவரால்தான்.
இவர் நினைவாக மாங்கனி திருவிழா காரைக்காலில் வருடா வருடம் நடக்கிறது. இங்கு மாங்கனி இறைத்தல் விழா நடக்கிறது.. குழந்தை பாக்யம் இல்லாதவர்கள் இப்பழங்களைச் சாப்பிட நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை.
No comments:
Post a Comment