Monday, May 13, 2024

கோ பூஜையும் தேவலோகத்தின் காமதேனுவும்....



காமதேனு என்பது தேவ லோகத்தில் வசிக்கின்ற பசுவாகும். இந்து தொன்மவியல் அடிப்படையில் கேட்கின்ற பொருளை தருகின்ற சக்தி படைத்தாக இந்த காமதேனு உயிரினம் சித்தரிக்கப்படுகிறது. காமதேனுவை சுரபி என்ற பெயரிலிலும் அழைக்கின்றனர்.
அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடையும் போது பல்வேறு தெய்வங்கள் தோன்றின. கற்பக விருட்சம் போல கேட்டதை தருகின்ற காமதேனுவும் அப்போது தோன்றியது. காமதேனு பெண்ணின் தலையும், பசுவின் உடலும், மயில் தோகையும் இணைந்து தோற்றமளிக்கிறது. 

இந்த காமதேனு இந்திர உலகில் வசிப்பதாக நம்புகின்றார்கள். இதற்காக விஷ்வாமித்திர மாமுனிவர் முதற்கொண்டு சண்டைகள் இட்டதாக கதைகள் கூறுகின்றன.
இறைவன் வீதி உலா வருகையில் காமதேனுவின் வாகனங்களில் காட்சி தருகிறார். பெரும்பாலும் மரத்தினால் செய்யப்பட்ட வாகனமாக இருந்தாலும், தங்கம் வெள்ளியில் செய்த வாகனங்கள் சில கோவில்கள் உள்ளன. 

காமதேனுவை வணங்கினால் நியாயமாக நீங்கள் கேட்கக்கூடிய கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நடக்கும். இந்த காமதேனுவை வீட்டில் வைத்து வழிபாடு செய்வதால் உங்களுடைய செல்வநிலை உயரும். பணவரவு அதிகமாகும். பல நல்ல விஷயங்கள் நடக்கும்.

பசுவானவள் பரமேஸ்வரனுக்குத் தாயாகவும், வசுக்களுக்கு பெண்ணாகவும், ஆதித்யர்களுக்கு சகோதரியாகவும், நாபியில் அமிர்தத்தை வைத்துக் கொண்டவளாகவும், இருக்கிறாள். பசுவை அடிக்கவோ, விரட்டவோ கூடாது. பூஜிக்க வேண்டுமென வேதம் சொல்கிறது. தேவிபாகவதம், பிரும்ம வைவர்த்தம் போன்ற புராணங்கள் ஸுரபி உபாக்யானம் மிக அழகானது.
காமதேனுவுக்கு உகந்த ஸ்லோகத்தை கூறி கோபூஜை, பிரதட்சிணம் செய்தால் எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

பிரும்ம சிருஷ்டியில் உலகம் உய்ய முதலில் பசுவைப்படைத்து அதன் உடலில் பதினான்கு உலகையும் முப்பத்து முக்கோடி தேவர்களையும் இருக்கச் செய்தான். அதில் முதலில் வந்தவர்களான தர்மராஜனும் காலதேவனும்தான் முகத்தில் இருந்தனர். மற்றவர்கள் உடல் எங்கும் குடியேறினார்கள். 

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பற்றிய பதிவுகள்  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மதுரையில் இருந்து 74 கிலோமீட்டர் தொலைவில், ...